காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதை
காதலி மட்டும்
சுமப்பதில்லை
இருவரும் சுமப்பது
காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதால்
அழமட்டுமல்ல
பேசாமல் அழவும்
தெரியும்
காதல் ஒரு
குழந்தைதான்
ஆசைப்பட்டால் அது
கிடைக்கும் வரை அழும்
காதல் ஒரு
குழந்தைதான்
எதைக் கொடுத்தாலும்
உடைத்துப் பார்க்கும்
காதல் ஒரு
குழந்தைதான்
சிரிக்கவும்
அழவும்தான்
தெரியும்
காதல் ஒரு
குழந்தைதான்
வேண்டும்
என்றாலும்
அழும்
வேண்டாம்
என்றாலும் அழும்
காதல் ஒரு
குழந்தைதான்
எல்லாராலும் தூக்க முடியும்
எல்லாரலும் அழுவதை
நிறுத்த முடியாது
காதல் ஒரு
குழந்தைதான்
ஆனாலும்
அதை யாராலும்
எறியவும் முடியாது
அதை யாரலும்
அனாதையாக்கவும்
முடியாது
அதற்கு
பெற்றொர்களே
கிடையாது
ஆம்
யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி
பிறப்பது இந்தக் காதல்
குழந்தை மட்டும்தான்.
-யாழ்_அகத்தியன்
Tuesday, October 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
ஆமாம் காதல் ஒரு குழந்தைதான் அதை அன்போடு வளர்க்க வேண்டும்!!
வித்தியாசமான சிந்தனை நண்பரே!!
"யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி
பிறப்பது இந்தக் காதல்
குழந்தை மட்டும்தான்."
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
Post a Comment