அன்று
உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்
இன்று
யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று
*
நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு
"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்
இன்று பிரிவை தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன செய்வேன்...?
*
தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு
உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை
*
தினமும்
நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்
உன்னால்
வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்
*
நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்
கவிதைகள் வேண்டுமே
என் தனிமைக்கு
-யாழ்_அகத்தியன்
Wednesday, October 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment