Saturday, October 20, 2007

அடுத்த ஜென்மத்திலாவது...!

நான் உன் கைக்கடிகாரமாய்
பிறந்திருக்கலாம் நீயாக எனை
பார்க்காமல் போனாலும் யாரவது
நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்

*
உன்
கால்கொலுசாய் நான்
பிறந்திருக்கலாம் நீ
நடக்கையிலாவது எனை
இந்த உலகம்திரும்பி
பார்த்திருக்கும்

*
உன் கூந்தல் சீவும் சீப்பாய்
பிறந்திருக்கலாம் சிக்கல்
எடுக்கும் ஞானியென எனை
உன்னோடு வைத்திருப்பாய்

*
நான் உன் நெற்றிப்பொட்டாக
பிறந்திருக்கலாம் கொஞ்ச நேரமாக
இருந்தாலும் உன்னை பார்க்க வைத்த
பெருமையோடு உன் கையாலே
இறந்துபோயிருப்பேன்

*
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய்
பிறந்துவிட்டேன்

அடுத்த ஜென்மத்திலாவது
நீ போடும் செருப்பாக
பிறக்க வேண்டும் நான்

அப்போதுதானே
என்னை பிடித்து உன்னை
காதலிபவனுக்கு அடிப்பாய்


-யாழ்_அகத்தியன்

No comments: