Saturday, December 29, 2007

உண்மையானவளே..!

கோவமான
உன் முகத்தை
பார்பதற்காகவே

என் ஆசைகள்
உனக்கு பிடிக்காத
செயல்களை தெரிந்து
வைத்திருக்கிறது

*
வாய்காரன் நான்
என்பதை தெரிந்தா

என்னில் உனக்கு
அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்

அன்றில் இருந்து நான்
யாரிடமும் வாய்
காட்டுவதே இல்லை

*
உன்னை சந்திக்க
கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்

கவனமாய் உன்னை
தேடிக் கொண்டிருக்கும்
என் மனசு

*
எல்லா
எழுத்துக்களையும்
வைத்து
கவிதை எழுதினாலும்

இன்னும் என்னால்
உனக்கு
பெயர்வைத்ததால்
கவிஞனான உன்
தந்தைபோல்

இரண்டு எழுத்தில்
அழகான கவிதை
எழுத முடியவில்லை

*
நாடு கிடைக்க
போராடுபவன்
போராளி என்றால்

நீ கிடைக்க
போரடும் நான்
காதலாளிதான்

*

என்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ


-யாழ்_அகத்தியன்

Friday, December 21, 2007

நீயே நிலா.. நிலாவே நீ!

வானத்தில் நீந்திக்
கொண்டிருக்கிறது நிலா
நடுங்கியபடியே
ரசித்துக் கொண்டிருக்கிறாய் நீ

*
நீ இல்லாத
பகல்கூட நிலவில்லாத
இரவுதான் எனக்கு

*
நிலாவை ரசிக்க வாசல் வந்தேன்
எனக்கு முன்னே வளர்பிறையாய் நீ
தேயத் தொடங்கினேன் நான்
எதை ரசிப்பது என்ற குளப்பத்தில்

*
நீ நிலாவை ரசிக்காமல்
தூங்கமாட்டாய்
என்பதில் பெருமை நிலாவுக்கு

நீ ரசித்த நிலாவை
வழியனுப்பும்வரை நான்
தூங்குவதில்லை என்பதில்
பெருமை எனக்கு

*
உனக்கு முன்னே
சிலர் குறுக்கே
போய்க்கொண்டிருந்தார்கள்

என்ன செய்வது நிலாவை
மறைக்கும் சொற்ப நேரத்தில்
சுகம் காணும் முகில்கள் அவர்கள்

*

இமைக்காது நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாய்
முகில்களிடம் கைகள் வாங்கி
முகம் மறைத்து வெக்கப்படுகிறது நிலா

*
நடக்கும் தூரத்தில்
நிலா இல்லை எனக்கு

ஆனாலும்
உன் கால்தடத்தில்
தேய்பிறையாய் நிலாவை
காண்கிறேன் நான்

*
அமாவாசை இரவிலும்
பெளர்ணமி நிலவாய்
என்றும் நீ எனக்கு

-யாழ்_அகத்தியன்

Thursday, December 20, 2007

புதுமையானவளே..!

தாயைத் தவறவிட்ட
குழந்தையின் கண்ணீரை
துடைத்துவிட்ட உன்
கைவிரலில் தவறவிட்டேன்
என்னை நான் உன்னிடம்

*
நீ நீயாக இருக்கும்
உன் பிடிவாதக்காகவே
நான் நானாக இல்லாமல்
நீயாக மாறலாம்

*
உன் இமைகள்
சேரும் அழகிலே
இரவாகலாம் நான்
விடியாமல் போனாலும்
பரவாயில்லை

*
உன்னை மறந்து
என்னால்
உறங்க முடியவில்லை

உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு

கனவில் நன்றி
சொல்வேன்

*
நீ என் கவிதைகளுக்கு
வாசகியாக இருந்ததற்கு
பதிலாய்

நீயும் கவிதை
எழுதியிருக்கலாம்

நீயாக மாறியதில்
இருந்து வாசிப்பதை
மட்டுமே
விரும்புகிறேன் நான்


-யாழ்_அகத்தியன்

Wednesday, December 19, 2007

உன் வாசகன் நான்!!!

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்

கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்


-யாழ்_அகத்தியன்

Saturday, December 15, 2007

சோலையானவளே...!

கூட வந்துவிட்டு
விடைபெறுகிறாய்
வலிக்கத் தொடங்குகிறது
என் கால்களும் மனசும்

*
இதழ் பிரியாமல்
புன்னகை செய்துவிட்டு
கடந்து செல்கிறாய்

மலரத்
தொடங்குகிறேன் நான்

*
தனிமையில் என்னை நானே
சுமந்து கொண்டிக்கிறேன்
பிணமாக நான்

*
உனக்கு பிடித்த
எழுத்தாளன் நான்

என்னையும்
பேனாவையும்
எழுத வைத்தே சாகடித்துக்
கொண்டிருக்கிறாய் நீ

*
உன்னால் வாசிக்கப்
படுகின்றன என் கவிதைகள்
கலைய தொடங்குகின்றன
என் சோகங்கள்


-யாழ்_அகத்தியன்

Monday, December 10, 2007

யாரும் எனக்கில்லை...!

உன்னோடு பேசி
சிரித்த நாட்கள்

உன் கைபிடித்து
திரிந்த நாட்கள்

ஏன்
உன் மடியில் எனை
மறந்து தூங்கிய
நேரங்கள்

இப்படியான என்
சந்தோசங்களை
எல்லாம்

காரமான சில வினாடி
பேச்சால் கரைத்துவிட்டாயே

பாவம் நான்
யாருமே எனக்கில்லை என்ற
உண்மையை எத்தனை பேரிடம்தான்
ஏமாந்து தெரிந்து கொள்வேன்.



-யாழ்_அகத்தியன்

நீ வாழ நான் பாடுவேன்...!

நீ ஒட்டிவிட்டு
எறிந்த பொட்டு நான்

யார் யாரோ
கால்களால்
மிதிக்கப் படுகிறேன்

*

என்னை நீ ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்

எனை வீரனாய்
நினைக்காமல்

நீவிளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று

*

ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது

கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்

உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது

*

அன்று
உனக்கும் சேர்த்து சுவாசித்தேன்
இன்று
உன்னவருக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன்

*

நீ வாழ்ந்தவீடு _ நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு சென்றுவிட்டாய்

இனி நீ திரும்பிவர
நினைத்தால் தயவு செய்து
தனியாக வந்துவிடாதே

நீ இல்லாமல் சாய்ந்து கிடக்கும் நான்
உடைந்து விழுந்துவிடுவேன்


-யாழ் அகத்தியன்

Sunday, December 9, 2007

காதல் செய்....!



காதலை

கண்களில் வைத்து

உறங்கி விடாதீர்கள்


இதயத்தில் வைத்து

எப்போதும் இயங்க

வையுங்கள்


*


மலிவான பொருள் கூட

விலைமதிப்பற்ற பொருளாவது

காதலர்கள் பரிமாறும் பரிசுப்

பொருள்களில் மட்டும்தான்


*


உன்னைப் பார்த்து

காதல் வரக் கூடாது

உன் காதலைக் கேட்டு

காதல் வர வேண்டும்


*


குழந்தைகளுக்கு

புன்னகை

அழகென்றால்


காதலர்களுக்கு

குழந்தைத்தனமே

அழகு


*

ஒரு பூவால்

இருவரை மலரவைக்க

முடியும் என்றால்


காதலர்கள் கரம் சேரும்

பூக்களால் மட்டும்தான்


*


காதலை பொழிந்து

கொண்டேயிருங்கள்


காதலித்தவள்(ர்) உங்களை

காயவைத்துக் கொண்டே

இருந்தாலும்


*


எந்த இழப்பும்

சந்தோசத்தை

கொடுப்பதில்லை


காதலிப்பவர்களிடம்

உங்களை நீங்கள் இழந்து

கொண்டிருப்பதைப் போல்


*


காதல் ஒரு அழகான மதம்

அதில் மூட நம்பிக்கையே

வேதம்


*


மொழிகளை

அழகாக்கிக்

கொண்டிருப்பவை


காதல் கவிதைகள்

மட்டும்தான்


*

எதுவெல்லாம் உன்

உரிமைகள் என்பதை

தெரிந்து

கொள்வதற்காகவாவது

காதல் செய்.



-யாழ்_அகத்தியன்

Saturday, December 8, 2007

எனக்கானவளே...!

எல்லாருக்கும்
பிடிச்ச
கவிஞனாக நான்

எனக்குப்
பிடிச்ச
கவிதையாக நீ

*

எனை வாசிக்கத்
தொடங்குகிறாய்

என் பிழைகளை
நீக்கத் தொடங்குகிறது
காதல்

*

நிலாவாகிறாய் நீ
வானமாகிறது காதல்

வானமாகிறாய் நீ
தேய்பிறையாகிறேன் நான்

*

நிலாவாய் வந்து
மறைகிறாய்

எனை காயவைக்க
உதிக்கிறது சூரியன்

*

தேயத் தேயஎ
ன்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் கவி நிலா நீ


-யாழ்_அகத்தியன்

Friday, December 7, 2007

எனதானவளே...!

உன்னை நான்
ஆசைப்படுவதை
யாரிடமும்
சொல்லிவிடாதே

நான் கதைக்காமல்
விட்டவர்கள் எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்

*

உன் மேலான என்
ஆசையெல்லாம்
ஒன்று சேர்ந்து

என் ஆசையில் ஒன்றான
என் கோவத்தை உன்னிடம்
காட்டவேண்டும் என்பதை
நிராசையாக்கிவிட்டது

*

விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்

*

உன் வீட்டில் நீ
வாயாடியாம்

பொய்சொல்கிறார்கள்

இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே

*

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது

உன் மேல் கோவிக்கும்
போதுதான் என் ஆசைகள்
எல்லாம் எழுந்து நிற்கின்றன


-யாழ்_அகத்தியன்

Thursday, December 6, 2007

உலகமானவளே...!

உன்னை நாளையும் சந்திக்கலாம்
என்ற சந்தோசத்தைவிட இன்றும்
உன்னைப் பிரிவதே கொடிது

*

நம் முதல் சந்திப்பை
பற்றி யாரிடமாவது பேச
நினைக்கும் போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது நம்
முதல் பிரிவு

*

ராஜ்மஹாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்

யாருமே காத்திராத
உன் வீடுதான்

என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது

*

எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்

நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?

*

உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்

அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா

என் கண்கள் சும்மாவிடுமா..?


-யாழ்_அகத்தியன்

Wednesday, December 5, 2007

காதலானவனே..!

நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக

யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே

*

நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக

நீ கொடுத்த
பூச்செடிதான்
என்னை மலரவைத்துக்
கொண்டிருக்கிறது

*

எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்

தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்

அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்

என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்

*

எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்

உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது

முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்

*

நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்

உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்

என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்



-யாழ்_அகத்தியன்

Tuesday, December 4, 2007

என் பாடல்……[07]

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா

எந்தன் உலகமே உனக்காக மாறிப்போனதே
உன்னைச் சுற்றியே எந்தன் நினைவு வாழுதே
என் இதயமோ எப்போதுமே உன் பெயர் சொல்லி
துடிக்கிதே இது என்னடி புது வாழ்க்கை வாழ்கிறேன்

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா

உண்மை சொன்னால் என்ன கண்ணே
என்னையும் சிலர் வாசித்து போனதுண்டடி அடி
அடி யாருமே யாருமே எனை வாங்கி போனதில்லடி
எந்தன் சொந்தமே நீதானே உனக்கான கவி நானே
எனக்கான வாசகி நீயே படைத்திடவா நான்
படித்திட வா நீ

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா


-யாழ்_அகத்தியன்

Monday, December 3, 2007

உனக்காகவே நான்...!

இரவு வந்தும்
விடியப் போகிறது
இன்னும்
தூங்கவில்லை நான்

உணவுகள் படைக்கப்
பட்டிருக்கிறது
இருந்தும்
பசிப்பதற்காய் விரதம்
இருக்கிறேன் நான்

குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள் கடந்தபோதும்
மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே நான்

என்ன செய்தாய் எனை
உன்னை காதலித்ததை
மட்டும்தான் நான் செய்தேன்

யாருக்கும் செவி சாய்க்காது
எப்படியோ இருந்த என்னை

இருந்தால் இப்படித்தான்
இருக்க வேண்டும்
என என்னை செதுக்கிக்
கொண்டிருக்கிறாயே

அன்பே
இப்போதாவது நீ
கிடைத்திருக்கிறாய்
என ஒரு பக்கத்தில்
நான் சந்தோசப்பட்டாலும்

மறுபக்கத்தில் உன் காதல்
இதுவரை நீ எங்கிருந்தாய்
என என்னைக் கவலைப்பட
வைத்துக் கொண்டுதான்
இருக்கிறது


-யாழ்_அகத்தியன்

Friday, November 30, 2007

நிலையானவளே...!

என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்

உன்னைக் கண்டதும்
ஓடிப்போய் உன்னைத்
தொட்டுவிட்டு திரும்பி
வராததுதான்

*
கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள் நுழைந்து
விடுகிறாய் நீ

விடை பெற்றுப்
போகும் கடைசி நாள்
மாணவன் போல்

வீடு செல்ல
மனமில்லாமல் நான்

*

நம் காதலுக்கு முதல்
எதிரி நேரம்தான்

பார்
நாம் சேர்ந்திருக்கும் போது
மட்டும்தான் போட்டி போட்டு
ஓடுகிறது

*

உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா

ஒரு நிமிடம் நீ
இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்

சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்

*

என் கைகளுக்கு இதுவும்
தேவை இன்னும் தேவை

என்னை எதுவும் கேக்காமலே
உன்னை அணைத்து பழகிவிட்டு

நீ தூரம் இருக்கிறாய் என்று
தெரியாமல் தேடிக் களைக்கிறது


-யாழ்_அகத்தியன்

Monday, November 26, 2007

என் பாடல்......[06]

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே

எனக்கென எனக்கென உன்னைப் படைக்க
அடி உனக்கு முன் உனக்கு முன் நான்
பிறந்தேனே உந்தன் விழிப் பார்வைக்குள்
நான் வாழ அடி எந்தன் உலகமே நீயென
வந்தாயோ

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

அடி உந்தன் வரவே இல்லையென்றால் அட
எந்தன் வாழ்வுக்கேது பகலே அடி நீயும்
என்னைக் கழித்திருந்தால் என்னை யாரு
யாரு சிலை செய்வார்

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

அடி எந்தன் கவிதை யார் தந்தது இதுவரை
யாருக்கும் சொன்னதில்லையே எல்லாமே
எல்லாமே நீ தந்தது உந்தன் பெயரே
உந்தன் பெயரே என் முதல் கவியானதிங்கே

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

இன்னும் இன்னும் நான் என்ன சொல்ல
உந்தன் பக்தன் நான் தானே வேறு என்ன
என்னைக் கொஞ்சம் என்னைக் கொஞ்சம்
நம்பிவிடு நா உனக்கென உனக்கென
வாழவிடு உந்தன் மடியே போதுமே
நான் தூங்க

அடியே என் சொர்கமே நீதானே
என் நிலவே என்னை மட்டும்
காதல் செய்துவிடு

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....


-யாழ்_அகத்தியன்

Saturday, November 24, 2007

அருமையானவளே...!

நீ
என்னைத் தேடி
வருகிறாய்

நான்
நீயாக மாறி
என்னைத் தேடுகிறேன்

*

நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்

தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்

*
நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்

என்பதை
ரசிப்பதற்காகவே

நான் தொலைந்து
போகலாம்

*
நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா

என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்

கைகூப்பி
வணக்கம் சொல்லி

*
உன்
தாவணிக்கு
எப்போது

என் தாயின்
கைவிரல்கள்
முளைத்தது

தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே


-யாழ்_அகத்தியன்

Friday, November 23, 2007

என் பாடல்......[05]

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே

சொந்தமென யாருமில்ல
சொல்லிக் கொள்ள ஏதுமில்ல
என் சொர்கமே உன்னைவிட
ஏது வில(விலை)

பட்டப்படிப்பு படித்ததில்ல
பட்டதெல்லாம் அனுபவமே
பாவியாய் நினைத்தெனை
உன் நிழலாயெனும் கூட்டிபோ

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே

தேடாத வார்தையென நானிருந்தேன்
தேடியே உனைத் தேர்ந்தெடுத்தேன்
நீயும் எனை விட்டு வைத்தால் எனை
யார் வாசிப்பார்

கலைந்து கிடக்கிறேன் எழுத்துகளாய்
என்னை கொஞ்சம் சேர்த்து வை உந்தன்
கவிதைக்கு வார்தையாகும் வரம் கொடு

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே....


-யாழ்_அகத்தியன்

இம்சையானவளே...!

உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே

*
அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது

*

உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்
உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்

*
தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்

*
" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

Thursday, November 22, 2007

என் பாடல்......[04]

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள் திறக்கையில்
உன்னையே காண்கிறேன் நா நா

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
மெளனமாய் தொடர்கிறாய் உன்
சம்மதமே வேண்டி என் இதயம்
துடிப்பது கேக்கலையா மலரே உன்
இதழ் பிரித்து காதலை சொல்லிவிடு
என்னை உன்னோடு சேரவிடு காதலியே

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

எந்தன் உலகமே நீயடி எனக்கென
யாரடி உன்னை விட்ட ஏதடி வாழ்க்கை
எல்லாமேயானாய் இனியுமென்ன கேள்வி
உன் பதிலே நான்தானே காதலி என் உலகமே
வா இமைகளாய் காத்திடுவேனே

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

எனக்கென நீயும் உனக்கென நானும்
வாழ்ந்து ரசித்திடுவோமே எம்மை பிரிக்க
ஏது சக்தி காதல் ஒன்றே போதுமடி கவலை
எதற்கு கண்ணே காலம் கை கொடுக்கும்
கடவுளை நம்பி எனை ஏற்றுவிடு நிலவே
உந்தன் வானாமாய் நானிருப்பேனே என்றும்

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள் திறக்கையில்
உன்னையே காண்கிறேன் நா நா

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி....


-யாழ்_அகத்தியன்

Monday, November 19, 2007

மென்மையானவளே..!

என் இதயம்
மென்மையானது
அதனால்தான் நான்
எந்த தவறுசெய்தாலும்
என்னை கண்டிப்பதில்லை

அப்படிப்பட்ட என்
இதயத்தை கைப்பற்றி
என்னை எதுவுமே
செய்யாமல் பண்ணிவிட்டாய்

*
உன் விழிவீச்சு
படும்வரை அமாவாசை
இரவுக்குள் மறைந்து
கிடக்கின்றன
என் கவிதைகள்

*
நீ மட்டும்தான்
சிறந்த நீதிபதி நான்
எந்த தவறுசெய்தாலும்
கிள்ளுவதை மட்டுமே
தண்டனையாய் தருகிறாய்


*

உனக்கு எதை வாங்கி
வருவது என்ற குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து பார்க்கையில்
கையில் இருந்தது மட்டும்
சிரித்துக் கொண்டிருந்தது

கடையில் இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

*
நீ வாசிக்க
ஆரம்பிக்கிறாய்
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
கரை சேர்கிறது

-யாழ்_அகத்தியன்

Thursday, November 15, 2007

சாந்தமானவளே..!

என் காதலா உன் காதலா
பெரிதின்னு பார்பதற்காகவாவது
நாமிருவரும் காதலிக்க வேண்டும்
உன்னிடம் நான் தோற்றுப் போனாலும்
பரவாயில்லை

*

நீ என்னை இயக்க ஆரம்பித்தாய்
இதயம் தன் பொறுப்பு பறிபோனதே
தெரியாமல் துடிக்க மட்டுமே செய்கிறது

*

நீ எனக்கு கிடைத்தமைக்கு
அமைதியாய் நன்றி சொல்லி
வழிபடத் தொடங்கினேன்

எனக்கு மட்டும் கேக்கும்படியாய்
என் மனசு இறைவனை திட்ட
ஆரம்பித்தது

தாமதமாய் உன்னை எனக்கு
காட்டியமைக்காக

*

என் புகைப்படத்தை எதற்காக
எல்லாரிடமும் காட்டுகிறாய் என்று
கோவப்படுகிறாய்

அப்போதுதான் என் இதயம்
எனக்குள் இருப்பதற்காய்
கவலைப்பட்டேன்

*

"நான் உங்களை காதலிக்கிறேன்"
என்பதை மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்

உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து ஆட
ஆரம்பிக்கிறேன்


-யாழ்_அகத்தியன்

Tuesday, November 13, 2007

இதமானவளே..!

"நான்"
நீயாகவில்லை உன்
பக்தனாகத்தான் நான்

ஏனெனில்
உன் முதல் சந்திப்பிலேயே
"நான்" என்ற என் அகங்காரம்
என்னைவிட்டு பறந்து போய்விட்டது

*
காதலிக்கும்
இதயங்கள்தான்
என்றும் இளமையாக
இருக்குமாம் வா

நம் முதுமையில்
நமக்கென யாரும்
இல்லாமல் போனாலும்

நம் இதயங்களின்
குறும்புகளை சேர்ந்தே
ரசித்திடுவோம்

*
அழகாக பூத்திருக்கும்
பூச்செடிகளைக் கண்டு நீ
ஆனந்தப்பட்டபோதுதான்

முதன் முதலாக நான்
கண்காணிக்காததால்

வாடிப்போன
பூச்செடிகளுக்காய்
கவலைப்பட்டேன்

*
உனக்காவே
பிறந்த நான்
இறைவனிடம்
வரம் கேட்டால்

நீ சூடும்
பூக்களைப்போல்

உன்னோடு வாழ்ந்து
உன்னில் இறந்துபோக
வேண்டுமெனக் கேட்பேன்

*
என் கவிதைகளை நீ
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்

நான் மனம் வைத்துத்தான்
ஒவ்வொரு கவிதையையும்
எழுதுகிறேன் என்ற உண்மையை


-யாழ்_அகத்தியன்

Monday, November 12, 2007

என் உயிர் காதலியே..!

இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்

இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்

செல்லச் ச
ண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடித் திரியும்
பொழுதுகளில்

இடைவெளியில்லா
உன் நினைவுகளில்.....

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்


-யாழ்_அகத்தியன்

Sunday, November 11, 2007

எங்கிருந்தாய் இதுவரை நீ..!

அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

இரவுகள் என்னை தலாட்ட
மறுக்கிறது இரு விழிகளும்
சூரியனாய் சுட்டெரித்து உன்
நினைவுகளை படரவிடுகிறது

உன்னோடு இருக்கையில்
மெளனமே மொழியாகிறது
தனியாய் இருக்கையில்
ஏதேதோ பிசத்துவதே
என் மொழியாகிறது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதிதாய் யாரோ
குடிவந்ததாய் உண்ர்கிறேன்

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்
அன்பே தனியாய் உன் நினைவுகளை
திரையிட்டு உள்ளுக்குள் சிரித்து ரசிக்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்ப்பதறியாமல்
குழந்தைகளோடு குழந்தையாகி
கும்மாளமடிக்கிறேன்

இப்போது உனக்காக
காத்திருக்கும் நேரமிது

கொஞ்ச நேரம் நிற்கிறேன்
கொஞ்ச நேரம் இருக்கிறேன்
கொஞ்ச நேரம் சாய்கிறேன்
கொஞ்ச நேரம் நடக்கிறேன்
கொஞ்ச நேரம் கவி எழுதுகிறேன்

மீதி நேரம் இருந்தால்
செய்ததையே திருப்பிச்
செய்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேன் என்று தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
கவிதை எழுதும் போது
காகிதங்களை காயப்படுத்துவதாய்
உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்


-யாழ்_அகத்தியன்

Saturday, November 10, 2007

இரக்கமானவளே..!

உனக்கென்ன நீ தூங்கிவிட்டாய்
நான்தான் நீ தூங்கும் அழகை
கற்பனை பண்ணிப்பார்த்தே

என் இரவை நீளமாக்கிக்
கொண்டிருக்கிறேன்

*அப்படி என்னத்த உன்னில்
கண்டதோ என் இதயம்
உனக்கு பதிலாய் எதைக்
கொடுத்தாலும் என் மேல்
தூக்கி எறிகிறது

*
கவிதைகளை
நான் பெற்றதில்
பதிலுக்கு கவிதைகள்
செய்த நன்றிக்கடன்

உன்னை எனக்கு
தேடித்தந்ததுதான்

*

தூங்குவதற்கு இமை
மூட வேண்டும் என்பதையே
மறக்கடிக்கிறது உந்தன் நினைவு

*
என் வேதனை எல்லாமே
உன்னைக் காதலிக்க எனக்கு
ஒரு இதயம் போதாது
என்பதுதான்

-யாழ்_அகத்தியன்

நிலா பாட்டு

வா நிலா வா நிலா வசந்தம் தா நிலா
நீ நிலா நினைவுகள் தா நிலா பார் நிலா
உன் பார்வையின்றி தேய்வது நான் நிலா

உனைத் தேடியே என்
கண்கள் பூத்ததோ தேன் நிலா
எனைத் தேடமலே நீயும் மறைவதேன்
பால் நிலா

எங்கே நீ சென்றாலும் என் நிலா
நீ நிலா நீயில்லா என் வானம்
அது விதவையின் நெற்றி நிலா
நீயில்லா நான் யாருமில்லா
குழந்தை நிலா

இமைத்திடும் கண்களில் தெரிவது நீ நிலா
துடிக்கும் இதயத்தில் வசிப்பது நீ நிலா
எழுதிடும் கவிதையில் மொழியும் நீ நிலா

நிலா நிலா நீயே என் சொந்த நிலா
காதலை இருவரும் சொன்ன நாள்
இன்றல்லவோ வா நிலா
வாழ்வோம் ஒன்றாய் வானம்
உள்ளவரை சேர்ந்தே.....


-யாழ்_அகத்தியன்

Thursday, November 8, 2007

என் பாடல்......[03]

எங்கிருந்தாய் இதுவரை நீ
உன்னைத் தேடித்தானே என்
கண்கள் களைத்தது நீயும் கொஞ்சம்
என்னைத் தேடியிருந்தால் எப்போதோ
எப்போதோ சேர்ந்திருப்போமே

உன்னைக் காட்டி கொடுத்த கண்கள்
காதலை கற்றுக் கொடுக்கிறதோ கவிதை
தான எழுதுறேனோ இமைத்திடும் பொழுதினில்
எனை மறந்து பார்க்கிறேனோ உன் பார்வை ஒன்று
போதுமே நீ அணைத்திடும் குழந்தையாவேனே

விடியும் பொழுதில் நீ கிறுக்கும்
கவிக்கோலம் ரசித்திட விழித்துடுவேனே
மாலைப் பொழுதில் நீ பாடும் தாலட்டை
கேட்டே என் இமை மூடுமே

உன் பார்வையின் தொலைவிலே தொலைந்திடாமல்
வாழ்ந்திட வரம் கேட்பேன் என் உறக்கத்தில் கூட
உன் இதயம் துடிக்கும் சத்தம் கேட்க தவமிருப்பேன்
நீ சூடும் பூவிலும் நானிருக்க பூத்திருப்பேன்

எனக்கும் உனக்குமான உலகம் படைத்து நாம்
கையோடு கை பிடித்தபடி சுற்றித் திரிய வேண்டும்
காதலர்பூமியென பெயர்வைத்து தினம் கவிதைகள்
படைத்து ரசித்திடுவோமா


-யாழ்_அகத்தியன்

Wednesday, November 7, 2007

தித்திக்கும் தீபாவளி..!

ஒட்டுமொத்த விளக்கையும்
ஒரே நேரத்தில் ஏற்றிவிட்டு
அழகு பார்க்கிறாய்

விளக்குகளோ நீ ஏற்றிய
சந்தோசத்தில் அணையப்போவது
கூடத் தெரியாமல் அழகாய்
எரிந்துகொண்டிருக்கிறது

*

நீ ஏற்றிய விளக்குகளில் எல்லாரும்
குளிர் காய்கிறார்கள் நான் மட்டும்
உன் இருவிழிப்பார்வையால் எரிந்து
கொண்டிருக்கிறேன்

*
பட்டாசே உன்னைக்
கொளுத்தி வீசுவதால்

வெடிக்காமல்
விட்டுவிடாதே

உன் ஒவ்வொரு
விரச்சாவிலும்தான்

என்னவள் என்னை
இறுக்கிப் பிடிக்கிறாள்

*
உன் கையில் இருக்கும்
விளக்கை நான் ஏற்றும்
வரை தெரியாது

சுட்டெரிக்கும் உன் கண்களால்
சுடாமலும் இதமாக பார்க்கத்
தெரியும் என்பதை

*
"தீபாவளி வாழ்த்துக்கள்"
என நீ அனுப்பிய குறுந்தகவலை
பாடமாக்கியபடியே விடியவைத்தேன்
என் தீபாவளியை

*
நீ
விளக்குகளை ஏற்ற
ஆரம்பித்தாய் இரவுகள்
தீபாவளி கொண்டாடத்
தொடங்கிவிட்டது

*
ஒரேயொரு முறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று

உன் முகத்தை ஏற்றிய
சந்தோசத்தில் விளக்குகள்
தீபாவளி கொண்டாடட்டுமே


-யாழ்_அகத்தியன்

Monday, November 5, 2007

என் பாடல்......[02]

கொஞ்சிவிடு கொஞ்சிவிடு கொஞ்சவென
கெஞ்சவிடு நித்தமினி நித்தமினி நித்திரையை
கெடுத்திடு விடியட்டும் விடியட்டும் விளக்கை நீ
அணைத்திடு

மழைக்கும் நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்ல
படிக்கிற வயதெல்லாம் கடந்திட்டு பிள்ளை
கனமழை பெய்யுது கட்டில் மெத்தை இருக்கிது
செய்முறை பலமுறை செய்திடவா நீ திருத்திட
திருத்திட தப்பு பண்ணவா வா வா வா

தூர தூர தூர தேசம் இன்னும் நான் நடந்ததேயில்ல
வழிவிடு வழிவிடு மெல்ல உன் தேகமெங்கும் தேகமெங்கும்
இதழ்களால் பொடி நட நடக்கிறேன் பாரு எந்தவழி
போனாலும் வழி காட்டியில்ல கை எடு கை எடு
கண்டு பிடிக்க

புள்ளி புள்ளி புள்ளிவைத்து கோலம் நான் போட்டதே இல்ல
கொஞ்சம்விடு கொஞ்சம்விடு புள்ளியின்றி நானும் உன் தேகமெங்கும் மீசையால் கோலம்தான் போடுறேன் பாரு பொறுத்திரு பொறுத்திரு கோழி மிதித்து கொஞ்சுதான் செத்ததில்ல மீசை குத்தி யாரும்தான் காயப்பட்டதில்ல

ஏய் ஏய் ஏய் மது மது போதையில் நானும் மயங்கியதில்ல
மண்ணோடு மண்ணாய் உன்னோடு நானும். தெளியவேயில்ல
தெளிந்திட மனசும்வரல இப்படியே தொடர்ந்திரு இதுவர
விட்டதில்ல இப்படி பெரு மூச்சு

மானே மயிலா மல்லிகைப்பூத் தேனே
என்ன சுகம் என்ன சுகம் ரொம்பத்தான்
இனிக்கிது கெஞ்சத்தான் வைக்கிது
மறுபடி கேக்கிது வா வா வா
வாரே வா வா வா வா செல்லம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


-யாழ்_அகத்தியன்

Sunday, November 4, 2007

என் பாடல்......[01]

காதல் வந்தால் கவிவந்தால்
மிக அழகு இரவு வந்தால் நிலவு
பூத்தால் பேரழகு நீ வந்தால்
உன் நினைவிருந்தால் கோடியழகு

மலரும் பூ முகமே
உன் கண்கள் இமைத்தால்
உன் இதழ்கள் பிரிந்தால்
என் காயமாறுமே கண்ணே

கொஞ்சிடும் உலகமிது கெஞ்சிடும்
இதழ் எனக்கு பக்கம் வந்துவிடு
பாவையே முத்தமிடு பாத்திருக்க
கொள்ளையிடு பள்ளியறை நேரமிது
படித்திட வா.... படிப்பிக்க வா..

அழகானா இரவிருக்கு ஆசையோடு
நானிருக்கு அள்ளிஎடு அத்தனையும்
பிச்செடு மூச்சுவிடு முகம் காட்டு
முத்தசுகம்தேடு முழுமையாய் ஏந்திவிடு
எனக்கென நீயிரு

விட்டது தொட்டது விடாதே
எட்டியதேது தட்டிக்கொடு எல்லாம்
கனிந்திருக்கு மெதுவா பறித்தெடு
கண்ணே கனியே களைக்காமல்
முத்தமிடு ஏ குயிலே மயங்குமிசை கேள்

எடுத்திட வா கொடுத்திட வா பெற்றிடவா
வா வா உச்சிமுதல் பாதம்வரை முத்தமிட்டு
நீந்தவா உன்னில் என்னை மூழ்கடிக்க வா வா

புதுப் புதுசாய் பூப்பது எந்தசுகம்
அடைமழை பெய்கிறது வா நிலா
நனைந்திடுவோம் புதுக்கவியாய்
இணைந்திடு போர்வைக்குள் புழுவாய்
நெழிந்துவிடு ஏ ஏ ஏ நானிருக்கேன்
நாணத்தை களைந்துவிடு நமக்கினி
யாரும் வேண்டா


-யாழ்_அகத்தியன்

என் வாசகி நீ..!

முதல் முதலாக
நீ என்னை எழுத்துக்கூட்டி
வாசித்து முடித்தபோது

எல்லாக் கவிதைகளைப்
போலவும் நானும் உன்
வாழ்த்துக்காய் காத்திருக்க
முன்னமே

"என்றும் நீ எனக்குப்
பிடித்த கவிதையாக
இருந்துவிட முடியாது
ஏனெனில்
எழுத்துப் பிழைகள்
அதிகம் நிறைந்த
கிறுக்கலாய் இருக்கிறாய்"

என நீ கூறிவிட்டு
என்னை கசக்கி
எறிந்த இடம்

இன்றும் என்னை
கண்ணீரால் கவி
எழுத வைக்கிறது


-யாழ்_அகத்தியன்

Saturday, November 3, 2007

உறவானவளே..!

நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்

*
கரப்பான்பூச்சியை
கண்டதும் நீ என்னைக்
கட்டிப் பிடித்தாய்

நான் கரப்பான்பூச்சிக்கும்
நன்றிக் கடனாளியாகிவிட்டேன்

*
வகுப்பாசிரியைக்கு உன்
மேல் பொறாமை படிப்பிக்கும்
தன்னைக் கவனிக்காமல் நான்
படிக்கும் உன்னைக் கவனிப்பதால்

*
பேசாமல்
எனக்கு நீ முத்தமிடு
இல்லையேல் ஏதாவது
பேசிவிடு

உன் இதழ்கள்
ஒன்றை ஒன்று
முத்தமிடுவதையாவது
நான் பார்த்துவிட்டுப் போகிறேன்

*
எல்லாரும் அழகுக்காக
பொட்டு வைப்பார்கள்

நீ மட்டும்தான் உன்
அழகில் யாரும்
கண்படக்கூடாது
என்பதற்காக
பொட்டு வைக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

Friday, November 2, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு என் வீரவணக்கம்

பூக்கள் கூட உன்னைப்
போல் புன்னகையால்
முகம் மலர்ந்ததில்லை

சமாதான புறா கூட
உன்னைப்போல் சமாதானம்
பேச உலகம் சுற்றியதில்லை

உலக பேச்சுவார்த்தை
மேசைகளுக்கே தமிழ்
கற்றுக்கொடுத்த சமாதான
புறா நீயல்லவா

உன்னோடு ஆயுதம்
குழந்தையாய்
உறங்கியபோதும்
அழகு தமிழ் சொல்லெடுத்து
செல்வன் நீ அற்புதமாய்
போராடினாயே

வழிகாட்டி பலகைகூட
காட்டிவிட்டு இருந்துவிடும்
தளபதியாய் நீ இருந்தபோதும்
கூடவே கைபிடித்து
கூட்டி வந்து விட்ட
தாயல்லவா நீ

தேசத்தின் குரலோடு
ஈழத்தின் விடிவிற்காய்
அகிலம் சுற்றி வந்த
ஈழத்தின் குயிலே

கூட்டைவிட்டு நீ
வாரக்கணக்கில் அல்லவா
உலகம் சுற்றி வந்தாய்

ஏன் ஏன்
எங்கள் கூட்டில்
இருந்தபடியே நீ
நிரந்தரமாய் உன் உயிரை
பறக்கவிட்டாய்

உன் கல்லறையில் நீ
தூங்க முன் நீ கண்ட
தமிழீழக்கனவு நிறைவேறும்
அதுவரை நீ தூங்காமல் இரு


-யாழ்_அகத்தியன்

Thursday, November 1, 2007

அமைதியானவளே..!

நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா

உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்

*
என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்

எப்படியும்
நீ வீடும் சென்று படிக்கும்
போது காமக்கவிதையாய்
மாறியிருக்கும்

*
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா

உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்

*

உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்

நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்

*
உனக்கு காதல்
கதையே தெரியாதா

நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 31, 2007

அசத்தலானவளே..!

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம்
உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன

அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்

*
உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ

*
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாதுபாடு
படுவதுதான் என்னை
ரசிக்க வைக்கிறது

*
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்

*

நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகயழகு

அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 30, 2007

அன்பானவளே..!

எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்

அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்

*
என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது

*
நீ
ஆசைபட்ட பொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்

பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்

*
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்

*
பூ
செடியை சுற்றுமா என்ன..?

நீ
துளசிச் செடியை
சுற்றும்போது

என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்


-யாழ்_அகத்தியன்

Sunday, October 28, 2007

அழகானவளே..!

இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்

நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்

*
பேசாமல் நான் சிவப்பு நிறத்தில்
பிறந்திருக்கலாம் இப்படி நீ முத்தம்
கொடுத்த (கடித்த) இடத்தை கஸ்ரப்பட்டு
மறைக்காமல் இருந்திருப்பேன்

*
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்

எப்படி...
உன்னிடம் முத்தம்
பெறவேண்டும் என்பதற்காய்

என்னை நானே கிள்ளிவிட்டு
நீ கிள்ளியதாய் பொய் சொல்கிறேனே

*
என்னைக் காதலிக்க எங்கும்
போகாதே உன் நிழலிடமே
கற்றுக்கொள்

நீ
பார்க்காமல் போனபோதெல்லாம்
என்னை தடவிச்சென்றது அதுதானே

*
நீ
தாமதமாய் வருபதைக்கூட
என்னால் திட்ட முடிவதில்லை
திட்டினால் அவசரமாய்
போய்விடுவாயோ என்று


-யாழ்_அகத்தியன்

Friday, October 26, 2007

யார் குற்றமோ..!

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நீ என்னை
காதலோடு
பார்க்காமல்
போயிருந்தால்

நான் உன்னிடம்
நேரம் கேக்காமல்
போயிருந்தால்

இப்பிடி சேர்ந்து
ஒன்றுக்குள் ஒன்றாக
வாழ்ந்துவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்


-யாழ்_அகத்தியன்

அன்பே ஆருயிரே..!

ஞாபகபடுத்திக் கொண்டே
இருக்க மறந்து போன
காதல் நம்முடையது

அழகிய கவிதையே
என் பேனவின் மையே
உன்னைக் கிறுக்கியே நான்
இறந்து கொண்டிருக்கிறேன்

தினம் ஏக்கதில்
விழித்திருப்பேன்
பாதையெங்கும் உன்
விம்பம் தேடி

எங்கே நீயென தேடித் தேடியே
நித்தம் முத்ததில் நானிருப்பேன்

உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே

எத்தனை இரவை என் விழி
பகலாக்கியிருக்கும் எல்லாம்
அன்பே நிலா உன்னை காணத்தானே

என்று புரிவாய் எனை என
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா.....

காதலி எனைக் காதலி
உன் கரம் பிடிக்க கை
நீளுதே

இதமான தென்றலை என்றும்
வீசுவேன் என்னருகே நீயிருந்தால்
உன் மடியில் நான் தூங்க

எங்கே நீ சென்றாலும் உன்னோடு
ஓடிவரும் நிழலாக நானிருப்பேன்
என்பதை நம்பிவிடு

ஆயிரம் சொன்னாலும் உலகம்
அன்பே உனை சேர அகிலமே
எதிர்த்தாலும் கோழையாய் நான்
முலையில் படுத்துறங்கமாட்டேன்

போராடியே போராளியாய்
உன் கை பிடிப்பேன் என்
உலகமே நீயாக வேண்டும்
என்பதே என் கொள்கை

எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை வேண்டாம்
எனக்காய் நீயும் ஓடி வரவேண்டாம்
விழுப்புண் அடைந்தாலும் வேங்கை நான்
உன்னைக் கேக்க வாசல் வருவேன்

அதுவரை பொறுத்திரு முடிந்தவரை
சமாதானமாய் பேசிப்பார்ப்போம்

சிறந்த வீரனுக்கு அழகு பொறுமையாம்
அழகு தேவதையே உன்னால் வீரனானேன்
உனக்கென பொறுக்க மாட்டேனோ


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 24, 2007

மலரானவளே..!

நிலவு பிடிக்குமா என்கிறாய்
நீ காணாமல் போனால் உன்னை
கண்டுபிடிக்க நிலவைத்தானே நான்
அடையாளாமாய் வைத்திருக்கிறேன்

*
எல்லா பூக்களும் எப்படியோ
வாடிவிடுகிறது உன் புன்னகை
பூ மட்டும்தான் வாடமலிருக்க
பூக்கிறது

*
குடிச்சாவது பழகியிருக்கலாம் நான்
முத்தம் தராவிட்டால் குடிச்சிடுவேன்
என்று சொல்லியே கெஞ்சாமல் விரும்பியளவு
உன் முத்தங்களால் குளித்திருப்பேன்

*
என்னை இதயம் இயக்கவில்லை
என் இதழ்கள்தான் இயக்குகிறது
பார் முத்தம் கொடுக்க உன்
உச்சி முதல் பாதம்வரை மாறி மாறி
என்னை இயக்கிக் கொண்டிருக்கிறதே

*
என்னை கவிஞனாக்கியது
மட்டுமல்ல கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்

*
எதற்காக நீ
பூச் செடி வளக்கிறாய்
உன்னைப் போல் நடமாடும்
பூவாக பூக்கவே முடியாது
என்று ஆடிக்காட்டவா


-யாழ்_அகத்தியன்

எங்கே என் உயிர்..!

எப்போதும் குளிரும் உன்
நினைவுகளில் நடு நடுங்கித்தான்
போர்த்துக் கொள்கிறேன் என்னைத்
தினமும் நான்

பாய் விரித்தும் உறங்க முடியாமல்
எனை சுருட்டிக்கொண்டிருக்கிறது
பிரிந்துபோன உனை இமைக்காது
தேடும் என் கண்கள்

நீண்டுகொண்டே போகும் இரவுகளில்
வளரும் நிலவோடு வளர்ந்துகொண்டே
போகும் உன் நினைவுகளை வழி
நடத்துகிறது இந்த பழைய மனசு

காயங்கள் பல கண்டபோதும்
நீ தூங்க புல்லாங்குழலானேன்

வலிதாங்கியே பழகிய என்னை
சுமைதாங்கியாக்கி அழகாய்
ஏறியமர்ந்தாய்

உன்னைச் சுமந்தே
உலகம் சுற்றிவந்தேன்
சுமக்கும் கழுதையாய் நான்

ஓரு நாள் ஏனோ உனை
இறக்கிவிடச் சொன்னாய்
பதறிப்போய் நான்
உன் வீட்டுவாசல் என்பதை
கவனிக்காது பத்திரமாய்
ஏற்றிய அதே கவனத்தோடு
கசங்காமல் இறக்கிவிட்டேன்

இதோ வாறேன் என
உன் வாசல் நுழைந்தாய்
இன்றுவரை நான் உனக்காய்
சிலையானதுதான் மிச்சம்

என்னை பட்டமாக்கி பறக்க
விட்ட காதல் தேவதையே
என்னை நானகவே
விட்டிருக்கலாம் நீ

கசக்கி எறிந்த கவிதையாய்
குப்பை தொட்டியில் கிடந்திருந்தாலும்
இப்பிடி நூலறுந்த பட்டமாய் உன்னிலே
நான் சிக்கிக் கிடப்பதைவிட அது மேல்

சரிவிடு
இனி எப்போதும் என்னைத் தேடி
வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது

இருந்தாலும்
உன் காதல் வார்த்தைகளால்
என் உயிரை எடுத்துப் போனாயே
அதையாவது
யாரிடமாவது கொடுத்தனுப்பு

சிலையாகிப்போன நான்
இறந்து போக வேண்டும்


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 23, 2007

உன்னதமானவளே..!

நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை தந்துகொண்டே
இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை
படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய்
என்ற நம்பிக்கையில்

*
தினமும் நீ என்னை பார்த்தும்
பாராமல் போகிறாய் அதையும்
பார்ப்பம் பாரமல் பார்க்காம
எத்தனை மட்டும் பார்க்கப்
போறாயென்று

*
சொன்னா கேக்க மாட்டிங்களா
என்றதை கேக்கிறதற்காகவே
தினமும் மழையில் நனைந்து
வரலாம்

*
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ

*
நான் தொடர்ந்தும் உனக்காகவே
கவிதை எழுத வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசை உனக்கு
என் கவிதையை படித்துவிட்டு
யாரு எழுதிய கிறுக்கலுக்கு
வாழ்த்துகிறாயே


-யாழ்_அகத்தியன்

தாயுமானவளே..!

நீ வரும்வரை என்னை எவரும்
கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது உன்னோடு கூட
வரலாம் நான்

*
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது

*
தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை தடவித்
தடவித்தான் என்னையே
நான் தூங்க வைக்கிறேன்

*
உன்னை நிற்க வைத்து யார்
புகைப்படம் எடுத்தது அதை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது

*
நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய் நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே


-யாழ்_அகத்தியன்

Monday, October 22, 2007

இதயத்தில் நீ..!

நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்

அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்

எழுத்துக்களை மிச்சம்பிடித்து
நீ எழுதியனுப்பிய கடிதங்கள்

ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்

உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்

இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
நான் அழித்துவிட்டு
வீரானாய் பெருமை
கொண்டபோதும்

இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன்


-யாழ்_அகத்தியன்

அம்சமானவளே..!

அவ்வளவு
ஆசையா உனக்கு
என் மீது
கோவத்தில் நீ
சட்டி பானையோடு
சண்டைபிடித்தும்

இவ்வளவு ருசியா
சமைத்திருக்கிறாய்

*
அமாவாசை விரதத்தில் நீ
"கா கா கா" என கரைந்து
கொண்டு வெளியே வருகிறாய்

உன்னைக் கண்டதும்
காகங்கள் குழம்பிவிட்டது
பெளர்ணமி விரதமோ என்று

*
இந்த மழை உடனே
நின்றுவிடும் பார்
எப்படித் தெரியும்
நீதான் குடை
விரித்துவிட்டாயே

*
என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ...

*
என் கண்களுக்கு இமைக்க
மட்டும்தான் தெரியும் உன்
கண்களில் ஒன்றைக்கொடு
உன்னை மாதிரியே
உன்னை நான் இமைக்காது
பார்க்க வேண்டும்


-யாழ்_அகத்தியன்

Sunday, October 21, 2007

அழகு தேவதையே..!

அவசரமாய் நான் வீதி
கடக்கையிலும் நீயே
நினைவுக்கு வருகிறாய்

எப்போதோ உன்னோடு
வீதி கடக்கையில் நீ
குட்டுவைத்து குழந்தை
போல் எனை கூட்டிச்
சென்றாயே

*
என்னை எழுத
வைப்பதற்காகவே
கவிதையாய் படுத்துக்
கிடப்பாய் எனக்கு முன் நீ

*
நீ எழுதிய முதல் கவிதை நான்
ஒவ்வொரு பத்திரிகை குப்பைத்
தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன்

*
உன்னை விட தொட்டால்
சிணுங்கி பரவாயில்லை
நீ பேசினாலே சிணுங்கிறாயே

*
பெண்களுடன்
சுற்றி இருக்கீங்களா
என்று கேக்கிறாய்
இல்லையென்றால் நீ
எனக்கு தேவதையாய்
தெரிந்திருக்கமாட்டாய்


-யாழ்_அகத்தியன்

என் கனவே நீதான்..!

கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை

நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்

மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்
என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்

மறுபடி நான்
தூங்கிப்போனால்

என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்


-யாழ்_அகத்தியன்

Saturday, October 20, 2007

அடுத்த ஜென்மத்திலாவது...!

நான் உன் கைக்கடிகாரமாய்
பிறந்திருக்கலாம் நீயாக எனை
பார்க்காமல் போனாலும் யாரவது
நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்

*
உன்
கால்கொலுசாய் நான்
பிறந்திருக்கலாம் நீ
நடக்கையிலாவது எனை
இந்த உலகம்திரும்பி
பார்த்திருக்கும்

*
உன் கூந்தல் சீவும் சீப்பாய்
பிறந்திருக்கலாம் சிக்கல்
எடுக்கும் ஞானியென எனை
உன்னோடு வைத்திருப்பாய்

*
நான் உன் நெற்றிப்பொட்டாக
பிறந்திருக்கலாம் கொஞ்ச நேரமாக
இருந்தாலும் உன்னை பார்க்க வைத்த
பெருமையோடு உன் கையாலே
இறந்துபோயிருப்பேன்

*
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய்
பிறந்துவிட்டேன்

அடுத்த ஜென்மத்திலாவது
நீ போடும் செருப்பாக
பிறக்க வேண்டும் நான்

அப்போதுதானே
என்னை பிடித்து உன்னை
காதலிபவனுக்கு அடிப்பாய்


-யாழ்_அகத்தியன்

தேவதையானவளே..!

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

*
நீ
மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்

*
நீ
கவிதை
படிக்கிறாயா

இல்லை

உன்னைக்
கவிதை
படிக்கிறதா

பார் மறுபக்கம்
போக பஞ்சிப்படுவதை

*
உன்னைச் சேரும்
ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது

இசைக்கும் உன் கால்
கொலுசு முதல்

*
துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்

நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்


-யாழ்_அகத்தியன்

Friday, October 19, 2007

ஊமையானவளே...!

தினமும் நான் பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்த்து நீ வெளியிடுகிறாய்
உன் மெளனக் கவிதையை

ஆரம்பத்தில் உன் மெளனத்துக்காகவே
இடைவேளையின்றி பேசிக் கொண்டிருப்பேன்
நீயும் பேசமால் கேட்டுக்கொண்டே இருப்பாய்

இப்பொழுதெல்லாம் உனக்காக பேசிப் பேசியே
உன்னை மாதிரியே நானும் மெளனியாகிவிட்டேன்

எப்பொழுதெல்லாம் மெளனமாக இருக்கிறேனோ
அப்பொழுதெல்லாம் உன் நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்

எப்பொழுதெல்லாம் பேசுகிறேனோ
அப்பொழுதெல்லாம் உன்னை பற்றியே
பேசுகிறேன் உன்னோடு மட்டும்

மெளனமே சிறந்த மொழி
மெளனமே பேசவைக்கும் மொழி
மெளனமே பிடிக்கவைக்கும் மொழி
மெளனமே சிறந்தவிரதம்

என்பதை புரியவைத்து
என்னையும் உன்னைப் போல்
மெளனியாக்கிவிட்டாய்

உண்மைதான்
மெளனமே அழகான மொழி
நான் பேசாத பொழுதுகளில்

ஆனாலும்
என்னைத் தினம் கொல்லுவது
உன் மெளனமொழிதான் என்பது
உனக்குத் தெரியுமா...?

அன்பே அறிந்துகொள்
உன் மெளனத்தால் பாதிக்கப்படுவது
மற்றவர்கள்தான் என்பதை


-யாழ்_அகத்தியன்

Thursday, October 18, 2007

இரக்கமில்லாத குண்டுவிமானமே..!

தும்மலுக்கு மருந்தெடுக்க
போனவன் குண்டுமழையில்
நனைந்தபடி வீடு வந்து
சேர்ந்தான் பிணமாக

*
கொள்ளி வைக்க யாரும்
மிஞ்சவில்லை ஒரே
குண்டில் குடும்பமே பலி

*
குழந்தையில் வீட்டில்
ஊர்ந்து பழகியது உதவி
செய்கிறது குண்டுவிமானம்
வருகையில் தெருக்களில் ஊர

*
பத்து மாதம் சுமந்தவளும்
இறந்து போகிறாள் பதினைந்து
நிமிடம் சுமக்க முடியாத
விமானத்தின் குண்டுகளால்
*
எனக்கும் யோதிடம் தெரியும்
என் சாவும் குண்டுகளால்தான்
எந்த குண்டால் என்பதைத்தான்
கணிக்கமுடியவில்லை

*
குண்டுகளை தயாரிப்பவர்களே
நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி,
தங்கையோடு பிறந்ததில்லையா...?


-யாழ்_அகத்தியன்

உன் பெயரே கவிதை..!

7ம் ஆண்டு வகுப்பறை
மேசையில் முதல் முதலாக
கிறுக்க ஆரம்பித்தேன்

இன்றும் கிறுக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்

கண்ணில்படும்
கரும்பலகையிலும்
விளம்பர சுவர்களிலும்
பேருந்து இருக்கையிலும்
பிடித்த மரங்களிலும்

ரசித்த உலக
அதிசயங்களிலும்

கிடைக்கும் வெற்றுக்
காகிதங்களிலும்
உன் பெயரோடு
என் பெயரை

எனினும்
இன்றுவரை என் பெயர்
கிறுக்கலாகத்தான் தெரிகிறது
நான் கவிஞனான பிறகும்

ஆனாலும்
உன் பெயரே எனக்கு பிடித்த
கவிதையாகவே இன்றும் இருக்கிறது


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 17, 2007

காதலான கவிதைகள்...!

நீ
என்னோடு வருகையில்
காற்று என்னைத் திட்டுகிறது
நீ
தனியாய் போகையில்
காற்றை நான் திட்டுகிறேன்

பார் காற்று புயலாய் மாறி
உன் ஆடை களைய முயற்சி
செய்வதை

*
பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
நடக்கையிலும் ஏதாவது ஒரு
முள் குத்திவிடுகிறது உன்
இதயத்தை ஞாபகப்படுத்த

*
இரவிலும் தூங்க விடாததுக்கும்
சேர்த்து பகலிலும் தூங்குகிறது
என் கைபேசி நீ என்னை
தொலைத்ததால்

*
உன்னைச் சுற்றுவதால் நீ
கிடைக்காமல் போனாலும்
உன் நினைவாவது கிடைக்குமே
அது போதும் எனக்கு நான்
யாரையும் சுற்றாமலிருக்க

*
உன்னில் நான் இல்லாத
இடத்துக்கு மேல இன்றும்
தொங்குகிறது என்
இதயச் சங்கிலி


-யாழ்_அகத்தியன்

உண்மை சொல்வாயா..?

உன்னோடு ஓடிக்கொண்டிருந்த
நதியாக நான் இருந்த போது
ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது

ஏனோ
குளமாக தேங்கிவிட்டேன்
ஆனாலும் என்னைச் சுற்றி உன்
நினைவென்னும் குளக்கட்டுகளே

உன்னோடு ஓடியதும்
நானே
உன்னோடு உருண்டதும்
நானே
உன்னோடு விழுந்ததும்
நானே
உன்னோடு கலந்ததும்
நானே

ஆனாலும் நீ
நானில்லாமலே சேர்ந்துவிட்டாய்
வாழ்க்கை எனும் கடலில்

நான்தான் உன்னை நினைத்தே
தேங்விட்டேன் குளமாய்

இருந்தாலும்
யார் வீட்டு குழம்பிலாவது
நீயும் ஒரு நாள் உப்பாகலாம்
நானும் ஒரு நாள் நீராகலாம்

அப்போதாவது
உண்மை சொல்வாயா..?
ஏன் என்னை விட்டு
சென்றாயென்று


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 16, 2007

குழந்தைதான் காதல்..!

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதை
காதலி மட்டும்
சுமப்பதில்லை
இருவரும் சுமப்பது

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதால்
அழமட்டுமல்ல
பேசாமல் அழவும்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
ஆசைப்பட்டால் அது
கிடைக்கும் வரை அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எதைக் கொடுத்தாலும்
உடைத்துப் பார்க்கும்

காதல் ஒரு
குழந்தைதான்
சிரிக்கவும்
அழவும்தான்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
வேண்டும்
என்றாலும்
அழும்

வேண்டாம்
என்றாலும் அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எல்லாராலும் தூக்க முடியும்
எல்லாரலும் அழுவதை
நிறுத்த முடியாது

காதல் ஒரு
குழந்தைதான்

ஆனாலும்
அதை யாராலும்
எறியவும் முடியாது

அதை யாரலும்
அனாதையாக்கவும்
முடியாது

அதற்கு
பெற்றொர்களே
கிடையாது

ஆம்
யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி
பிறப்பது இந்தக் காதல்
குழந்தை மட்டும்தான்.


-யாழ்_அகத்தியன்

பாடல்வரியாக கிறுக்கிப்பார்த்தேன்

ஒரு வார்த்தையேனும்
சொல்லாயோபெண்ணே
அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்

நித்தம் உனை நினைத்தே
என் ஜீவன் துடிக்கிது பந்தம்
பாசம் எல்லாம் நீயே
பழகிட வா கண்ணே

நீயே எந்தன் உலகம்
நீயில்லாத உலகம் என்
கல்லறையல்லவா உயிரே
உன்னைச் சுமக்கத் தாயவேன்
உன் மடியில்என்றும்
குழந்தையாவேன்
நீயே என் சொந்தமல்லவா

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)

என் உயிராய் நீயிருந்தால்
உனக்காய்த் ( நான்)துடிப்பேன்
என்னுயிரே நீதானே
என் கவி நீயென்றால்
உனக்காய் ( நான்)சொல்லாவேன்
என் கவி நீதானே

என் கனவுகள் நீதானே இரவாய்
நீயிருந்தால் என் கற்பனை நீதானே
என் கவியாய் நீயிருந்தால் வா
பழகிட வா

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)

உனக்காய் வாழவே நான் பிறந்தேன்
என் இதயம் துடிப்பதே நீ வாழத்தானே
கடலுக்கு அலையிருக்கு
பூவுக்கு புயல் இருக்கு அன்பே
எனக்கென்று ஏதிருக்கு உன்னைவிட
யாருமில்லை உன்னைப் போல ஏதுமில்லை
வாழ்ந்திடுவோமே ஒன்றாக வா....

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)


-யாழ்_அகத்தியன்

Sunday, October 14, 2007

கண்ணீரின் வரிகள்...!

உன் மனதில் பட்டதை
சொல்லிவிட்டாய்

இது தெரிந்தால்
என் மனம்தான்
படாது பாடு
படப்போகிறது

அதற்கு
உன்னை காதலிக்க
மட்டும்தானே தெரியும்

நீ கைவிட்டது
தெரியாதுதானே...

பரவாயில்லை
நீ விட்டுப்போனது
என்னை மட்டுமாக
இருக்கட்டும்

என்
மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே

அதாவது
அழாமல் வாழட்டும்...

இந்தக்
காதலில் மட்டும்தான்

ஏமாற்றியவரே
ஏமந்து போவது

-யாழ்_அகத்தியன்

உன் நினைவே மாயம்...!

உன் மீது நான் கொண்ட காதலை
இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ
எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும்

உனக்காய் எழுதிய கவிதைகளை
அச்சடித்திருந்தால் புதிய காவியம்
ஒன்று கிடைத்திருக்கும்

நீயோ....
காதலால் எனக்கு
அழகானாய்
கவிதையால் எனக்கு
நிலவானாய்

ஆனாலும்
நீ நினைத்த மாதிரியே என்
இதயத்தை ஒத்திகை மேடையாக்கி
உன் காதல் அபிநயங்களை அழகாய்
பழகிச் சென்று விட்டாய்

இதில் என்ன ஆச்சரியம் என்றால்
கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர்
இல்லமாலே நீ நீயாவே நடன
ஆசிரியையானதுதான்

திருவிழா நெரிசல்களில்
தொலைத்துவிட்டாலும் தேரில்
பவனி வந்து எனக்குத் தரிசனம்
தருவது உன் நினைவு மட்டும்தான்

மறப்பதா..?
உன்னையா...?
நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்

நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?

உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ
பிரியாமாய் பேசியதையும்
நீ
பிரியமின்றி பிரிந்ததையும்
கவிதையாய் கிறுக்கவைத்தே
என்னைக் கவிஞனாக்கிறது

உன் நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.

ம்ம்ம்....
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்

அதுசரி...
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியும்


-யாழ்_அகத்தியன்

Saturday, October 13, 2007

எஸ்.எம்.எஸ் கவிதைகள்

எழுதிய கவிதைகளை
கிழித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயரைப் போல் அழகாய்
இல்லை என்பதால்.

*
உன்
கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்

*
அமாவாசையிலும் நிலாவோடு
வாழ்ந்து கொண்டிருப்பவன்
நான் மட்டும்தான்

*
உனக்கு மாத்திரை
குடிக்க பிடிக்காது
எனக்கோ
உனக்கு காய்ச்சல்
என்றாலே பிடிக்காது

*
நீ
சிலையாய் நிற்கும்
புகைப்படத்தை பார்த்தே
சிலையாகிப் போனேன் நான்

*

நீ என்னை காதலிப்பாய்
என்ற நம்பிக்கையில்தான்
உன்னை காதலித்துக்
கொண்டிருக்கிறேன்

*
நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை எண்ணிப்பார்பதையே
நான் செய்து கொண்டிருக்கிறேன்

*

இன்று என்னைவிட்டு
விடைபெற்று போகிறாய்
நாளைய உனக்காக நான்
காத்திருக்க ஆரம்பிக்கிறேன்

*
நீ
எனக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே உனக்கு
பிடிக்காததை செய்யக்கூடாது
என்பதில் மிகத் தெளிவாய்
இருக்கிறேன்.

*
உனக்கு
பொய் சொல்வது பிடிக்காது
தெரிந்தும் சொல்கிறேன்
பொய்சொல்லாத நீ கிடைக்க
வேண்டுமே எனக்கு

*
உன் புகைப்படத்தில் நீ
யாரோடு நிற்கிறாய் என்பதே
என் கண்ணுக்குத் தெரியவில்லை

என்
கண்ணுக்கு தெரிவது
நீ மட்டும்தானே


-யாழ்_அகத்தியன்

வாழ்வதற்கே வாழ்க்கை

இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்

*

நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

*
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது

*

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஒட்டாமே

*
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல

அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்

*

இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்

*
உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்

ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்

*
யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை

*
யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே

*
உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ

ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்

*
வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்

*
தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல

நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்

*
குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்ட
சிலையாகு

*
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை

*
உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட

நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்


-யாழ்_அகத்தியன்

Friday, October 12, 2007

சில காதல் கவிதைகள்...!

