Friday, September 28, 2007

ஈரமில்லா ரோஜா..!

நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்

*
நீ
எனக்குக் கொடுத்த தண்டனை
எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த
என்னைக் காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான்

*
நீ
என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது

ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்

*
உன்னால்
புகைக்கப்பட்ட சிகரட்
நான் என்றாலும் உனக்கு
முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்

*
என் வாழ்க்கை எனும்
பேருந்தில் இறங்கிப் போன
மறக்க முடியாத சாரதி நீ


-யாழ்_அகத்தியன்

Thursday, September 27, 2007

தொட்டால் சிணுங்கி

உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ

*
நான்
சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும்
சுடாத கிறுக்கல்
என் பெயர்

*
உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்

நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே

*
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்

*
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ


-யாழ்_அகத்தியன்

Tuesday, September 25, 2007

நினைவில் ஒரு காதல்

காதலைவிட
காதலர்களே
உனை
அதிகமாய் நினைவு
படுத்துகிறார்கள்

*
நீ
வாசிக்கிறாயோ இல்லையோ
உன்னால் பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை

*
நீ
அறிவாளிதான்
எழுத்துப் பிழைவிட்ட என்
கவிதைகளை கண்டும் சுட்டிக்
காட்டாமல் வாசிக்கிறாயே

*
எனக்கு
கிடைக்காமப்போன
அழகான பரிசு நீ
உன்னால்
கிடைத்த அசிங்கமான
பரிசு என் பேனா

*
உனக்காக எழுதிய
கவிதைகளை மறந்துவிட்டேன்

உன்னால் எழுதிய
கவிதைகளைத்தான்
ஞாபகம் வைத்திருக்கிறேன்

தயவு செய்து
நான் மறந்ததையாவது வந்து
ஞாபகப்படுத்திவிட்டுப்போ..

மறுபடியும் நான்
காதலனாக வேண்டும்

-யாழ்_அகத்தியன்

Monday, September 24, 2007

ஒரு நாள் ஒரு கனவு

மொழி தெரியா வயதில்
கண்களில் இதமாய் தினம்
நீ திரையானபோதும் உனை
நான் உணரவில்லை...

தலையணையின் துணையோடு
தனியாய் நான் தூங்கியபோதும்
வானவில்லாய் நீ வந்து
போனபோதும் உனை
நான் உணரவில்லை......

கறுப்பு வெள்ளையாய்
என் வாழ்வு ஆனபோதும்
பல வர்ணங்களாய் நீ வந்த
போதும் உனை நான்
உணரவில்லை....

நூற்றுக்கணக்காய் நான் கவி
எழுதிய போதும் என் பெயரே
பிடித்த கவிதை என்று அழகாய்
கண்களில் முத்தமிட்ட தேவதையை

கனவே நீ.....

காட்டிக் கொடுத்தபோதுதான்
உணர்ந்தேன் உன் சேவையையும்
என் பெயரின் இனிமையையும்


-யாழ்_அகத்தியன்

Saturday, September 22, 2007

காதலே போ...

உன்னால் கவிஞன்
ஆனதிலிருந்து

உனக்காக எழுதி எழுதி
என்அயுளைக் குறைத்துக்
கொண்டத்துதான் மிச்சம்

நீ
என்னை புரிந்து
கொண்டதுமில்லை
இனியும் புரிந்து
கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை

நீ
என்னை வாசித்ததில்தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்
இப்போதுதான் புரிகிறது
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக்
கொண்டேயிருக்க

என் அயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது.

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது

தண்ணீர் கூட
மூன்று தடவைக்கு
மேல் பொறுக்காது

நான்
எத்தனை ஆண்டுகள்
பொறுப்பது நீ என்னை
புரிந்து கொண்டு
வருவாய் என்று

போதும் இதுவரை
உனக்காக கவிதையோடு
நான் காத்திருந்தது

நான்
ஒன்றும் உன் பாலர்
ஆசிரியர் அல்ல
நீ
எதை எறிந்தலும்
நீ
எதை செய்தாலும்
அதை பொறுத்துக்
கொண்டு கற்றுக்
கொடுக்க

காணும் இதுவரை
என் கவிதைகளால்
நீ
அழகானதும்
நீ
சந்தோசப்பட்டதும்
என்னை
ஒரு கிறுக்கன்
என்று நினைத்து
நீ
சிரித்ததும்

ம்ம்..
என்ன சிரிக்கிறாயா?
சிரி செல்லம் சிரி
ஆசை தீர சிரி

இதுதான் நீ என்னை
நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு

ஏன் தெரியுமா?
நன்றிக்கடனுக்காய்
இதுவரை உனக்கு
மட்டுமே கவிஞனாக
இருந்த நான்

இன்று முதல் இந்த
உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க
போகிறேன்.

