கோயில் வாசலில் காத்திருக்கும்
பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில் உன்
புன்னகைக்காய்
*
தயவு செய்து இனி நீ குளிக்கும்போது
பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து
விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும்
போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி
விடுகிறது
*
நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை
கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை
நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த
வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான்
அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன்
*
நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும்
சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத
நாட்களில் மட்டும்தான் பெண்கள்
கல்லூரியாய் மாறுகிறது
*
களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி
விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன்நான்
-யாழ்_அகத்தியன்
Friday, May 18, 2007
ரோஜா
உன்னைப் பூ என்று
யார் சொன்னது
நான் சொல்ல
மாட்டேன்
உன்னை யாரும்
பறிக்காத போதும்
நீ இன்னும் வாட
வில்லையே
-யாழ்_அகத்தியன்
யார் சொன்னது
நான் சொல்ல
மாட்டேன்
உன்னை யாரும்
பறிக்காத போதும்
நீ இன்னும் வாட
வில்லையே
-யாழ்_அகத்தியன்
Thursday, May 17, 2007
எழுத மறந்த கவிதைகள்
காதலில் வென்ற என் அப்பாவின்
எதிர்ப்பை மீறி சேர்த்து வைத்தார்
காதலில் தோற்றுப் போன என்
சித்தப்பா என்னையும் அவளையும்
*
என் அன்னையை வயோதிபர் இல்லத்துக்கு
அனுப்பி வைத்த என் மனைவி மறந்து விட்டாள்
தன் பிள்ளைக்கு வயோதிபர் இல்ல முகவரியை
காட்டிக் கொடுத்ததை
*
நீங்கள் அழுத்திய இலக்கம் இப்போது
பாவனையில் இல்லை என்று அழகாய்
சொல்கிறாள் யாரோ ஒருத்தி என் மேல்
அவளுக்கு இருக்கும் அக்கறை கூட
இலக்கத்தை மாற்றிய உனக்கில்லையடி
*
தெரிந்தோ தெரியமலோ அதிகமாய்
வெளி நாட்டு ஆண்கள்தான் விதவைக்கு
வாழ்க்கை கொடுக்கிறர்கள்
புரியவில்லையா...
உள் நாட்டுக் காதலனை
சாகடித்து விட்டல்லவா
கழுத்தை நீட்டுகிறாள்
வெளி நாட்டு
மாப்பிள்ளைக்கு
*
கவிஞர்களிடம் காதல் தோல்வியா
என்று கேக்கும் பெண்களிடம் ஒரு
கேள்வி கேக்க வேண்டும்
உங்கள் பெயர்களை வைத்த
தந்தையும் காதலில் தோற்று
போனவரா என்று
-யாழ்_அகத்தியன்
எதிர்ப்பை மீறி சேர்த்து வைத்தார்
காதலில் தோற்றுப் போன என்
சித்தப்பா என்னையும் அவளையும்
*
என் அன்னையை வயோதிபர் இல்லத்துக்கு
அனுப்பி வைத்த என் மனைவி மறந்து விட்டாள்
தன் பிள்ளைக்கு வயோதிபர் இல்ல முகவரியை
காட்டிக் கொடுத்ததை
*
நீங்கள் அழுத்திய இலக்கம் இப்போது
பாவனையில் இல்லை என்று அழகாய்
சொல்கிறாள் யாரோ ஒருத்தி என் மேல்
அவளுக்கு இருக்கும் அக்கறை கூட
இலக்கத்தை மாற்றிய உனக்கில்லையடி
*
தெரிந்தோ தெரியமலோ அதிகமாய்
வெளி நாட்டு ஆண்கள்தான் விதவைக்கு
வாழ்க்கை கொடுக்கிறர்கள்
புரியவில்லையா...
உள் நாட்டுக் காதலனை
சாகடித்து விட்டல்லவா
கழுத்தை நீட்டுகிறாள்
வெளி நாட்டு
மாப்பிள்ளைக்கு
*
கவிஞர்களிடம் காதல் தோல்வியா
என்று கேக்கும் பெண்களிடம் ஒரு
கேள்வி கேக்க வேண்டும்
உங்கள் பெயர்களை வைத்த
தந்தையும் காதலில் தோற்று
போனவரா என்று
-யாழ்_அகத்தியன்
கவியானவளே...[06]
என் காதல் கவிதையில் இருந்து
விலக்கி விடப்படும் பிழையான
எழுத்துக்களோடு சென்று விடுகிறது
உன் மேலான என் காதலும்
*
என் கவிதைகள் கூட உன்னை
காயப்படுத்த கூடாதென்றுதான்
எழுத்துப்பிழை விட்டாலும் ஆயுத
எழுத்தை விட்டதில்லை என்
கவிதைக்குள்
*
தயவு செய்து என் கவிதைகளை
வாசித்துவிட்டு அமைதியைப்
பேணுங்கள் கல்லறையில் என்
பேனா தூங்கிக் கொண்டிருக்கிறது
-யாழ்_அகத்தியன்
விலக்கி விடப்படும் பிழையான
எழுத்துக்களோடு சென்று விடுகிறது
உன் மேலான என் காதலும்
*
என் கவிதைகள் கூட உன்னை
காயப்படுத்த கூடாதென்றுதான்
எழுத்துப்பிழை விட்டாலும் ஆயுத
எழுத்தை விட்டதில்லை என்
கவிதைக்குள்
*
தயவு செய்து என் கவிதைகளை
வாசித்துவிட்டு அமைதியைப்
பேணுங்கள் கல்லறையில் என்
பேனா தூங்கிக் கொண்டிருக்கிறது
-யாழ்_அகத்தியன்
Wednesday, May 16, 2007
வெற்றுக் கடதாசி!
ஒவ்வொரு வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும் உன் வெள்ள
மனதைப் பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்பெயரையும்
எழுதவே இல்லையே
-யாழ்_அகத்தியன்
நான் பார்க்கும் போதும் உன் வெள்ள
மனதைப் பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்பெயரையும்
எழுதவே இல்லையே
-யாழ்_அகத்தியன்
வெற்றிடம்!
