Monday, December 3, 2007

உனக்காகவே நான்...!

இரவு வந்தும்
விடியப் போகிறது
இன்னும்
தூங்கவில்லை நான்

உணவுகள் படைக்கப்
பட்டிருக்கிறது
இருந்தும்
பசிப்பதற்காய் விரதம்
இருக்கிறேன் நான்

குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள் கடந்தபோதும்
மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே நான்

என்ன செய்தாய் எனை
உன்னை காதலித்ததை
மட்டும்தான் நான் செய்தேன்

யாருக்கும் செவி சாய்க்காது
எப்படியோ இருந்த என்னை

இருந்தால் இப்படித்தான்
இருக்க வேண்டும்
என என்னை செதுக்கிக்
கொண்டிருக்கிறாயே

அன்பே
இப்போதாவது நீ
கிடைத்திருக்கிறாய்
என ஒரு பக்கத்தில்
நான் சந்தோசப்பட்டாலும்

மறுபக்கத்தில் உன் காதல்
இதுவரை நீ எங்கிருந்தாய்
என என்னைக் கவலைப்பட
வைத்துக் கொண்டுதான்
இருக்கிறது


-யாழ்_அகத்தியன்

No comments: