| சிறு துளி பெருவெள்ளம் உன் கூந்தல் துவட்டிய பின்னும் தூறும் துளிகள் எனக்கு * உன்னைக் காதலித்ததால் அல்ல நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன் கவிஞனாய்.... * விரும்பித்தான் காதலித்தேன் உன்னை விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை * நீ சூடும் பூவுக்கு எப்படி கற்றுக்கொடுத்தாய் நீ சிரிக்காத போதும் சிரிக்க * உன் கண்களில் படித்துவிட்டுத்தான் வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு கவிதைகளையும் பல கண்களுக்காய் * உன்னைக் காதலித்ததால் தலைக்கனம் எனக்கு நீ காதலிக்காததால் தலைக்கனம் என் கவிதைகளுக்கு -யாழ்_அகத்தியன் |
Sunday, August 26, 2007
கவியானவளே...[11]
கைதியாய் நான்
| என்னை அழகாய் எற்றிவிட்டாள் குற்றவாளிக் கூண்டில் அனுபவிக்கிறேன் அவள் எனக்கு செய்த குற்றத்துக்கும் சேர்த்து தண்டனையை -யாழ்_அகத்தியன் |
பிடிவாதம்
| நீ அனுப்பும் மின்னஞ்சல் கூட உன்னைப் போல் மெதுவாகத்தான் வருகிறது பிடிவாததோடு வருவதால் -யாழ்_அகத்தியன் |
Subscribe to:
Comments (Atom)