நீ இல்லாத வெற்றிடத்தை
யாரல் நிரப்ப முடியுமென்று
எண்ணிக் கொண்டிருந்தேன்
உன் பிரிவுக்காய் அழப்போன
அனாதையின் மரணவீட்டின்
முலையில் நான்
-யாழ்_அகத்தியன்
யாரல் நிரப்ப முடியுமென்று
எண்ணிக் கொண்டிருந்தேன்
உன் பிரிவுக்காய் அழப்போன
அனாதையின் மரணவீட்டின்
முலையில் நான்
-யாழ்_அகத்தியன்
வெக்கம்!
நீ படிக்க வருவாய் என்று
பொய் சொன்னால் போதும்
என் கவிதைகள் வயதுக்கு
வந்து கிறுக்கலாய்
வெக்கப்படுகிறது.
-யாழ்_அகத்தியன்
பொய் சொன்னால் போதும்
என் கவிதைகள் வயதுக்கு
வந்து கிறுக்கலாய்
வெக்கப்படுகிறது.
-யாழ்_அகத்தியன்
விசம்!
உன்னில் என்னை சாக
கண்டேன் தெரிந்தும் -நீ
விசம் கொடுத்தாய் உன்
வருங்கால மருத்துவ
புருசனை நம்பி
-யாழ்_அகத்தியன்
கண்டேன் தெரிந்தும் -நீ
விசம் கொடுத்தாய் உன்
வருங்கால மருத்துவ
புருசனை நம்பி
-யாழ்_அகத்தியன்
வருக 2007
உயிர்கொடுக்காத ஊனமான வருசங்களையே
என் வயதெனக்கூறி திரியும் என்னை 2007 ம்
ஆண்டாவது உன்னை சந்திக்க வைத்து
உயிர்கொடுத்த வருசமென சொல்லவைக்குமா?
கேள்விக்குறியோடு எடுத்து வைக்கிறேன் உன்
வரவுக்காய் ஏங்கியபடி என் வலதுகாலை
-யாழ்_அகத்தியன்
என் வயதெனக்கூறி திரியும் என்னை 2007 ம்
ஆண்டாவது உன்னை சந்திக்க வைத்து
உயிர்கொடுத்த வருசமென சொல்லவைக்குமா?
கேள்விக்குறியோடு எடுத்து வைக்கிறேன் உன்
வரவுக்காய் ஏங்கியபடி என் வலதுகாலை
-யாழ்_அகத்தியன்
யாரிடம்..?
தனிமை விட்டு இனிமை காண
இளமையோடு புதுமையாக வந்தவளே!
அருமையாக அறிமுகமானாய் அவதரித்தேன்
ஆண்மையோடு…
ஆகா அருமையானவளே!
உரிமையோடு உயிரோடு பேசி பெண்மை
ஒரு உண்மையென்று பேச வைத்தவளே!
கரம் பிடித்த கணப் பொழுதில் கவலைவரினும்
விலகிடேன் என வினாவாக்கி விடையளித்தவளே!
உலகம் மறந்து உனை நினைகிறேன் என்ற
உண்மை மட்டும் உரைத்தேன். உன் மடியில்
மரணிக்கும் வரை மறந்தும் பிரிய மாட்டேன்
என எனை மயக்க வைத்தவளே!
எனக்குள் நான் பிரிவெனும் வார்த்தையை
அயுள் வரை சிறையிட்டுள்ளேன் என்றேன்.
தானோ பிரிவெனும் வார்த்தையை தன்
அகராதியில் இருந்து எரித்து விட்டேன்
தெரியுமா…?
என்றவளே!
“யாரிடம் உன் பிரியத்தை விற்று விட்டு
பிரிவை வாங்கி பிரித்தாய் என் பிரியமான
உனை என்னிடம் இருந்து”
-யாழ்_அகத்தியன்
இளமையோடு புதுமையாக வந்தவளே!
அருமையாக அறிமுகமானாய் அவதரித்தேன்
ஆண்மையோடு…
ஆகா அருமையானவளே!
உரிமையோடு உயிரோடு பேசி பெண்மை
ஒரு உண்மையென்று பேச வைத்தவளே!
கரம் பிடித்த கணப் பொழுதில் கவலைவரினும்
விலகிடேன் என வினாவாக்கி விடையளித்தவளே!
உலகம் மறந்து உனை நினைகிறேன் என்ற
உண்மை மட்டும் உரைத்தேன். உன் மடியில்
மரணிக்கும் வரை மறந்தும் பிரிய மாட்டேன்
என எனை மயக்க வைத்தவளே!
எனக்குள் நான் பிரிவெனும் வார்த்தையை
அயுள் வரை சிறையிட்டுள்ளேன் என்றேன்.
தானோ பிரிவெனும் வார்த்தையை தன்
அகராதியில் இருந்து எரித்து விட்டேன்
தெரியுமா…?
என்றவளே!
“யாரிடம் உன் பிரியத்தை விற்று விட்டு
பிரிவை வாங்கி பிரித்தாய் என் பிரியமான
உனை என்னிடம் இருந்து”
-யாழ்_அகத்தியன்
மெளனம்!
உன் மெளனம்தான் சம்மதம்
என்றென்னி சாலை எங்கும்
சரணம் பாடித் திரிந்தேன்
உன் பேச்சில் ஏற்பட்ட
காயம்தான் அந்த
மெளனம் என்று நீ
சொல்லும் வரை
-யாழ்_அகத்தியன்
என்றென்னி சாலை எங்கும்
சரணம் பாடித் திரிந்தேன்
உன் பேச்சில் ஏற்பட்ட
காயம்தான் அந்த
மெளனம் என்று நீ
சொல்லும் வரை
-யாழ்_அகத்தியன்
மறந்ததை மறந்து!
அவள் உறக்கத்தில் நான்
இறப்பதாய் கனவுகண்டு
என் மீது இரக்கப்பட்டு
மறந்ததை மறந்து
மறுபடி வருவாளோ..?
-யாழ்_அகத்தியன்
இறப்பதாய் கனவுகண்டு
என் மீது இரக்கப்பட்டு
மறந்ததை மறந்து
மறுபடி வருவாளோ..?
-யாழ்_அகத்தியன்
பிரியுமா பிரியம்!
என் ஞாபகங்கள் எப்போதாவது
வந்தால் உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும் உனக்கு
ஞாபகம் வரட்டும்
உனை பிரியமாய் பார்த்த அதே
கண்களால்த்தான் உன் பிரிவையையும்
பார்க்க வைத்து குருடாக்கினாய் என்
கண்களை
எனை சந்திக்காமல் இருக்கத்தான்
இடம்பெயர்ந்தாய் என்று சொல்லி
இருந்தால் நான் உனக்காய் என்
உயிரை சாகடித்திருப்பேனே…
என் கவிதைகளை பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை பிடிக்கவில்லை
அதனால்த்தானோ என்னை விட்டு
பிரிகிறது உன்னை போல் என்
கவிதைகளும்
காதலுக்கு கண் இருக்கிறது காதல்
பிரிவுக்குத்தான் கண் இல்லை
ஆமாம் நான் பாக்கக்கூடியதாய் நீ
பாக்காமல் பிரிந்து போனாயே..
-யாழ்_அகத்தியன்
வந்தால் உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும் உனக்கு
ஞாபகம் வரட்டும்
உனை பிரியமாய் பார்த்த அதே
கண்களால்த்தான் உன் பிரிவையையும்
பார்க்க வைத்து குருடாக்கினாய் என்
கண்களை
எனை சந்திக்காமல் இருக்கத்தான்
இடம்பெயர்ந்தாய் என்று சொல்லி
இருந்தால் நான் உனக்காய் என்
உயிரை சாகடித்திருப்பேனே…
என் கவிதைகளை பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை பிடிக்கவில்லை
அதனால்த்தானோ என்னை விட்டு
பிரிகிறது உன்னை போல் என்
கவிதைகளும்
காதலுக்கு கண் இருக்கிறது காதல்
பிரிவுக்குத்தான் கண் இல்லை
ஆமாம் நான் பாக்கக்கூடியதாய் நீ
பாக்காமல் பிரிந்து போனாயே..
-யாழ்_அகத்தியன்
பிரியாத ப்ரியம்!
உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா?
என்னை மறந்து வாழத்தான் இடம்
பெயர்ந்தாய் என் நினைவுகளை
மறந்து வாழ என்ன செய்தாய்…
என் கண்ணைத்தான் அதிகம்
பிடிக்குமென்றாய் உண்மைதான்
அதை மட்டும்தான் என்னால
அடக்க முடியவில்லை
என்னை உண்மையாக காதலித்தாய்
என்றால் என்னை மறந்துவிடு என்றாய்
அப்போதுதான் பொய்யானது என் காதல்
வாழ்க்கை ஒரு போர்க்களம் புரிந்து
கொண்டேன் காதலி என்ற ஆயுதத்தை
தொலைத்தபின்
என்னை எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்கு மட்டும்
என்னை...
என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும்
எழுதியதில்லை எழுதும் கவிதை எல்லாமே
என்னை நீ மறக்காமல் இருந்தால் மறக்க
வைக்கத்தான்
இப்பொழுது எல்லாம் உன்னை நினைக்காத
போதும் கண்ணீர் வருகிறது நீதான் என்
கண்ணில் படாமல் வாழ்கிறாயே
என்னை ஞாபகப்படுத்தும் எந்த
பொருளையாவது காண நேர்ந்தால்
தயவுசெய்து அனாதையாய் விட்டு
விடாதே ஏதாவது ஒரு குப்பைத்
தொட்டியில் போட்டுவிடு கோடி
புண்ணியம் கிடைக்கும்
-யாழ்_அகத்தியன்
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா?
என்னை மறந்து வாழத்தான் இடம்
பெயர்ந்தாய் என் நினைவுகளை
மறந்து வாழ என்ன செய்தாய்…
என் கண்ணைத்தான் அதிகம்
பிடிக்குமென்றாய் உண்மைதான்
அதை மட்டும்தான் என்னால
அடக்க முடியவில்லை
என்னை உண்மையாக காதலித்தாய்
என்றால் என்னை மறந்துவிடு என்றாய்
அப்போதுதான் பொய்யானது என் காதல்
வாழ்க்கை ஒரு போர்க்களம் புரிந்து
கொண்டேன் காதலி என்ற ஆயுதத்தை
தொலைத்தபின்
என்னை எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்கு மட்டும்
என்னை...
என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும்
எழுதியதில்லை எழுதும் கவிதை எல்லாமே
என்னை நீ மறக்காமல் இருந்தால் மறக்க
வைக்கத்தான்
இப்பொழுது எல்லாம் உன்னை நினைக்காத
போதும் கண்ணீர் வருகிறது நீதான் என்
கண்ணில் படாமல் வாழ்கிறாயே
என்னை ஞாபகப்படுத்தும் எந்த
பொருளையாவது காண நேர்ந்தால்
தயவுசெய்து அனாதையாய் விட்டு
விடாதே ஏதாவது ஒரு குப்பைத்
தொட்டியில் போட்டுவிடு கோடி
புண்ணியம் கிடைக்கும்
-யாழ்_அகத்தியன்
நெருப்பாய் போனாள்..!
நீராய் வந்தவள் நெருப்பாய் போனாள்
வந்ததை எண்ணி நனைந்தது உள்ளம்
போனதை எண்ணி எரியுது எண்ணம்
என்னவளே…
என்னை எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன் என்றா?
என்னை நனைத்து காய
வைத்து எரித்தாய்….
-யாழ்_அகத்தியன்
வந்ததை எண்ணி நனைந்தது உள்ளம்
போனதை எண்ணி எரியுது எண்ணம்
என்னவளே…
என்னை எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன் என்றா?
என்னை நனைத்து காய
வைத்து எரித்தாய்….
-யாழ்_அகத்தியன்
நீயே சொல்…
என் காதலை விமானமாக்கி
அனுப்பிவைத்தேன் கொஞ்ச
நேரத்திலேயே தொலைத்
தொடர்பைஇழந்துவிட்டது
என்ன செய்வேன் நான்
என்ன நடந்தது என்று கேள்விகளை
தொடுக்கிறதுஉன் மேலான என் ஆசைகள்
என்ன சொல்லி சமாளிப்பேன்
நீயே சுட்டெரித்துவிட்டாய் என்று
உண்மை சொல்வேனா? இல்லை
எழுத்துபிழை காரணமாக காட்டுக்குள்
விழுந்துவிட்டது என்று பொய் சொல்வேனா?
நீயே சொல்….
எத்தனை மட்டும்தான் நான்
பொய்களை மட்டும் நம்ப
வைப்பேன் என் ஆசைகள்
வயதுக்கு வரும்வரையா?
-யாழ்_அகத்தியன்
அனுப்பிவைத்தேன் கொஞ்ச
நேரத்திலேயே தொலைத்
தொடர்பைஇழந்துவிட்டது
என்ன செய்வேன் நான்
என்ன நடந்தது என்று கேள்விகளை
தொடுக்கிறதுஉன் மேலான என் ஆசைகள்
என்ன சொல்லி சமாளிப்பேன்
நீயே சுட்டெரித்துவிட்டாய் என்று
உண்மை சொல்வேனா? இல்லை
எழுத்துபிழை காரணமாக காட்டுக்குள்
விழுந்துவிட்டது என்று பொய் சொல்வேனா?
நீயே சொல்….
எத்தனை மட்டும்தான் நான்
பொய்களை மட்டும் நம்ப
வைப்பேன் என் ஆசைகள்
வயதுக்கு வரும்வரையா?
-யாழ்_அகத்தியன்
நீயும் நானும்….!
உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது
*
உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை எடுக்க
விட்டதில்லை உன் வெக்கம்
*
நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய் ஏனெனில்
என்னிடம் மட்டும்தானே நீ வெக்கப் படுகிறாய்
*
நான் என்னைப் பற்றி சொன்னால் ரசிக்கிறாய்
உன்னைப் பற்றி சொன்னால் வெக்கப் படுகிறாய்
ஆகா உன் வெக்கத்துக்கும் பழக்கி விட்டாயா
உன் சுயநலத்தை
*
நான் மயிலே மயிலே என்று அன்பாய்
கூப்பிட்டாலும் மயில் இறகு போட்டதில்லை
ஆனால் நான் ஆசையாய் உன் பெயரை கூப்பிட்டால்
போதும் அடடா நீ அழகாய் வெக்கப்படுவாய்
*
என்னைக் கண்டதும் வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும் நான் காணாமல்
போகிறேன்
*
என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது
ஆமாம் உன் வெக்கம் பேசியதில்லையே
*
உன் வெக்கத்தை பற்றி கவி எழுதித்தர
ஆசைதான் ஆனால் அந்தளவுக்கு நான்
படித்தவன் அல்ல வேணும் என்றால் சொல்
நீ வெக்கப் படாத நேரங்களை கவிதையாய்
எழுதித்தருகிறேன்
-யாழ்_அகத்தியன
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது
*
உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை எடுக்க
விட்டதில்லை உன் வெக்கம்
*
நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய் ஏனெனில்
என்னிடம் மட்டும்தானே நீ வெக்கப் படுகிறாய்
*
நான் என்னைப் பற்றி சொன்னால் ரசிக்கிறாய்
உன்னைப் பற்றி சொன்னால் வெக்கப் படுகிறாய்
ஆகா உன் வெக்கத்துக்கும் பழக்கி விட்டாயா
உன் சுயநலத்தை
*
நான் மயிலே மயிலே என்று அன்பாய்
கூப்பிட்டாலும் மயில் இறகு போட்டதில்லை
ஆனால் நான் ஆசையாய் உன் பெயரை கூப்பிட்டால்
போதும் அடடா நீ அழகாய் வெக்கப்படுவாய்
*
என்னைக் கண்டதும் வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும் நான் காணாமல்
போகிறேன்
*
என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது
ஆமாம் உன் வெக்கம் பேசியதில்லையே
*
உன் வெக்கத்தை பற்றி கவி எழுதித்தர
ஆசைதான் ஆனால் அந்தளவுக்கு நான்
படித்தவன் அல்ல வேணும் என்றால் சொல்
நீ வெக்கப் படாத நேரங்களை கவிதையாய்
எழுதித்தருகிறேன்
-யாழ்_அகத்தியன
நீயாக!
என் கவிதையில்
நான் யாரையோ
காதலிப்பது தெரிகிறது
என்றாயே…
அது ஏன் நீயாக இருக்கக்
கூடாது என நினைக்கிறாய்
இல்லை…?
-யாழ்_அகத்தியன்
நான் யாரையோ
காதலிப்பது தெரிகிறது
என்றாயே…
அது ஏன் நீயாக இருக்கக்
கூடாது என நினைக்கிறாய்
இல்லை…?
-யாழ்_அகத்தியன்
Monday, May 14, 2007
நீ ஒருத்திதான்!
எந்த உலகத்திலும்
எந்த காலத்திலும்
பெண்கள் ஒரே
மாதிரித்தான்
சொல்வார்கள்
ஆம்!
காதலிப்பதாக பொய்
சொல்வார்கள் ஆனால்
நீ ஒருத்திதான் பொய்யாக
உண்மை சொன்னாய்!
-யாழ்_அகத்தியன்
எந்த காலத்திலும்
பெண்கள் ஒரே
மாதிரித்தான்
சொல்வார்கள்
ஆம்!
காதலிப்பதாக பொய்
சொல்வார்கள் ஆனால்
நீ ஒருத்திதான் பொய்யாக
உண்மை சொன்னாய்!