என்ன
கவலைப் படுகிறாயா?

கவலைப் படாதே இனி
உனக்காக என் பேனா
தலைகுனியாது இது
உறுதி.

என் கவிதையில் உன்னை
அழகாய் உக்கார வைத்த நானே
உனக்கு அர்த்தங்கள் புரியாததால்

இந்த கவிதையோடு
உன்னை மறந்துவிடுகிறேன்
என்னை மன்னித்துவிடு


-யாழ்_அகத்தியன்

தரிசனமானவளே...

உன்
அமைதியான
வேண்டுதலால்

பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி

*
நீ
சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு
பிடித்தது

தேவதை தோசம்

*
நீ
முருகனைச்
சுற்றுகையில்

முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்

*
அழகானவள்
கிடைக்க வேண்டும்
என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்

உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க
வேண்டும் என்கிறார்கள்

*
கடைசியில் எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது

பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா?
கோயிலைச் சுற்றுகிறார்களா?

-யாழ்_அகத்தியன்

Friday, September 21, 2007

காதலாகி

நம் வாய்ச் சண்டைகளை
எல்லாம் முடித்து வைக்கிறது
நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து

*
பலர் என் மேல்
படர்ந்தபோதும்
என்னுள் முளைத்தது
நீ மட்டும்தான்

*
நீ நடுங்கி நடுங்கி தந்த
உன் முதல் முத்தத்தை
என்னால் இன்னும்
மறக்க முடியவில்லை

நிலா நடுக்கத்தில்
பயந்து பயந்து
வாங்கியதால்

*

நீ
பூச் சூடி பொட்டு
வைக்கும்போது
முடித்து வைக்கிறேன்
உனக்கான

என் அன்றைய
கவிதையை

*
அடிக்கடி நீ காணாமல்
போகும் தருணங்களில்தான்
உணர்கிறேன் நீ தேவதை
என்பதை


-யாழ்_அகத்தியன்

Thursday, September 20, 2007

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வாருங்கள் பக்த கோடிகளே
உங்கள் வேண்டுதல்களை
என் மேல் உடைத்து

எனக்கும் சேர்த்து
வேண்டிக் கொள்ளுங்கள்.

என்றாவது நான் இதே
கோயிலில் சிலையாக
வேண்டும் என்று

நீங்களே கூறுங்கள்
எத்தனை நாள் மட்டும்தான்
நான் வாசல் கல்லாய்
இருப்பது.

எதிலும் இறைவன்
இருப்பான் என்பதை
நம்பும் நீங்கள்

ஏன்?
என்னை மட்டும் கல்லாய்
எண்ணி எண்ணுக்கணக்கின்றி
உங்கள் நேத்திக்காய்....

என் மேல் தேங்காய்களால்
எறிந்து என்னைக் காயப்படுதுகிறீர்கள்.

உண்மையைச்
சொல்லப் போனால்

இதே கோயிலுக்கு நானும்
சிலையாக வேண்டும்
என்றுதான் வந்தேன்.

நான் சிற்பியின் உளிக்கு
பயந்ததால் என்னை வாசலிலே
விட்டுவிட்டார்கள்

தேங்காய்களால் சிலையானால்
வணங்க வைப்பதாகக்கூறி.

பார்த்தீர்களா....
பக்தர்களே.....

நான் உளிக்கு பயந்ததால்தான்
என்னை ஊரே சேர்ந்து குட்டுகிறது.

எனவே
என் நிலையைப் பார்த்தாவது
புரிந்து கொள்ளுங்கள்.

பயந்தால் வாழமுடியாது என்பதை.

பரவாயில்லை எனக்குப் பழகிப்போச்சுகொண்டு
வந்த தேங்காயை என் மேல் உடைத்துவிட்டு
தெரிந்து கொள்ளூங்கள்.

வலிதாங்கும் இதயத்தைத்தான்
வாழ்க்கை வணங்கும்

குட்டு வாங்கும் தலையென்றால்
குட்ட மட்டுமே செய்யும் இந்த
உலகம் என்பதை.

-யாழ்_அகத்தியன்

Wednesday, September 19, 2007

பூவானவளே..

உனக்கு சந்தேகம்
அதிகம்தான்
இல்லையென்றால்
எதற்காக உன்னோடு
நட்சத்திரங்களையும்
கூட்டிப் போகிறாய்

*
என் இதயக்
கரும்பலகையில்
உன் பெயரே நிலவு

*
உன் இதழைத் தொட்டுக்
கொடுப்பதால்தான்
கேட்டு வாங்குகிறாய்
என் முத்தங்களை

*
முத்தக் கவிதைக்காய்
என் காது மடலையும்
விட்டு வைக்கவில்லை
உன் இதழ்கள்

*
அம்மா எவ்வளவுதான்
சுற்றிப் போட்டாலும்
உன் கண்படும் இடத்தில்
எப்போதும் நான்


-யாழ்_அகத்தியன்

Tuesday, September 18, 2007

கவிதையே தெரியுமா..?

தலைப்பின்றி
ஒரு கவிதை
அவள் பெயர்

*

வார்த்தைகள் வற்றிவிட்டது
கலந்து பேச வரச் சொல்லுங்கள்
என்னை ஏமாற்றியவளை
ஆணையிட்டான் கவிஞன்

*
காதலியின் பெயரை வைக்க
சம்மதித்தாள் என்னால்
தாயான மனசை புரிந்த
மனைவி

*
தாரம் தாயானதில்
புரிந்து கொண்டேன்
ஏன் தாரத்துக்கு முன்
தாய் என்பதை

*
இருந்த இடத்தில் இருந்து
உலகம் சுற்றுகிறாள்
என் கவிதையில் அவள்

*
கவிஞனின்
கல்யாணவீட்டில்
கவலைப்பட்டாள்
கவிஞனாக்கியவள்

*
கவனமாக இருக்கிறான்
காதலிக்கு கவிதை எழுதுபவன்
ஆயுத எழுத்தை பாவிக்கக்
கூடாது என்பதில்

*
காதலிக்கே மிஞ்சவில்லை
எப்படித் தானம் செய்வேன்
என் கவிதைகளை
அன்னைக்கு சொன்னான்
கவிமகன்

*
உனக்கு பிடிக்காத
என் கவி(குழந்)தைகளை
நீயே போட்டுவிட்டு போ
குப்பைத் தொட்டிக்குள்

*
சுமக்க முடியாமல்கவிக் கருவை
கலைக்கப் போனவன் கவலையோடு
திருப்பி வந்தான் தாமதம் என்ற
கவிதையோடு


-யாழ்_அகத்தியன்

Sunday, September 16, 2007

கடைசி ஆசை

அன்பே:
ஏன் பிரிந்தாய்?

நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.

எப்படி பிரிந்தாய்?

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.

சொல் கண்ணே
சொல்

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

எங்கே நீ சொல்
அன்பே சொல்..

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது

என் கண்ணீர் எனும்
மழையாலும்

உன் நினைவெனும்
புயலாலும்.

வா அன்பே வா...

நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்

வாழ விடாமல்
வைத்துவிடு

அது போதும்

உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்

என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்.

வா அன்பே வா


-யாழ்_அகத்தியன்

Friday, September 14, 2007

யார் அந்த நிலா..

முகமே தெரியாத
உன் கண்களுக்காக

தினம் ஒரு கவித்
தூண்டிலோடு

நான் காத்துக்
கிடந்தாலும்

மனதில் சின்ன
பயம்

யாருக்காக போட்ட
தூண்டிலில்

நான் மாட்டினேன்
என

நீ கேட்பாயோ
என்று


-யாழ்_அகத்தியன்

Thursday, September 13, 2007

என் காதல் நீ...

என் முதல்
காதல் நீ

நான்
காதலித்ததே
உனக்கு தெரியாது.

என் கடைசி
காதல் நீ

நான்
உன்னை மட்டும்
காதலித்ததுதான்
உனக்கு தெரியும்.


-யாழ்_அகத்தியன்

Wednesday, September 12, 2007

ஈழத்து அகதியாய் நான்...

நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்த
விட்டில் இன்று நான்

*
அம்மா அங்கே
அம்மாக்காக
அகதியாய்
இங்கே நான்

*
காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக

*
தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்

*
வகுப்பறையில் மகள்
படிக்காட்டியும் உயிரோடு
திரும்ப வேண்டும்
சாமியறையில் தாய்

*
நான் இறந்தால் கொள்ளி
வைக்க வந்துவிடாதே நான்
பெற்றதில் உன்னை மட்டும்தான்
காப்பாற்ற முடிந்தது

*
அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால்

அம்மா கவலையாய் பேசுவதை
கேக்கவே நேரம் முடிந்துடும்

*
என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்

என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று

*
எப்ப அம்மா சொந்த
ஊருக்கு போவோம்

பொறு போவோம்

இருபது வருசமா
இதைத்தானே அம்மா
சொல்கிறாய்

*
தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு நாளை விதவை
ஆகலாம் என்று தெரிந்தும்

*
சமாதானம் என்றால்
என்ன அப்பா
சண்டைக்கான
ஒத்திகை மகனே


-யாழ்_அகத்தியன்

சிலையானவளே...

நீ கொடுத்த முத்தத்தால்
மொய்த்துக் கொள்கின்றன
என்னைச் சுற்றி தேனீக்கள்

*
அழகைப் பற்றி எழுதச்
சொன்னார்கள்

நான் உன்னைப்
பற்றி எழுதினேன்

உன்னைப் பற்றி எழுதச்
சொன்னார்கள்

நான் கவிதையைப்
பற்றி எழுதினேன்

*
உன்னைப் பார்த்து
எழுதிய கவிதைகள்தான்
என் சொந்தக் கவிதைகள்

*
நிலவின் கையால்
சாப்பிட்டபின்
நிலாச்சோறு
பிடிக்கவில்லை

*
எழுந்தாலும் விழச்
சொல்லும் உன்
கன்னக்குழி


-யாழ்_அகத்தியன்

Tuesday, September 11, 2007

பேனாவோடு நான்...

என்னவளே...

என்ன யோசிக்கிறாய்..
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா..?

ஆமாம்..
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்

உனக்கு தெரியுமோ தெரியாது
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று

ஏன் தெரியுமா...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை

வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக் கவலைப்படுவேன்
என்பதால்தான்.

பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்து
கொண்டிருக்கிறேன்.

இந்த உலகம் கவலைப்படுகிறது
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்
என்று

உண்மைதான் அதற்காக நான்
அதிகம் வருத்தப்படுவதுண்டு
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்...

நான் உனக்காய் எழுதுவதில்லை
உன்னால்தான் எழுதுகிறேன் என்று.

உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்

இல்லையென்றால்...
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்.

நீ என்னைக் காதலித்த
காலங்களை விட உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்
கொண்டேயிருக்கும் பேனாவின்
காலங்கள்தான் அதிகம்

இதனால்தான் சொன்னார்களோ...
காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை காதலியென்று

பேனா பாவம் பொல்லாததுதான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது அதனால்தான்

என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும் உன் பெயர்
சொல்லித் துடித்துக்
கொண்டிருந்தேன்.

என் கவி ரசிகைகளைவிடஎ
ன் பேனாதான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது

ஏன் தெரியுமா..
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்

சேர்த்து தந்தும் தன்னைக்
காதலிக்காமல் உன்னை
மட்டும் நான் காதலித்துக்
கொண்டேயிருப்பதால்.

உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்துதான்
உன் பழக்கங்களை தெரிந்து
கொண்டேன்

இப்பொழுதெல்லாம் பேனா எழுத
ஆரம்பித்தால் நான் எதுவும் பேசுவதில்லை
பேசி பிடிவாதத்தால் வலிக்கபோவது
என் கை என்பதால்.

இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும்
ஒருவன்

என் பெற்றோர்களுக்கும்
எழுதப்படிக்க தெரியாது.

என்னவளே வா..
உனக்காய் எழுதி எழுதிஎன்
பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப் போ

இல்லையேல்
என் கைகளை
முறித்துவிட்டு போ

எல்லாம் உன் கையில்தான்
இருக்கிறது வா..


-யாழ்_அகத்தியன்

Friday, September 7, 2007

நிலவானவளே...

நீ
என்னைக் காதலிக்கவில்லை
என்ற சொல்லை எறிந்தால்
பதிலுக்கு உனக்கு மட்டும்

கவிதைகளை தந்து கொண்டே
இருக்கும் மரம் நான்

*
நான்
மழைக்கு
பள்ளிக்கூடம்
ஒதுங்காததில்
கவலைப்பட்டது
என்றால் அது

உனக்கு
கவிதை எழுத
துடித்த போது
மட்டும்தான்

*
நல்ல வேளை
நான் கவிதை எழுத
முயற்சிக்கவில்லை

அப்படி எழுதியிருந்தால்
உன்னை விட அழகான
கவிதையை என்னால்
எழுதியிருக்க முடியாது

*
நீ
கட்டி அணைத்தால்
தூங்காது தலையணை

நான்
கட்டிப்பிடித்தால்
தூங்காது பேனா

*
உன்னைப் பார்த்து
யார் யாரெல்லாம்
பொறாமைப்
படுகிறார்களோ

தயவு செய்து
அவர்களைப் பார்த்து நீ
கோவித்து விடாதே

அவர்கள்தான் என்
கவிதைகளின்
ரசிகர்கள்


-யாழ்_அகத்தியன்

என்னவளே...

இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர

*
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது உன்னை
நான் கவிதையாய் காதலிப்பதை

*
உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று

*
நீ
எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ
என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்

*
நீ
எது கேட்டாலும்
சொல்வேன்

உன் அழகுகளில்
எந்த அழகுபிடிக்கும்
என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்

சொன்னால்...

உன் எல்லா
அழகுகளின்
கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.


-யாழ்_அகத்தியன்

இதயமானவளே...

காதலித்தால் இதயங்கள்
இடம் மாறுமாமே வா
இதயங்களை மாற்றிவிட்டு
காதலித்து பார்ப்போம்

*
நான் வார்த்தை தேடி
அலைந்தபோது வந்து
கிடைத்த கவிதை நீ

*
பயந்து பயந்துதான் உன்னை
என் அம்மாவுக்கு அறிமுகப்
படுத்தினேன்

அவா
உன்னை ஆலாத்தி எடுத்து
வரவேற்பா என்று தெரியாமல்

*
வறண்ட பூமியை
விட நீ வைத்திருக்கும்
குடைதான் மழைக்காக
தவிக்கிறது

*
உலகம் அழியும் நாளில்
நான் உயிரோடிருந்தால்
தற்கொலையாளியாய்

உன் மேல் பாய்ந்துதான்
என்னை அளித்துக் கொள்வேன்

-யாழ்_அகத்தியன்

காதலானவளே...

உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு

*
உனக்காய் கவி எழுத
கற்பனைக் குதிரையை
தட்டிவிட்டேன் அது
உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு
தூங்கிவிட்டது

*
என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்

*
நீ
குளிக்கையில்
தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்

*
உன்னைக் கவிதையாய்
வெளியிட விரும்பி
இன்றுவரை

உன் கண்களை பற்றித்தான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்


-யாழ்_அகத்தியன்

Thursday, September 6, 2007

தொடாத சிணுங்கி

உன் மெளனம் கூட
ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப்
பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று

*
பூச் செடிக்கு பக்கத்தில்
வைத்து உன்னை படம்
எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை
தெரிகிறது

*
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்

*
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர

*
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்போடும்
வரைதான் அழகாக தெரிகிறது
வாசல்

-யாழ்_அகத்தியன்

யன்னல் நிலவு

மறக்க முடியாத உன்
முதல் முத்தம் வேண்டாம்
நான் இறக்க வேண்டும்
கடைசி முத்தம் கொடு

*
நீ தூங்குவதே இல்லையா
என் தூக்கங்களில் கனவாய்
வருகிறாயே

*
எல்லாரும் கவிதைக்குள்
கருத்தைதான் தேடுவார்கள்
நீ மட்டும் உன்னைத் தேடுவாய்

*
நீ வாங்கிக் கொடுத்த
செருப்போடுதான் இன்றும்
நடக்கிறேன் கைகளில்
சுமந்தபடி

*
என் கவிதைகளை எப்படி
படிக்க வருகிறாய் என்பதை
கற்றுக்கொடு

நீ குளிப்பதை எப்படி
எட்டிப் பார்ப்பது என்பதை
கற்றுக் கொள்கிறேன்

-யாழ்_அகத்தியன்

முதல் கவிதை...

இதுவரை கணக்குகளை மட்டும்
விளங்கபடுத்த என் கையோடு
கூடிய பேனா

முதல் முறை உனக்கு கவி எழுத
என் கையோடு கூட்டியதில் வந்த
கழித்தல்கள் இவை

தயவு செய்து சிரித்துவிடாதே
கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்
இன்னும் கலைந்துவிடும்

பல கோடி கவிதைகளை கண்டபின்னும்
பசியாறவில்லை இன்னும் காதலுக்கு
எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு
கவி

சிலையின் கையில் கொடுக்கப்பட்ட
பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன்
கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

எண்ணில் விட்டதில்லை
எழுத்துக்களில் விடுவதுண்டு
பிழை எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

உனக்காய் கவி எழுத விடிய விடிய
யோசித்ததில் இரவுகளின் நீளத்தை
என்னால் இப்படித்தான் அளக்க
முடிந்தது

நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
நமக்கு மிஞ்சப் போவது
எதுவுமில்லை என்று

தயவு செய்து அன்பே
என்னை மன்னித்துவிடு

உன்னை கணக்கிடச்சொல்
அரை நொடி போதும் என்
பேனாவுக்கு

உனக்காய் கவி எழுதச்சொல்
அரை ஜென்மம் போதாது

அன்பே...
காதலுக்கு கவிதை
அழகுதான் ஆனால்
கல்யாணத்துக்கு
கணக்கு மட்டும்தான்
அவசியம் எனவே

வா அன்பே வா
இன்றே ஆரம்பிப்போம்
நம் கணக்குகளை


-யாழ்_அகத்தியன்

Wednesday, September 5, 2007

தொலைத்த கவிதை...

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது

தயவு செய்து வாசித்துவிடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்துவிடும்

காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கியபடியே
கிடக்கிறது என் காதல் உன்னால்

காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்

என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது

உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல்தான்

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்தபோது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று

நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால்தான் வாங்கிக் கொண்டேன் என்பதை
அனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக் கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை

என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்

உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதைவிட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலைதான் எனக்கு

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும்தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப் போவது
எங்கள் அயுல்தானே

பாவப்பட்டவனின் கைக்கு விலைபோன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்

இன்று என்னைவிட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழவிட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லிவிடுகிறேன்

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்

முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்

-யாழ்_அகத்தியன்

Tuesday, September 4, 2007

அன்புடன் நட்பு...1

எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும்
நட்பு

*
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்

என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு

*
காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு


-யாழ்_அகத்தியன்

Monday, September 3, 2007

கவியானவளே...[12]

உன் பார்வையில்
பார்த்துக் கொண்டேன்
என் கண் காட்சியை

*

உன்னை சுற்றியதில்
சேலைக்கு கிடைத்தது
அழகான தேவதை

*
தேடிப் பார்க்க தொடங்கினேன்
எனக்குள் இருக்கும் உன்னைக்
கொண்டு உனக்குள் இருக்கும்
என்னை

*
உன்னை பார்த்த களைப்பில்
ஓய்வெடுக்க விரும்புகிறது
கண்கள்
உழைக்க விரும்புகிறது
உதடுகள்

*
முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான் உன்
உதட்டில் ஒரு மச்சம்

-யாழ்_அகத்தியன்

நீ

அவிழ்க்க முடியாத விடுகதை நீ

*
பிடிவாதத்தின் கொள்கை நீ

*

மறதியின் மறு பெயர் நீ

*
தண்டிக்க மட்டும் தெரிந்த ஆசிரியை நீ

*
கண்டு பிடிக்காத அதிசய நிலா நீ

*

காதல் உலகம் தேடும் பயங்கரவாதி நீ

*
கவிதைகளை வேவு பார்க்கும் விமானம் நீ

*
ஞாபகப்படுத்த மட்டும் தெரிந்த பாடல் நீ

*
கிழித்தெறிந்த கவிதை நீ

*
மாறாத நோய் நீ

*
மறக்க முடியாத சுனாமி நீ

*
என் உயிரின் உச்சரிப்பு நீ

-யாழ்_அகத்தியன்