Thursday, December 24, 2009

எனக்கான கவி நீ *1*

இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ

*

யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று

என்னவள் கண்
பட்டதால்தானே

வாழ்கிறது
என் கவிதைகள்

*

உன் மூக்குத்தி மின்னுவதில்
தெரிகிறது வானவில்லின்
அழகு

*

உன் பாதச்சுவடெங்கும்
தேங்கிய மழை நீரில்
உன் முகம்
காட்டுகிறது நிலா

*
வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்

*

உன் வருடலுக்காய்
ஏங்குகிறது
என் நரைமுடிகள்


-யாழ்_அகத்தியன்