| உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன் |
Monday, September 3, 2007
கவியானவளே...[12]
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment