உன்னை நான்
ஆசைப்படுவதை
யாரிடமும்
சொல்லிவிடாதே
நான் கதைக்காமல்
விட்டவர்கள் எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்
*
உன் மேலான என்
ஆசையெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் ஆசையில் ஒன்றான
என் கோவத்தை உன்னிடம்
காட்டவேண்டும் என்பதை
நிராசையாக்கிவிட்டது
*
விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை
உன் விளையாட்டுத்தனம்
*
உன் வீட்டில் நீ
வாயாடியாம்
பொய்சொல்கிறார்கள்
இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே
*
ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
உன் மேல் கோவிக்கும்
போதுதான் என் ஆசைகள்
எல்லாம் எழுந்து நிற்கின்றன
-யாழ்_அகத்தியன்
Friday, December 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment