Tuesday, July 17, 2007

காதல் பாடம்

உன்னை மறக்க முயற்சித்து
தோற்ப்போனதில்த்தான்
கற்றுக்கொண்டேன் உன்னை
நினைத்து வாழ்வது
எப்படி என்று

-யாழ்_அகத்தியன்

Tuesday, July 10, 2007

கவியானவளே...[10]

உனக்காக ஏதாவது
எழுதும் போதுதான்

எழுத்துக்களின்
நெருக்கடியில் சிக்கி
மூச்சு விட இடம்
தேடுகிறது என் காதல்

*
என்னைப் போல் யாரும்
கண்ணைத்தானம் செய்வதை
பார்த்துவிட்டு இறந்து போயிருக்க
மாட்டார்கள்

ஆனால்

கண்ணுக்கும் தெரியாது
நான் இறந்து போனது
அவள் திருமணவீட்டில் என்று

*
உனக்காகவே உழைத்ததில்
உன்னை வாங்க மறந்துவிட்டேன்
என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால்

*
நதியாக ஓடி வா என்றாய்
வந்த பின்தான் தெரிந்தது
என்னை உன்னோடு
கலக்க அல்ல
கரைக்கத்தான்
வரச் சொன்னாய்
என்று

*
உன் ஆடையின் அழகில்
உன்னழகு யாருக்கும்
தெரியக் கூடாது என்பதிலும்
நான் அக்கறையாக இருந்ததில்

தோற்த்தான் போனேனடி உன்
ஆசைக் கணவரிடம்


-யாழ்_அகத்தியன்

தத்துவம்

இன்று பார்த்தவனோடு ஓடிப் போன
பூவிடம் சொன்னது மரம் _உன்னை
பூக்க வைத்த எனக்குத் தெரியாத
உன்னை பழமாக்க என்று


-யாழ்_அகத்தியன்

Monday, July 9, 2007

எதிர்பார்ப்பு

உனக்கு யாரோ ஒருவனின்
கவிதை பிடித்ததில் இருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்

என்னில் ஏதாவது ஒன்று
உனக்கு பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று

-யாழ்_அகத்தியன்

Sunday, July 8, 2007

கவியானவளே...[09]

நான் உன்னை நினைப்பதை
மறந்துவிடப் போவதில்லை
அது என்னை மறக்கப் பார்க்கிறது

*
என் எதிரியல்லக் காதல் அனாலும்
சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால்
சாகக்கூடாது என்பதால்

*
நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய்
என் காதல் முட்டையை உடைத்துவிடாதே
நானாக உடைத்து வெளிவரும் வரை

*
அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மறந்து தொலைத்த பாதையில்_ நான்
என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ

*
என்னை மறப்பதற்காய் நான்
இறந்து விட்டதாக நினைத்து
விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து
கொண்டிருப்பது யுத்த பூமியில்



-யாழ்_அகத்தியன்

Wednesday, July 4, 2007

கவியானவளே...[08]

கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள்
உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும்

*
உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில்
யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள்
காதலியை கண்டுபிடித்தவர்கள்

*
என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான்
ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது
இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...?

*
என்னைப்போல் யாரும் உன் அமைதியை
விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய்
நீ மாறும்போதும் உன் மேல் உதடாய்
நான் மாறும் வரையிலும்

*
இன்றுவரை காதலோடு வரும் எந்த
பெண்களுடனும் நான் உரையாடியதில்லை
காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம்
செய்யக் கூடாது என்பதால்

*
முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன்
நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை
என்னை பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்

*
ஒரு வார்த்தை கூட பேசாத உன்னோடு
தினமும் பேசிய களைப்பில்தான் விடிகிறது
என் ஒவ்வொரு தூக்கமும்

-யாழ்_அகத்தியன்