Tuesday, October 30, 2007

அன்பானவளே..!

எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்

அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்

*
என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது

*
நீ
ஆசைபட்ட பொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்

பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்

*
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்

*
பூ
செடியை சுற்றுமா என்ன..?

நீ
துளசிச் செடியை
சுற்றும்போது

என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்


-யாழ்_அகத்தியன்

No comments: