Tuesday, October 23, 2007

உன்னதமானவளே..!

நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை தந்துகொண்டே
இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை
படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய்
என்ற நம்பிக்கையில்

*
தினமும் நீ என்னை பார்த்தும்
பாராமல் போகிறாய் அதையும்
பார்ப்பம் பாரமல் பார்க்காம
எத்தனை மட்டும் பார்க்கப்
போறாயென்று

*
சொன்னா கேக்க மாட்டிங்களா
என்றதை கேக்கிறதற்காகவே
தினமும் மழையில் நனைந்து
வரலாம்

*
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ

*
நான் தொடர்ந்தும் உனக்காகவே
கவிதை எழுத வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசை உனக்கு
என் கவிதையை படித்துவிட்டு
யாரு எழுதிய கிறுக்கலுக்கு
வாழ்த்துகிறாயே


-யாழ்_அகத்தியன்

No comments: