Monday, October 8, 2007

என் நிலா நீ*

நிலா....
நீ வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருந்தேன்

நீ வரவேயில்லை
இன்னும் விடியவில்லை
எனக்கு.

*
நீ
இல்லாத இரவில்
பகலால் வாடுகிறேன்

நீ
இருக்கும் இரவில்
உனக்காய் பாடுகிறேன்.

*
உன்னைப் பாட பலர் இருந்தும்
உன்னைத் தேட நான் மட்டுமே

உன்னால் படிக்க பலர் இருக்கலாம்
உனக்காக வடிக்க நான் மட்டுமே

*
முட்கள் இல்லாத ரோஜாவை
எனக்கு பிடிக்காது நீயில்லாத
பகலைப் போல

*
துளைத்த புல்லாங்குழலில்தான்
இசை பிறக்கும் அது அழகு

இரவில் நீ இருக்கும்போது
பிறக்கும் கவிதை போல.

*
நிலவே....
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
நீ எனக்காக சூரியனிடம்
கடன்வாங்கி ஒளிவீசுவதால்


-யாழ்_அகத்தியன்

1 comment:

நினைவுகள் said...

hey
kavithai mikavum nanru.
vazhthukkal