நீ
என் இதயத்தில் இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்

*
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்

என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே

*
நான் உன் கவிதைகளுக்கு
வாசகன்மட்டுமல்ல

உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட

*
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்

உன் இதயத்தில் ஓர்
இடம் வேண்டும் எனக்கு

ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது

*
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்

நிலா; நீ வேண்டும்
என்கிறது என் நட்சத்திரங்கள்

ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்

*
நீ நீலாதான்அதற்கான
சாட்சியங்கள் என்னிடம்
நிறையவே உண்டு

நீ நிலாதான் அதனால்தான்
நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்

*
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்

திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்

*

இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்

*
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை

உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்


-யாழ்_அகத்தியன்

Thursday, October 11, 2007

அகதியாய் நான்...[2]

அண்ணன்
புலம்பெயர்ந்த நாட்டில்
சட்டி பானையோடு
சண்டை பிடிக்கிறான்

தம்பி உள்ளான்
சண்டைக்குள்
என்பதால்

*
எல்லாம் இருக்கிறது புலத்தில்
எனக்கு எல்லாமுமான என்
குடும்பத்தை தவிர

*
ஊரில் இருந்துவரும் கடிதம்
பிணப்பாரமாகவே வருகிறது
இறந்தவர்களின் செய்தியோடு
வருவதால்

*
புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும்
என் குடும்பத்தின் பசியைத்தான்
போக்கமுடிந்தது தூங்கவைக்க
முடியவில்லை

*
புலத்தில் வயிறு முட்ட
உண்டாலும் வீசவில்லை
அம்மாவின் கைவாசம்

*
நேத்தி வைத்த கோயிலிலும்
செல் விழுகிறது யாரிடம்
போவேன் என் வீட்டை
காப்பாற்ற

*
அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல்
இங்கு விழுகிறதா என்றாலே இறக்கிறோம்


-யாழ்_அகத்தியன்

தேடித்தாருங்கள் என் பேனாவையாவது!!!

என் முதல் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக் காட்டுகிறது உன்
பெயரை என் பேனா.

என்று எழுதியதும்
என் பேனாதான்

விலக விலகத்தான் காதல்
அதிகரிக்குமாமே எங்கே ஒரு
தடவை கண்மூடித் திற

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு நீ
காதலிக்காததால் தலைக்கனம்
என்கவிதைகளுக்கு

என்று எழுதியதும்
என் பேனாதான்

உனக்கு யாரோ ஒருவனின்
கவிதை பிடித்ததில் இருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்னில் ஏதாவது ஒன்று உனக்கு
பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று.

என்று எழுதியதும்
என் பேனாதான்

அவள் என்னைக் கொஞ்சம்
கொஞ்சமாய் மறந்து தொலைத்த
பாதையில்_ நான்என்னைத் தேடி
எடுத்துக் கொண்டேன் அவளை
நினைத்து வாழ

என்று எழுதியதும்
என் பேனாதான்

களைப்பில் எந்த இடத்திலும்
இளைப்பாறிவிடாதே அந்த
இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன் நான்.

என்று எழுதியதும்
என் பேனாதான்

கரைந்த துளியை தேடும்
புல் போல் தேடுகிறேன் உனை
நீ வேரோடு கலந்ததை மறந்து

என்று எழுதியதும்
என் பேனாதான்

நீ இல்லாத காதலும்
காதல்இல்லாத நீயும்
என்றும் எனக்கு தோல்வியே!

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன் கோவத்தை என் மேல்
இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய்
பாவம் நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க.

என்று எழுதியதும்
என் பேனாதான்

நீ
தாமதமாய் வரும்வரை
எப்படி சமாளிபேன் என்
கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா
வேணும் என்கிறது.

என்று எழுதியதும்
என் பேனாதான்

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி
இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

என்று எழுதியதும்
என் பேனாதான்

தினம் ஒரு கவி எழுதி
உன்னைத் தேட விட்டேன்
எல்லாமே களைப்பில் உன்
ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது

என்று எழுதியதும்
என் பேனாதான்

அவளைச் சிரிக்கவைத்து அழாமல்
எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு
புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றிவருகிறது

உலகம் சுற்றி வரச்சொன்னா நான்
உன்னை சுற்றி வருகிறேன்

என்று எழுதியதும்
என் பேனாதான்

உண்மையில்
ராசியான பேனாதான்
என்னவள் போல்

தயவு செய்து யாரவது
தேடித் தர முடியுமா..?
இரண்டில் ஒன்றையாவது

-யாழ்_அகத்தியன்

Wednesday, October 10, 2007

நான் படித்தவனல்ல...!

நான் படித்தவனல்ல
படிபிக்கப்பட்டவன்
அனுபவங்களால்.

உங்க ஊர் பள்ளியில்தான்
நீங்கள் பட்டம்பெற்று
இருப்பீர்கள்

நான் ஏடு துவக்கியதுதான்
சொந்த ஊர் பள்ளியில்
ஆரம்ப கல்வி படித்ததே
மூன்று பாடசாலையில்.

யுத்தம் என்பதை நீங்கள்
பாடத்தில் படித்திருப்பீர்கள்
அனால் நான் யுத்தத்துக்குள்
பள்ளி சென்றவன்.

குடை இல்லை என்பதற்காக
பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள்
நான் குண்டு மழைக்குள்ளும்
பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன்.

நீங்கள் காகிதத்தில் செய்த
ரொக்கேற்றுகளைத்தான்
வகுப்பறையில் பறக்கவிட்டு
இருப்பீர்கள்

நான் குண்டு விமானங்கள்
சுற்ற சுற்ற படித்திருக்கிறேன்.

நீங்கள் கொடுத்து
வைத்தவர்கள்
என்னைப்போல் அயுத வெடிசத்தத்தில்
உயிர்மெய் எழுத்தை படித்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
அழகான பாதணிகளோடு
பள்ளிசென்று இருப்பீர்கள்

என்னைப்போல் கண்ணிவெடியில்
கால் இழந்த பின்னும் சென்று
இருக்கமாட்டீர்கள்.

இவையெல்லாம் என்
பெருமையாக தெரியலாம்
இவையால்த்தான் தொடர்ந்து
படிக்காமல் போனேன் என்பது
யாருக்கு தெரியும்......?


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 9, 2007

நான் கிறுக்கன்தான்...!

என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல்
இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
அவையாவும் கற்பனைகள்
என்பதால்.

என் கவிதைகளில்
எழுத்துப்பிழைகள்
அதிகம் இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
மன்னித்துவிடு நான்
உன்னைப்போல்
படித்தமேதையல்ல.

என் கவிதைகளில் தலைப்புகள்
பொருத்தமற்றதாக இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
உண்மைதான் நான் எழுத நினைப்பது
ஒன்று எழுதி முடிப்பது வேறொன்று
எல்லாம் உன்னை காயப்படுத்தக்
கூடாதுஎன்பதால்தான்.


என் கவிதைகள் எதுவுமே நீ
வாழ்த்த தகுதியற்றனவாக
இருக்கலாம்

இதையும்
ஏற்றுக்கொள்கிறேன்

உன்னால்
கிறுக்கனானேன்
என்பதால்


-யாழ்_அகத்தியன்

மூச்சே என் முயற்சி...!

உயிர்கள் அற்ற உடல்களோடு
உறங்கி இருக்கிறேன்

பிணங்கள் எரியும் வெளிச்சத்தில்
நிலாரொட்டி உண்டிருக்கிறேன்

குண்டு மழைக்குள்ளும் குடையோடு
இடம்பெயர்ந்திருக்கிறேன்

அசைக்கமுடியாத
ஆணிவேரின் உச்சியிலிருந்து
சுனாமியால் தப்பியிருக்கிறேன்

இருபத்தி நான்கு மாதங்கள்
இருட்டறையில் சிவராத்திரி
மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன்

பெயர் தெரியாத பனிமலை தேசத்தில்
பிணமாய் உருண்டிருக்கிறேன்

கைப்பாசை உதவியோடு ஐந்துநாள்
பட்டினியை பிச்சை எடுத்து
முடித்திருக்கிறேன்

விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்

ஆனால்.....
என்னை மூச்சுவிட்டுக் கொண்டே
முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால்

மூச்சு விட்டுக் கொண்டே
இறந்துபோவேன் நான்.


-யாழ்_அகத்தியன்

Monday, October 8, 2007

என் நிலா நீ*

நிலா....
நீ வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருந்தேன்

நீ வரவேயில்லை
இன்னும் விடியவில்லை
எனக்கு.

*
நீ
இல்லாத இரவில்
பகலால் வாடுகிறேன்

நீ
இருக்கும் இரவில்
உனக்காய் பாடுகிறேன்.

*
உன்னைப் பாட பலர் இருந்தும்
உன்னைத் தேட நான் மட்டுமே

உன்னால் படிக்க பலர் இருக்கலாம்
உனக்காக வடிக்க நான் மட்டுமே

*
முட்கள் இல்லாத ரோஜாவை
எனக்கு பிடிக்காது நீயில்லாத
பகலைப் போல

*
துளைத்த புல்லாங்குழலில்தான்
இசை பிறக்கும் அது அழகு

இரவில் நீ இருக்கும்போது
பிறக்கும் கவிதை போல.

*
நிலவே....
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
நீ எனக்காக சூரியனிடம்
கடன்வாங்கி ஒளிவீசுவதால்


-யாழ்_அகத்தியன்

மனமே மனமே..!

மனதார உனை நினைத்து
மறக்காமல் உனக்காக மூச்சு
விடும் ஜிவன் நான்.

தினம் தினம் உனை மறக்கப்
பார்த்து கண்ணீரால் கரைந்து
போனாலும் உனை நினைத்தே
உயிர்பெறுகிறேன் நான்.

உன்
நினைவுகளால் நினைவுக்
கடலில் நீந்தினாலும்
உனை மறக்க முடியாமல்
மூழ்கித்தான் போகிறேன்
பலமுறை தரையில் நான்.

நீ
கற்றுக் கொடுத்த
எல்லாவற்றையும்
மறந்துவிட்டேன்
உன் விம்பத்தை
மறக்கப் போய்

மறப்பது எப்படி
என்பதையும் நான்.

தினசரி
திரையிட்டு பார்பதுண்டு
உன் முதல் நாளில் இருந்து
உன் இறுதி நாள் வரையான
நம்ப முடியாத உன் நடிப்புகளை
கண்ணிரை ஓடவிட்டு நான்.

உன்னை சுலபமாக காதலித்ததைவிட
உன்னிடம் காதலை சொல்ல எவ்வளவு
கஷ்ரப்பட்டேனோ....

அதே போல்தான்
உன்னை நினைப்பதைவிட
உன்னை மறக்கவும்............-


யாழ்_அகத்தியன்

Sunday, October 7, 2007

இமையானவளே...!

உன் வீட்டில் யாருக்கும்
கவிதைபிடிக்காதா..?

பார்...
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று

*
நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

*
உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை

இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என் கவிதை
போல

*
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா
கனவிலாவாது
ஒன்றாவோம்

*
உன் இரு வரி
உதடுகள்
ஒனறு சேர்ந்து
பேசும்
மிக அழகான
ஒரு சொல்
கவிதை "ம்"


-யாழ்_அகத்தியன்

Friday, October 5, 2007

காதலிக்கும் தேவதை!!!

உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

*
நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே உன்
நிழலாக

*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

*
நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்

பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

*
நீ
என்னைக் காதலிக்கிறாய்
என்பதை என்னால் நம்ப
முடியாமல் இருக்கிறது

பொறுக்கியை எப்பிடி
தேவதை காதலிக்கும்..?

-யாழ்_அகத்தியன்

Thursday, October 4, 2007

உயிரானவளே!!!

வாயாடியாய் இருந்தும்
அமைதியாய் வந்தமரும்
புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என்
இதய வகுப்பறையில்
நீ.

*
என் முதல் வரி
நீ காதலித்தையும்
மறுவரி
நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்

*
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்

*
உனை மாதத்தில் மூன்று
நாட்களில் என் மடியில்
தாலாட்டியதுதான் ஞாபகம்
வருகிறது தாய்மார்களை
காணுகையில்

*
வானவில்லாய் நீ வந்து
போனாலும் வானமாய்
காத்திருக்கும் என்
கவிதைகள் எப்போதும்
உனக்காக


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 3, 2007

அவள் யாரோ !!!

அன்று
உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்

இன்று
யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று

*
நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு

"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்

இன்று பிரிவை தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன செய்வேன்...?

*
தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு

உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை

*
தினமும்
நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்

உன்னால்
வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்

*
நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள் வேண்டுமே
என் தனிமைக்கு

-யாழ்_அகத்தியன்

Tuesday, October 2, 2007

என் கண்ணீரில் நீ!!!

எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்

*
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன்

அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்

*
நான் ஆனந்தக் கண்ணீரை
கவிதையாக்கினாலும் எப்படியோ
வந்து அழுதுவிட்டு போய்விடுகிறாய்
என் வாசகர்களை அழவைக்க

*
என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை

*

நீ பிரிந்தும்
சேவை செய்கிறாய்
என் கவிதைகளால்
பல காதலர்களை
சேர்த்து வைக்கிறாயே


-யாழ்_அகத்தியன்

Monday, October 1, 2007

நானறிவேன் உனை!!!

ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்

இறுதியில்
எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது
என் பேனா

இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்


-யாழ்_அகத்தியன்

Friday, September 28, 2007

ஈரமில்லா ரோஜா..!

நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்

*
நீ
எனக்குக் கொடுத்த தண்டனை
எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த
என்னைக் காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான்

*
நீ
என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது

ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்

*
உன்னால்
புகைக்கப்பட்ட சிகரட்
நான் என்றாலும் உனக்கு
முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்

*
என் வாழ்க்கை எனும்
பேருந்தில் இறங்கிப் போன
மறக்க முடியாத சாரதி நீ


-யாழ்_அகத்தியன்

Thursday, September 27, 2007

தொட்டால் சிணுங்கி

உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ

*
நான்
சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும்
சுடாத கிறுக்கல்
என் பெயர்

*
உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்

நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே

*
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்

*
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ


-யாழ்_அகத்தியன்

Tuesday, September 25, 2007

நினைவில் ஒரு காதல்

காதலைவிட
காதலர்களே
உனை
அதிகமாய் நினைவு
படுத்துகிறார்கள்

*
நீ
வாசிக்கிறாயோ இல்லையோ
உன்னால் பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை

*
நீ
அறிவாளிதான்
எழுத்துப் பிழைவிட்ட என்
கவிதைகளை கண்டும் சுட்டிக்
காட்டாமல் வாசிக்கிறாயே

*
எனக்கு
கிடைக்காமப்போன
அழகான பரிசு நீ
உன்னால்
கிடைத்த அசிங்கமான
பரிசு என் பேனா

*
உனக்காக எழுதிய
கவிதைகளை மறந்துவிட்டேன்

உன்னால் எழுதிய
கவிதைகளைத்தான்
ஞாபகம் வைத்திருக்கிறேன்

தயவு செய்து
நான் மறந்ததையாவது வந்து
ஞாபகப்படுத்திவிட்டுப்போ..

மறுபடியும் நான்
காதலனாக வேண்டும்

-யாழ்_அகத்தியன்

Monday, September 24, 2007

ஒரு நாள் ஒரு கனவு

மொழி தெரியா வயதில்
கண்களில் இதமாய் தினம்
நீ திரையானபோதும் உனை
நான் உணரவில்லை...

தலையணையின் துணையோடு
தனியாய் நான் தூங்கியபோதும்
வானவில்லாய் நீ வந்து
போனபோதும் உனை
நான் உணரவில்லை......

கறுப்பு வெள்ளையாய்
என் வாழ்வு ஆனபோதும்
பல வர்ணங்களாய் நீ வந்த
போதும் உனை நான்
உணரவில்லை....

நூற்றுக்கணக்காய் நான் கவி
எழுதிய போதும் என் பெயரே
பிடித்த கவிதை என்று அழகாய்
கண்களில் முத்தமிட்ட தேவதையை

கனவே நீ.....

காட்டிக் கொடுத்தபோதுதான்
உணர்ந்தேன் உன் சேவையையும்
என் பெயரின் இனிமையையும்


-யாழ்_அகத்தியன்

Saturday, September 22, 2007

காதலே போ...

உன்னால் கவிஞன்
ஆனதிலிருந்து

உனக்காக எழுதி எழுதி
என்அயுளைக் குறைத்துக்
கொண்டத்துதான் மிச்சம்

நீ
என்னை புரிந்து
கொண்டதுமில்லை
இனியும் புரிந்து
கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை

நீ
என்னை வாசித்ததில்தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்
இப்போதுதான் புரிகிறது
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக்
கொண்டேயிருக்க

என் அயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது.

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது

தண்ணீர் கூட
மூன்று தடவைக்கு
மேல் பொறுக்காது

நான்
எத்தனை ஆண்டுகள்
பொறுப்பது நீ என்னை
புரிந்து கொண்டு
வருவாய் என்று

போதும் இதுவரை
உனக்காக கவிதையோடு
நான் காத்திருந்தது

நான்
ஒன்றும் உன் பாலர்
ஆசிரியர் அல்ல
நீ
எதை எறிந்தலும்
நீ
எதை செய்தாலும்
அதை பொறுத்துக்
கொண்டு கற்றுக்
கொடுக்க

காணும் இதுவரை
என் கவிதைகளால்
நீ
அழகானதும்
நீ
சந்தோசப்பட்டதும்
என்னை
ஒரு கிறுக்கன்
என்று நினைத்து
நீ
சிரித்ததும்

ம்ம்..
என்ன சிரிக்கிறாயா?
சிரி செல்லம் சிரி
ஆசை தீர சிரி

இதுதான் நீ என்னை
நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு

ஏன் தெரியுமா?
நன்றிக்கடனுக்காய்
இதுவரை உனக்கு
மட்டுமே கவிஞனாக
இருந்த நான்

இன்று முதல் இந்த
உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க
போகிறேன்.

என்ன
கவலைப் படுகிறாயா?

கவலைப் படாதே இனி
உனக்காக என் பேனா
தலைகுனியாது இது
உறுதி.

என் கவிதையில் உன்னை
அழகாய் உக்கார வைத்த நானே
உனக்கு அர்த்தங்கள் புரியாததால்

இந்த கவிதையோடு
உன்னை மறந்துவிடுகிறேன்
என்னை மன்னித்துவிடு


-யாழ்_அகத்தியன்

தரிசனமானவளே...

உன்
அமைதியான
வேண்டுதலால்

பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி

*
நீ
சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு
பிடித்தது

தேவதை தோசம்

*
நீ
முருகனைச்
சுற்றுகையில்

முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்

*
அழகானவள்
கிடைக்க வேண்டும்
என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்

உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க
வேண்டும் என்கிறார்கள்

*
கடைசியில் எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது

பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா?
கோயிலைச் சுற்றுகிறார்களா?

-யாழ்_அகத்தியன்

Friday, September 21, 2007

காதலாகி

நம் வாய்ச் சண்டைகளை
எல்லாம் முடித்து வைக்கிறது
நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து

*
பலர் என் மேல்
படர்ந்தபோதும்
என்னுள் முளைத்தது
நீ மட்டும்தான்

*
நீ நடுங்கி நடுங்கி தந்த
உன் முதல் முத்தத்தை
என்னால் இன்னும்
மறக்க முடியவில்லை

நிலா நடுக்கத்தில்
பயந்து பயந்து
வாங்கியதால்

*

நீ
பூச் சூடி பொட்டு
வைக்கும்போது
முடித்து வைக்கிறேன்
உனக்கான

என் அன்றைய
கவிதையை

*
அடிக்கடி நீ காணாமல்
போகும் தருணங்களில்தான்
உணர்கிறேன் நீ தேவதை
என்பதை


-யாழ்_அகத்தியன்

Thursday, September 20, 2007

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வாருங்கள் பக்த கோடிகளே
உங்கள் வேண்டுதல்களை
என் மேல் உடைத்து

எனக்கும் சேர்த்து
வேண்டிக் கொள்ளுங்கள்.

என்றாவது நான் இதே
கோயிலில் சிலையாக
வேண்டும் என்று

நீங்களே கூறுங்கள்
எத்தனை நாள் மட்டும்தான்
நான் வாசல் கல்லாய்
இருப்பது.

எதிலும் இறைவன்
இருப்பான் என்பதை
நம்பும் நீங்கள்

ஏன்?
என்னை மட்டும் கல்லாய்
எண்ணி எண்ணுக்கணக்கின்றி
உங்கள் நேத்திக்காய்....

என் மேல் தேங்காய்களால்
எறிந்து என்னைக் காயப்படுதுகிறீர்கள்.

உண்மையைச்
சொல்லப் போனால்

இதே கோயிலுக்கு நானும்
சிலையாக வேண்டும்
என்றுதான் வந்தேன்.

நான் சிற்பியின் உளிக்கு
பயந்ததால் என்னை வாசலிலே
விட்டுவிட்டார்கள்

தேங்காய்களால் சிலையானால்
வணங்க வைப்பதாகக்கூறி.

பார்த்தீர்களா....
பக்தர்களே.....

நான் உளிக்கு பயந்ததால்தான்
என்னை ஊரே சேர்ந்து குட்டுகிறது.

எனவே
என் நிலையைப் பார்த்தாவது
புரிந்து கொள்ளுங்கள்.

பயந்தால் வாழமுடியாது என்பதை.

பரவாயில்லை எனக்குப் பழகிப்போச்சுகொண்டு
வந்த தேங்காயை என் மேல் உடைத்துவிட்டு
தெரிந்து கொள்ளூங்கள்.

வலிதாங்கும் இதயத்தைத்தான்
வாழ்க்கை வணங்கும்

குட்டு வாங்கும் தலையென்றால்
குட்ட மட்டுமே செய்யும் இந்த
உலகம் என்பதை.

-யாழ்_அகத்தியன்

Wednesday, September 19, 2007

பூவானவளே..

உனக்கு சந்தேகம்
அதிகம்தான்
இல்லையென்றால்
எதற்காக உன்னோடு
நட்சத்திரங்களையும்
கூட்டிப் போகிறாய்

*
என் இதயக்
கரும்பலகையில்
உன் பெயரே நிலவு

*
உன் இதழைத் தொட்டுக்
கொடுப்பதால்தான்
கேட்டு வாங்குகிறாய்
என் முத்தங்களை

*
முத்தக் கவிதைக்காய்
என் காது மடலையும்
விட்டு வைக்கவில்லை
உன் இதழ்கள்

*
அம்மா எவ்வளவுதான்
சுற்றிப் போட்டாலும்
உன் கண்படும் இடத்தில்
எப்போதும் நான்


-யாழ்_அகத்தியன்

Tuesday, September 18, 2007

கவிதையே தெரியுமா..?

தலைப்பின்றி
ஒரு கவிதை
அவள் பெயர்

*

வார்த்தைகள் வற்றிவிட்டது
கலந்து பேச வரச் சொல்லுங்கள்
என்னை ஏமாற்றியவளை
ஆணையிட்டான் கவிஞன்

*
காதலியின் பெயரை வைக்க
சம்மதித்தாள் என்னால்
தாயான மனசை புரிந்த
மனைவி

*
தாரம் தாயானதில்
புரிந்து கொண்டேன்
ஏன் தாரத்துக்கு முன்
தாய் என்பதை

*
இருந்த இடத்தில் இருந்து
உலகம் சுற்றுகிறாள்
என் கவிதையில் அவள்

*
கவிஞனின்
கல்யாணவீட்டில்
கவலைப்பட்டாள்
கவிஞனாக்கியவள்

*
கவனமாக இருக்கிறான்
காதலிக்கு கவிதை எழுதுபவன்
ஆயுத எழுத்தை பாவிக்கக்
கூடாது என்பதில்

*
காதலிக்கே மிஞ்சவில்லை
எப்படித் தானம் செய்வேன்
என் கவிதைகளை
அன்னைக்கு சொன்னான்
கவிமகன்

*
உனக்கு பிடிக்காத
என் கவி(குழந்)தைகளை
நீயே போட்டுவிட்டு போ
குப்பைத் தொட்டிக்குள்

*
சுமக்க முடியாமல்கவிக் கருவை
கலைக்கப் போனவன் கவலையோடு
திருப்பி வந்தான் தாமதம் என்ற
கவிதையோடு


-யாழ்_அகத்தியன்

Sunday, September 16, 2007

கடைசி ஆசை

அன்பே:
ஏன் பிரிந்தாய்?

நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.

எப்படி பிரிந்தாய்?

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.

சொல் கண்ணே
சொல்

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

எங்கே நீ சொல்
அன்பே சொல்..

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது

என் கண்ணீர் எனும்
மழையாலும்

உன் நினைவெனும்
புயலாலும்.

வா அன்பே வா...

நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்

வாழ விடாமல்
வைத்துவிடு

அது போதும்

உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்

என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்.

வா அன்பே வா


-யாழ்_அகத்தியன்

Friday, September 14, 2007

யார் அந்த நிலா..

முகமே தெரியாத
உன் கண்களுக்காக

தினம் ஒரு கவித்
தூண்டிலோடு

நான் காத்துக்
கிடந்தாலும்

மனதில் சின்ன
பயம்

யாருக்காக போட்ட
தூண்டிலில்

நான் மாட்டினேன்
என

நீ கேட்பாயோ
என்று


-யாழ்_அகத்தியன்

Thursday, September 13, 2007

என் காதல் நீ...

என் முதல்
காதல் நீ

நான்
காதலித்ததே
உனக்கு தெரியாது.

என் கடைசி
காதல் நீ

நான்
உன்னை மட்டும்
காதலித்ததுதான்
உனக்கு தெரியும்.


-யாழ்_அகத்தியன்

Wednesday, September 12, 2007

ஈழத்து அகதியாய் நான்...

நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்த
விட்டில் இன்று நான்

*
அம்மா அங்கே
அம்மாக்காக
அகதியாய்
இங்கே நான்

*
காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக

*
தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்

*
வகுப்பறையில் மகள்
படிக்காட்டியும் உயிரோடு
திரும்ப வேண்டும்
சாமியறையில் தாய்

*
நான் இறந்தால் கொள்ளி
வைக்க வந்துவிடாதே நான்
பெற்றதில் உன்னை மட்டும்தான்
காப்பாற்ற முடிந்தது

*
அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால்

அம்மா கவலையாய் பேசுவதை
கேக்கவே நேரம் முடிந்துடும்

*
என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்

என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று

*
எப்ப அம்மா சொந்த
ஊருக்கு போவோம்

பொறு போவோம்

இருபது வருசமா
இதைத்தானே அம்மா
சொல்கிறாய்

*
தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு நாளை விதவை
ஆகலாம் என்று தெரிந்தும்

*
சமாதானம் என்றால்
என்ன அப்பா
சண்டைக்கான
ஒத்திகை மகனே


-யாழ்_அகத்தியன்

சிலையானவளே...

நீ கொடுத்த முத்தத்தால்
மொய்த்துக் கொள்கின்றன
என்னைச் சுற்றி தேனீக்கள்

*
அழகைப் பற்றி எழுதச்
சொன்னார்கள்

நான் உன்னைப்
பற்றி எழுதினேன்

உன்னைப் பற்றி எழுதச்
சொன்னார்கள்

நான் கவிதையைப்
பற்றி எழுதினேன்

*
உன்னைப் பார்த்து
எழுதிய கவிதைகள்தான்
என் சொந்தக் கவிதைகள்

*
நிலவின் கையால்
சாப்பிட்டபின்
நிலாச்சோறு
பிடிக்கவில்லை

*
எழுந்தாலும் விழச்
சொல்லும் உன்
கன்னக்குழி


-யாழ்_அகத்தியன்

Tuesday, September 11, 2007

பேனாவோடு நான்...

என்னவளே...

என்ன யோசிக்கிறாய்..
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா..?

ஆமாம்..
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்

உனக்கு தெரியுமோ தெரியாது
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று

ஏன் தெரியுமா...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை

வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக் கவலைப்படுவேன்
என்பதால்தான்.

பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்து
கொண்டிருக்கிறேன்.

இந்த உலகம் கவலைப்படுகிறது
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்
என்று

உண்மைதான் அதற்காக நான்
அதிகம் வருத்தப்படுவதுண்டு
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்...

நான் உனக்காய் எழுதுவதில்லை
உன்னால்தான் எழுதுகிறேன் என்று.

உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்

இல்லையென்றால்...
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்.

நீ என்னைக் காதலித்த
காலங்களை விட உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்
கொண்டேயிருக்கும் பேனாவின்
காலங்கள்தான் அதிகம்

இதனால்தான் சொன்னார்களோ...
காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை காதலியென்று

பேனா பாவம் பொல்லாததுதான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது அதனால்தான்

என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும் உன் பெயர்
சொல்லித் துடித்துக்
கொண்டிருந்தேன்.

என் கவி ரசிகைகளைவிடஎ
ன் பேனாதான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது

ஏன் தெரியுமா..
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்

சேர்த்து தந்தும் தன்னைக்
காதலிக்காமல் உன்னை
மட்டும் நான் காதலித்துக்
கொண்டேயிருப்பதால்.

உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்துதான்
உன் பழக்கங்களை தெரிந்து
கொண்டேன்

இப்பொழுதெல்லாம் பேனா எழுத
ஆரம்பித்தால் நான் எதுவும் பேசுவதில்லை
பேசி பிடிவாதத்தால் வலிக்கபோவது
என் கை என்பதால்.

இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும்
ஒருவன்

என் பெற்றோர்களுக்கும்
எழுதப்படிக்க தெரியாது.

என்னவளே வா..
உனக்காய் எழுதி எழுதிஎன்
பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப் போ

இல்லையேல்
என் கைகளை
முறித்துவிட்டு போ

எல்லாம் உன் கையில்தான்
இருக்கிறது வா..


-யாழ்_அகத்தியன்

Friday, September 7, 2007

நிலவானவளே...

நீ
என்னைக் காதலிக்கவில்லை
என்ற சொல்லை எறிந்தால்
பதிலுக்கு உனக்கு மட்டும்

கவிதைகளை தந்து கொண்டே
இருக்கும் மரம் நான்

*
நான்
மழைக்கு
பள்ளிக்கூடம்
ஒதுங்காததில்
கவலைப்பட்டது
என்றால் அது

உனக்கு
கவிதை எழுத
துடித்த போது
மட்டும்தான்

*
நல்ல வேளை
நான் கவிதை எழுத
முயற்சிக்கவில்லை

அப்படி எழுதியிருந்தால்
உன்னை விட அழகான
கவிதையை என்னால்
எழுதியிருக்க முடியாது

*
நீ
கட்டி அணைத்தால்
தூங்காது தலையணை

நான்
கட்டிப்பிடித்தால்
தூங்காது பேனா

*
உன்னைப் பார்த்து
யார் யாரெல்லாம்
பொறாமைப்
படுகிறார்களோ

தயவு செய்து
அவர்களைப் பார்த்து நீ
கோவித்து விடாதே

அவர்கள்தான் என்
கவிதைகளின்
ரசிகர்கள்


-யாழ்_அகத்தியன்

என்னவளே...

இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர

*
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது உன்னை
நான் கவிதையாய் காதலிப்பதை

*
உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று

*
நீ
எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ
என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்

*
நீ
எது கேட்டாலும்
சொல்வேன்

உன் அழகுகளில்
எந்த அழகுபிடிக்கும்
என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்

சொன்னால்...

உன் எல்லா
அழகுகளின்
கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.


-யாழ்_அகத்தியன்

இதயமானவளே...

காதலித்தால் இதயங்கள்
இடம் மாறுமாமே வா
இதயங்களை மாற்றிவிட்டு
காதலித்து பார்ப்போம்

*
நான் வார்த்தை தேடி
அலைந்தபோது வந்து
கிடைத்த கவிதை நீ

*
பயந்து பயந்துதான் உன்னை
என் அம்மாவுக்கு அறிமுகப்
படுத்தினேன்

அவா
உன்னை ஆலாத்தி எடுத்து
வரவேற்பா என்று தெரியாமல்

*
வறண்ட பூமியை
விட நீ வைத்திருக்கும்
குடைதான் மழைக்காக
தவிக்கிறது

*
உலகம் அழியும் நாளில்
நான் உயிரோடிருந்தால்
தற்கொலையாளியாய்

உன் மேல் பாய்ந்துதான்
என்னை அளித்துக் கொள்வேன்

-யாழ்_அகத்தியன்

காதலானவளே...

உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு

*
உனக்காய் கவி எழுத
கற்பனைக் குதிரையை
தட்டிவிட்டேன் அது
உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு
தூங்கிவிட்டது

*
என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்

*
நீ
குளிக்கையில்
தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்

*
உன்னைக் கவிதையாய்
வெளியிட விரும்பி
இன்றுவரை

உன் கண்களை பற்றித்தான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்


-யாழ்_அகத்தியன்

Thursday, September 6, 2007

தொடாத சிணுங்கி

உன் மெளனம் கூட
ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப்
பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று

*
பூச் செடிக்கு பக்கத்தில்
வைத்து உன்னை படம்
எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை
தெரிகிறது

*
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்

*
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர

*
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்போடும்
வரைதான் அழகாக தெரிகிறது
வாசல்

-யாழ்_அகத்தியன்

யன்னல் நிலவு

மறக்க முடியாத உன்
முதல் முத்தம் வேண்டாம்
நான் இறக்க வேண்டும்
கடைசி முத்தம் கொடு

*
நீ தூங்குவதே இல்லையா
என் தூக்கங்களில் கனவாய்
வருகிறாயே

*
எல்லாரும் கவிதைக்குள்
கருத்தைதான் தேடுவார்கள்
நீ மட்டும் உன்னைத் தேடுவாய்

*
நீ வாங்கிக் கொடுத்த
செருப்போடுதான் இன்றும்
நடக்கிறேன் கைகளில்
சுமந்தபடி

*
என் கவிதைகளை எப்படி
படிக்க வருகிறாய் என்பதை
கற்றுக்கொடு

நீ குளிப்பதை எப்படி
எட்டிப் பார்ப்பது என்பதை
கற்றுக் கொள்கிறேன்

-யாழ்_அகத்தியன்

முதல் கவிதை...

இதுவரை கணக்குகளை மட்டும்
விளங்கபடுத்த என் கையோடு
கூடிய பேனா

முதல் முறை உனக்கு கவி எழுத
என் கையோடு கூட்டியதில் வந்த
கழித்தல்கள் இவை

தயவு செய்து சிரித்துவிடாதே
கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்
இன்னும் கலைந்துவிடும்

பல கோடி கவிதைகளை கண்டபின்னும்
பசியாறவில்லை இன்னும் காதலுக்கு
எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு
கவி

சிலையின் கையில் கொடுக்கப்பட்ட
பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன்
கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

எண்ணில் விட்டதில்லை
எழுத்துக்களில் விடுவதுண்டு
பிழை எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

உனக்காய் கவி எழுத விடிய விடிய
யோசித்ததில் இரவுகளின் நீளத்தை
என்னால் இப்படித்தான் அளக்க
முடிந்தது

நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
நமக்கு மிஞ்சப் போவது
எதுவுமில்லை என்று

தயவு செய்து அன்பே
என்னை மன்னித்துவிடு

உன்னை கணக்கிடச்சொல்
அரை நொடி போதும் என்
பேனாவுக்கு

உனக்காய் கவி எழுதச்சொல்
அரை ஜென்மம் போதாது

அன்பே...
காதலுக்கு கவிதை
அழகுதான் ஆனால்
கல்யாணத்துக்கு
கணக்கு மட்டும்தான்
அவசியம் எனவே

வா அன்பே வா
இன்றே ஆரம்பிப்போம்
நம் கணக்குகளை


-யாழ்_அகத்தியன்

Wednesday, September 5, 2007

தொலைத்த கவிதை...

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது

தயவு செய்து வாசித்துவிடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்துவிடும்

காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கியபடியே
கிடக்கிறது என் காதல் உன்னால்

காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்

என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது

உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல்தான்

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்தபோது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று

நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால்தான் வாங்கிக் கொண்டேன் என்பதை
அனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக் கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை

என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்

உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதைவிட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலைதான் எனக்கு

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும்தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப் போவது
எங்கள் அயுல்தானே

பாவப்பட்டவனின் கைக்கு விலைபோன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்

இன்று என்னைவிட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழவிட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லிவிடுகிறேன்

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்

முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்

-யாழ்_அகத்தியன்

Tuesday, September 4, 2007

அன்புடன் நட்பு...1

எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும்
நட்பு

*
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்

என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு

*
காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு


-யாழ்_அகத்தியன்

Monday, September 3, 2007

கவியானவளே...[12]

உன் பார்வையில்
பார்த்துக் கொண்டேன்
என் கண் காட்சியை

*

உன்னை சுற்றியதில்
சேலைக்கு கிடைத்தது
அழகான தேவதை

*
தேடிப் பார்க்க தொடங்கினேன்
எனக்குள் இருக்கும் உன்னைக்
கொண்டு உனக்குள் இருக்கும்
என்னை

*
உன்னை பார்த்த களைப்பில்
ஓய்வெடுக்க விரும்புகிறது
கண்கள்
உழைக்க விரும்புகிறது
உதடுகள்

*
முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான் உன்
உதட்டில் ஒரு மச்சம்

-யாழ்_அகத்தியன்

நீ

அவிழ்க்க முடியாத விடுகதை நீ

*
பிடிவாதத்தின் கொள்கை நீ

*

மறதியின் மறு பெயர் நீ

*
தண்டிக்க மட்டும் தெரிந்த ஆசிரியை நீ

*
கண்டு பிடிக்காத அதிசய நிலா நீ

*

காதல் உலகம் தேடும் பயங்கரவாதி நீ

*
கவிதைகளை வேவு பார்க்கும் விமானம் நீ

*
ஞாபகப்படுத்த மட்டும் தெரிந்த பாடல் நீ

*
கிழித்தெறிந்த கவிதை நீ

*
மாறாத நோய் நீ

*
மறக்க முடியாத சுனாமி நீ

*
என் உயிரின் உச்சரிப்பு நீ

-யாழ்_அகத்தியன்

Sunday, August 26, 2007

கவியானவளே...[11]

சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டிய
பின்னும் தூறும் துளிகள்
எனக்கு

*
உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான்
ஆனேன் கவிஞனாய்....

*
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே
இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை

*
நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய் நீ
சிரிக்காத போதும் சிரிக்க

*
உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்

*
உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு

-யாழ்_அகத்தியன்