வாயாடியாய் இருந்தும்
அமைதியாய் வந்தமரும்
புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என்
இதய வகுப்பறையில்
நீ.
*
என் முதல் வரி
நீ காதலித்தையும்
மறுவரி
நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்
*
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்
*
உனை மாதத்தில் மூன்று
நாட்களில் என் மடியில்
தாலாட்டியதுதான் ஞாபகம்
வருகிறது தாய்மார்களை
காணுகையில்
*
வானவில்லாய் நீ வந்து
போனாலும் வானமாய்
காத்திருக்கும் என்
கவிதைகள் எப்போதும்
உனக்காக
-யாழ்_அகத்தியன்
Thursday, October 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
அது என்ன தாய்மார்களைப் பார்க்கும்போது மட்டும் ஞாபகம் வருது?
ஆசையில் அவளைத்
தினம் தாலாடினாலும்
அவள் அழும்போது
தாலாட்டியது மாதத்தில்
முன்று நாட்களில்தானே
(குழந்தை அழும்போது
தாய்மார்கள்தானே தாலட்டுகிறார்கள்
அதனால்தான் தாய்மார்களை காணுகையில்
அவள் எனக்கு அழும் குழந்தையான நாட்கள்
ஞாபகம் வருகிறது)
Post a Comment