-யாழ்_அகத்தியன்
நிலவே நிலவே..!
என்ன அதிசயம் உன்னைக் கண்டதும்
சூரியன் நேரத்துக்கே தூங்க போகிறது
ஓ….
நீதான் நேரம் தவறி நேரத்துக்கு வந்துவிட்டாய்
என்னவளே இனியாவது நீ நிலவென்பதை
மறக்காமல் வர வேண்டிய நேரத்தில் வா
-யாழ்_அகத்தியன்
சூரியன் நேரத்துக்கே தூங்க போகிறது
ஓ….
நீதான் நேரம் தவறி நேரத்துக்கு வந்துவிட்டாய்
என்னவளே இனியாவது நீ நிலவென்பதை
மறக்காமல் வர வேண்டிய நேரத்தில் வா
-யாழ்_அகத்தியன்
நான் கிறுக்கினால்
நான் கிறுக்கினால்
உன் பெயர் மட்டும்தான்
கவிதையாகும்
நீ கிறுக்கினால் எந்த
கிறுக்கலும் கவிதையாகும்
-யாழ்_அகத்தியன்
உன் பெயர் மட்டும்தான்
கவிதையாகும்
நீ கிறுக்கினால் எந்த
கிறுக்கலும் கவிதையாகும்
-யாழ்_அகத்தியன்
தேடல்!
எழுதிய கவிதையை தொலைத்த
கவிஞன்போல் உனக்குள் என்னைத்
தேடி களைத்துவிட்டேன்
உன் மனதின் குப்பைத்
தொட்டியைத் தவிர
தெரிந்தும் இனி
தேட இஸ்ரம் இல்லை
உன் குப்பைக்குள் நான்
ஒரு குப்பையாய்
இருக்கிறேன்
என்பதை தெரிந்து கொள்வதை விட
என் தேடலின் பிழை என்று எண்ணி
வாழவே விரும்புகிறேன்.
-யாழ்_அகத்தியன்
கவிஞன்போல் உனக்குள் என்னைத்
தேடி களைத்துவிட்டேன்
உன் மனதின் குப்பைத்
தொட்டியைத் தவிர
தெரிந்தும் இனி
தேட இஸ்ரம் இல்லை
உன் குப்பைக்குள் நான்
ஒரு குப்பையாய்
இருக்கிறேன்
என்பதை தெரிந்து கொள்வதை விட
என் தேடலின் பிழை என்று எண்ணி
வாழவே விரும்புகிறேன்.
-யாழ்_அகத்தியன்
தேடலின் சுகம்!
உன்னைத் தேடியகளைப்பில்த்தான்
என்னைக் கவிஞனாக்கிக் கொண்டேன்
உன்னைக் களைப்போடு சந்திக்க
விரும்பாமல்
-யாழ்_அகத்தியன்
என்னைக் கவிஞனாக்கிக் கொண்டேன்
உன்னைக் களைப்போடு சந்திக்க
விரும்பாமல்
-யாழ்_அகத்தியன்
தேசத்தின் குரல்!
தனக்காய் வாழ்ந்து மறைந்தவர்கள் கோடி
எனக்கும் தெரியும் ஒரு நாள் பிரியும் உயிர்
என்று நீ எங்களுக்காய் வாழ்ந்த உன் அயுளில்
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உனக்காய்
வாழ்ந்திருந்தால் உனை நோய் கொண்டு
போயிருக்காது அப்படியென்ன உன்னை மீறிய
அக்கறை தேசம் மீதும் மக்கள் மீதும் உனக்கு
உனக்கு தெரியுமா?
ம்…. உனக்கெப்படி தெரியும் தேசத்தின் குரலாய்
நீ வாழ்ந்தாய் என்று உனக்குத்தான் பட்டம் பதவி
புகழ் எதுவுமே பிடிக்காதே
நீ விழி மூடியதால் எங்கள் தேசம் ஊமையானதும்
உலக தமிழ் மக்கள் கண்ணிரில் மிதப்பதும் உன்
பிரிவைப் பாட வார்தைகள் தேடித் தேடித்
பேனாக்களே தற்கொலை செய்து கொள்வதை
எல்லாம் உனக்கெப்படித் தெரியும்
நீதான் ஈழக்குழைந்தை கருவுற்ற காலம் முதல்
பெறும் வருசம் வரை வாழ்ந்து விட்டு குழந்தையைப்
பார்க்காமல் விழி மூடிவிட்டாயே
இன்னும் கொஞ்ச காலமாவது உன் அயுளை
மிச்சம் வைத்திருக்கலாமே உன் முத்தம்
வாங்கும் பாக்கியத்தையாவது ஈழக் குழந்தை
பெற்றிருக்குமே
உன் பெயர் ஈழ வரலாற்றில் இடம் பிடித்தாலும்
எங்கள் வரலாற்றில் உன் பிரிவு வெற்றிடமாவே
என்றும் இருக்கும்
உன் திறமையும் உன் வாழ்க்கையும்
உன் வழி காட்டலும் உன் தத்துவங்களும்
ஏன் உன் இறப்புக் கூட என் போன்றவர்களுக்கு
என்றும் பாடமாக இருக்கும்
உன் பிரிவால் வாடும் உன் துணைவியுடனும்
எம் தேசத்தின் கண்ணீரோடும் நானும் கலந்து
கண்ணிரில் குளிக்கிறேன் உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
மனிதர்கள் மட்டுமே இறக்கிறார்கள்
மாமனிதர்கள் இறப்பதில்லை
அவர்கள் வரலாறாக என்றும்
வாழ்கிறார்கள்
–யாழ்_அகத்தியன்
எனக்கும் தெரியும் ஒரு நாள் பிரியும் உயிர்
என்று நீ எங்களுக்காய் வாழ்ந்த உன் அயுளில்
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உனக்காய்
வாழ்ந்திருந்தால் உனை நோய் கொண்டு
போயிருக்காது அப்படியென்ன உன்னை மீறிய
அக்கறை தேசம் மீதும் மக்கள் மீதும் உனக்கு
உனக்கு தெரியுமா?
ம்…. உனக்கெப்படி தெரியும் தேசத்தின் குரலாய்
நீ வாழ்ந்தாய் என்று உனக்குத்தான் பட்டம் பதவி
புகழ் எதுவுமே பிடிக்காதே
நீ விழி மூடியதால் எங்கள் தேசம் ஊமையானதும்
உலக தமிழ் மக்கள் கண்ணிரில் மிதப்பதும் உன்
பிரிவைப் பாட வார்தைகள் தேடித் தேடித்
பேனாக்களே தற்கொலை செய்து கொள்வதை
எல்லாம் உனக்கெப்படித் தெரியும்
நீதான் ஈழக்குழைந்தை கருவுற்ற காலம் முதல்
பெறும் வருசம் வரை வாழ்ந்து விட்டு குழந்தையைப்
பார்க்காமல் விழி மூடிவிட்டாயே
இன்னும் கொஞ்ச காலமாவது உன் அயுளை
மிச்சம் வைத்திருக்கலாமே உன் முத்தம்
வாங்கும் பாக்கியத்தையாவது ஈழக் குழந்தை
பெற்றிருக்குமே
உன் பெயர் ஈழ வரலாற்றில் இடம் பிடித்தாலும்
எங்கள் வரலாற்றில் உன் பிரிவு வெற்றிடமாவே
என்றும் இருக்கும்
உன் திறமையும் உன் வாழ்க்கையும்
உன் வழி காட்டலும் உன் தத்துவங்களும்
ஏன் உன் இறப்புக் கூட என் போன்றவர்களுக்கு
என்றும் பாடமாக இருக்கும்
உன் பிரிவால் வாடும் உன் துணைவியுடனும்
எம் தேசத்தின் கண்ணீரோடும் நானும் கலந்து
கண்ணிரில் குளிக்கிறேன் உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
மனிதர்கள் மட்டுமே இறக்கிறார்கள்
மாமனிதர்கள் இறப்பதில்லை
அவர்கள் வரலாறாக என்றும்
வாழ்கிறார்கள்
–யாழ்_அகத்தியன்
தெரிந்தும்!
உனக்கு நான் ஏழை
என்று தெரிந்தும்
விலை போனாய்
மலிவாய் உன்னை
விட பணக்காரனிடம்
-யாழ்_அகத்தியன்
என்று தெரிந்தும்
விலை போனாய்
மலிவாய் உன்னை
விட பணக்காரனிடம்
-யாழ்_அகத்தியன்
தீபாவளி!
யார் யாருக்கோ இன்று
தலைத் தீபாவளி உனக்கும்
எனக்கும்தான் இன்னும்
ஆகவில்லை கா(த)ல்
தீபாவளி
-யாழ்_அகத்தியன்
தலைத் தீபாவளி உனக்கும்
எனக்கும்தான் இன்னும்
ஆகவில்லை கா(த)ல்
தீபாவளி
-யாழ்_அகத்தியன்
தலைப்பு!
உனக்கு கடிதம் எழுத
ஆரம்பித்தால் கவிதையாய்
எழுதி முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லைஅதுதான்
உன் வீட்டு முகவரி.
-யாழ்_அகத்தியன்
ஆரம்பித்தால் கவிதையாய்
எழுதி முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லைஅதுதான்
உன் வீட்டு முகவரி.
-யாழ்_அகத்தியன்
தண்டனை!
எழுத்துக்களை சிறைப்பிடித்து
உனக்கு கவிதை எழுதினேன்
அதைக் கிழித்தெறிந்து
தண்டனையை எனக்கு
கொடுத்தாய்
-யாழ்_அகத்தியன்
உனக்கு கவிதை எழுதினேன்
அதைக் கிழித்தெறிந்து
தண்டனையை எனக்கு
கொடுத்தாய்
-யாழ்_அகத்தியன்
சூரியகதிரும் சோகமான நினைவும்!
சின்ன வயசு எனக்கு அதைவிட
சின்ன வயசு உனக்கு மீசை
எனக்கும் ஆசை உனக்கும்
வராத காலம் அது ம்ம்...
பசுமையான காலம்
புத்தகங்களை சுமக்க
இயலாத வயதில்
உன்னை மட்டும்
சுமந்ததில் சுகம்
எனக்கு
நாம் கை பிடித்து பொடி
நடைபோடுவதற்காகவே
நம் பள்ளி வரவை
அதிகரித்தோம்
ஒரே விட்டில் வாழ்ந்தலும் ஒரு
வார்த்தை பேசியதில்லை பயத்தல்
நானும் வெக்கத்தால் நீயும்
ஊமையாய் ஊனமாய் வாழ்ந்தோம்
இதில்தான் உண்டானது எனக்கும்
உனக்குமான உறவு
உன்னில் விழிக்க வேண்டும்
என்றே தினமும் தூங்க போவேன்
நான் அதற்காக நீ அதிகாலை எனக்கு
முன் விழிப்பாய்
உன்னில் விழிக்காமல்
என்றாவது என் தூக்கம்
கலைந்ததுண்டா
பள்ளியில் விழுந்த எறிகணை என்
உயிரை பறித்திருக்குமோ என பதறிய
படி நீ வர பழக்கம் இல்லாத கண்ணிரோடு
உன்னை நான் சந்திததில் அன்றே கண்டேன்
உன் கண்களில் சுனாமி அலையை
ஒரே விட்டில் வாழ்ந்த போதும் ஒருவரும்
கண்டு பிடிக்காமல்வளர்தோமெ நம் காதலை
அதுதான்அதிசயத்தில் அதிசயம்
என் சைக்கிளில் ஏறி வரவேன்டும்
என்பதில் உனக்கு அளவில்லாத
ஆனந்தம் அதற்காகவே அதிகாலை
விழித்து உன் சைக்கிளின் காற்றை
துறந்து விடுவாயே அதை அறிந்த
நானும் என் சைக்கிளை அடிக்கடி
கழுவி துடைப்பேன்
மாதத்தில் ஒரு தடைவையேனும்
உன் கண்ணீரை பார்க்க வேண்டும்
என்பதில் எனக்கு அளவு கடந்த
ஆசை
அதற்காகவே
எனக்கு மலேரியா வராமலே மூளை மலேரியா
வந்தது போல் நடித்து உன் கண்ணீரை வர வழைத்து
ரசிப்பேன் கண்ணீரையும் உன் ஏக்கத்தையும்
என் பெயரை அடிக்கடி கூப்பிட ஆசை உனக்கு
அதற்காகவே பரிசாய் கேட்டாய் கிளி பிடித்து
தர முடியுமா என்று
நீ கேட்ட உயிரையும் தருவேனென்றவன் கிளி
பிடித்து தரமாட்டேனா என்று கிளி பிடிக்க போய்
கிளியோடு விழுந்து மண்டை உடைந்த போதும்
கிளிக்கு எதுகுமாகாமல் காப்பாற்றி தந்தேன்
என் முதல் பரிசாய் அழகான கிளியை
நம்மை பிரிக்க நம் பெற்றோர்களுக்கு முன்
படை எடுத்து பிரித்தான் நம்மையும்
இலங்கை இராணுவம் சூரியகதிர்
நடவடிக்கையால்
எத்தனை நினைவுகள் எல்லாம்
நினைத்தால் கண்ணீரால் என்
கண்களூம் கரைந்துவிடும்
-யாழ்_அகத்தியன்
சின்ன வயசு உனக்கு மீசை
எனக்கும் ஆசை உனக்கும்
வராத காலம் அது ம்ம்...
பசுமையான காலம்
புத்தகங்களை சுமக்க
இயலாத வயதில்
உன்னை மட்டும்
சுமந்ததில் சுகம்
எனக்கு
நாம் கை பிடித்து பொடி
நடைபோடுவதற்காகவே
நம் பள்ளி வரவை
அதிகரித்தோம்
ஒரே விட்டில் வாழ்ந்தலும் ஒரு
வார்த்தை பேசியதில்லை பயத்தல்
நானும் வெக்கத்தால் நீயும்
ஊமையாய் ஊனமாய் வாழ்ந்தோம்
இதில்தான் உண்டானது எனக்கும்
உனக்குமான உறவு
உன்னில் விழிக்க வேண்டும்
என்றே தினமும் தூங்க போவேன்
நான் அதற்காக நீ அதிகாலை எனக்கு
முன் விழிப்பாய்
உன்னில் விழிக்காமல்
என்றாவது என் தூக்கம்
கலைந்ததுண்டா
பள்ளியில் விழுந்த எறிகணை என்
உயிரை பறித்திருக்குமோ என பதறிய
படி நீ வர பழக்கம் இல்லாத கண்ணிரோடு
உன்னை நான் சந்திததில் அன்றே கண்டேன்
உன் கண்களில் சுனாமி அலையை
ஒரே விட்டில் வாழ்ந்த போதும் ஒருவரும்
கண்டு பிடிக்காமல்வளர்தோமெ நம் காதலை
அதுதான்அதிசயத்தில் அதிசயம்
என் சைக்கிளில் ஏறி வரவேன்டும்
என்பதில் உனக்கு அளவில்லாத
ஆனந்தம் அதற்காகவே அதிகாலை
விழித்து உன் சைக்கிளின் காற்றை
துறந்து விடுவாயே அதை அறிந்த
நானும் என் சைக்கிளை அடிக்கடி
கழுவி துடைப்பேன்
மாதத்தில் ஒரு தடைவையேனும்
உன் கண்ணீரை பார்க்க வேண்டும்
என்பதில் எனக்கு அளவு கடந்த
ஆசை
அதற்காகவே
எனக்கு மலேரியா வராமலே மூளை மலேரியா
வந்தது போல் நடித்து உன் கண்ணீரை வர வழைத்து
ரசிப்பேன் கண்ணீரையும் உன் ஏக்கத்தையும்
என் பெயரை அடிக்கடி கூப்பிட ஆசை உனக்கு
அதற்காகவே பரிசாய் கேட்டாய் கிளி பிடித்து
தர முடியுமா என்று
நீ கேட்ட உயிரையும் தருவேனென்றவன் கிளி
பிடித்து தரமாட்டேனா என்று கிளி பிடிக்க போய்
கிளியோடு விழுந்து மண்டை உடைந்த போதும்
கிளிக்கு எதுகுமாகாமல் காப்பாற்றி தந்தேன்
என் முதல் பரிசாய் அழகான கிளியை
நம்மை பிரிக்க நம் பெற்றோர்களுக்கு முன்
படை எடுத்து பிரித்தான் நம்மையும்
இலங்கை இராணுவம் சூரியகதிர்
நடவடிக்கையால்
எத்தனை நினைவுகள் எல்லாம்
நினைத்தால் கண்ணீரால் என்
கண்களூம் கரைந்துவிடும்
-யாழ்_அகத்தியன்
சிலையாய்!
உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்
சிலையாய்
பார்பவர்களுக்கு
மட்டும் வலி
தெரியாமல்!
-யாழ்_அகத்தியன்
காத்திருக்கிறேன்
சிலையாய்
பார்பவர்களுக்கு
மட்டும் வலி
தெரியாமல்!
-யாழ்_அகத்தியன்
கோவப்படும் கோவங்கள்..!
என்னைக் கோவப் படுத்தியதுக்காக
உன் மேல் நீ கோவப்படுகிறாய்
உன்னைக் கோவப் படுத்தியதுக்காக
என் கோவத்தை வெறுக்கிறேன்
*
என்னால் உன் கோவங்களை
புரிந்து கொள்ள முடிவதில்லை
ஒரு விதத்தில் அதுவும் உதவி
செய்கிறது எனக்கு ஆங்கிலம்
புரியாததால்
*
உன் கோவத்தை என் மேல் இறக்கி
வைத்துவிட்டு போய் விடுவாய் பாவம்
நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க
*
உன் ஆசையை காட்டுவதற்காக
இப்பிடியா வார வாரம் என் கூட
கோவம் போட்டு பேசாமல்
விடுகிறாய் சில தினங்கள்
*
உன்னை அழகாய் எனக்கு காட்ட
விரும்புகிறாய் என்றால் சொல்லி
இருக்கலாமே உனக்கு விரும்பிய
அழகுசாதனப்பொருட்கள் வாங்கி
தந்திருப்பேனே அதை விட்டுட்டு
ஏன் என் மேல் அடிக்கடி கோவித்துக்
காட்டுகிறாய்
*
உன் கோவங்களை விதைப்பதற்கு
என் மனசா கிடைத்தது பாவம் அது
வளர என் கண்ணிரைக் கடன் கேக்கிறது
*
இதுவரை நீ என்னோடு கோவித்தது மீது
எனக்கு சந்தேகம் வந்ததில்லை கடைசியாக
நீ என்னோடு கோவப்பட்டதில் தான் சந்தேகம்
ஏனெனில் உன் கோபத்தை நான் கவிதையாக்கி
இருக்கிறேனே
-யாழ்_அகத்தியன்
உன் மேல் நீ கோவப்படுகிறாய்
உன்னைக் கோவப் படுத்தியதுக்காக
என் கோவத்தை வெறுக்கிறேன்
*
என்னால் உன் கோவங்களை
புரிந்து கொள்ள முடிவதில்லை
ஒரு விதத்தில் அதுவும் உதவி
செய்கிறது எனக்கு ஆங்கிலம்
புரியாததால்
*
உன் கோவத்தை என் மேல் இறக்கி
வைத்துவிட்டு போய் விடுவாய் பாவம்
நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க
*
உன் ஆசையை காட்டுவதற்காக
இப்பிடியா வார வாரம் என் கூட
கோவம் போட்டு பேசாமல்
விடுகிறாய் சில தினங்கள்
*
உன்னை அழகாய் எனக்கு காட்ட
விரும்புகிறாய் என்றால் சொல்லி
இருக்கலாமே உனக்கு விரும்பிய
அழகுசாதனப்பொருட்கள் வாங்கி
தந்திருப்பேனே அதை விட்டுட்டு
ஏன் என் மேல் அடிக்கடி கோவித்துக்
காட்டுகிறாய்
*
உன் கோவங்களை விதைப்பதற்கு
என் மனசா கிடைத்தது பாவம் அது
வளர என் கண்ணிரைக் கடன் கேக்கிறது
*
இதுவரை நீ என்னோடு கோவித்தது மீது
எனக்கு சந்தேகம் வந்ததில்லை கடைசியாக
நீ என்னோடு கோவப்பட்டதில் தான் சந்தேகம்
ஏனெனில் உன் கோபத்தை நான் கவிதையாக்கி
இருக்கிறேனே
-யாழ்_அகத்தியன்
Sunday, May 13, 2007
அன்னையர் தின கவிதை

உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு
ஆனாலும்
அவள் கைவிரலில்
உன் கைவாசம்
நீ பிடித்து தந்தவள்
அல்லவா..
*
என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி
ஆனாலும்
பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்
*
உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்
என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்
-யாழ்_அகத்தியன்
Saturday, May 12, 2007
காத்திருப்பு!
உனக்காய் காத்திருந்து நிலவு
கூட பகலில் வந்து விட்டது
பகல் நிலவாய் இன்னும் நீதான்
வரவில்லை
*
காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு
சுகமா அதைவிட சுகம் உனக்காய்
காத்திருப்பதில்
*
உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்
நீ வரும் பாதை கூட உன்னை போல்
அழகாக வெக்கப்படுகிறது
*
உனக்காய் காத்திருந்து இறந்து போக
ஆசைதான் உனக்காக கவிதைகள்
பிறக்காமல் போகுமென்றால்
*
உனக்காய் காத்திருந்து
நான் வாடிப் போகவில்லை
என் கவிதைகளுக்குத்தான்
தாடி முளைக்கிறது
*
நீ தாமதமாய் வரும்வரை எப்படி
சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது
*
என்னைக் காக்க வைக்க வேண்டும்
என்பதற்காக தயவு செய்து வராமல்
விட்டு விட்டாதே என் பேனா ஒரே
நாளிளே இறந்து போய்விடும்
*
உன்னைக் கண்டால் போதும்
எனக்கு முன் ஓடி வரும் என்
கவிதைகள்
*
எங்கே உன்னைக் காணவில்லை
இன்னும் என் பின்னால் என் கவிதைகள்
*
என் கவிதை கேக்கவே நீ தாமதமாய்
வருவாய் அதற்காகவே வந்துவிடும்
ஆயிரம் கவிதைகள்
*
நீ
இனி வரவேமாட்டாய் என்று
முடிவெடுத்த பின் தான் தினம்
வருவாய் இன்று முடிவெடுத்தபின்தான்
காத்திருக்கிறேன் வரவே மாட்டாயா
*
உனக்காய்க் காத்திருக்கும் என் நேரம்
முடிந்துவிட்டது இனியும் காத்திருந்தால்
அது என் கவிதைகளுக்காகத்தான்
-யாழ்_அகத்தியன்
கூட பகலில் வந்து விட்டது
பகல் நிலவாய் இன்னும் நீதான்
வரவில்லை
*
காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு
சுகமா அதைவிட சுகம் உனக்காய்
காத்திருப்பதில்
*
உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்
நீ வரும் பாதை கூட உன்னை போல்
அழகாக வெக்கப்படுகிறது
*
உனக்காய் காத்திருந்து இறந்து போக
ஆசைதான் உனக்காக கவிதைகள்
பிறக்காமல் போகுமென்றால்
*
உனக்காய் காத்திருந்து
நான் வாடிப் போகவில்லை
என் கவிதைகளுக்குத்தான்
தாடி முளைக்கிறது
*
நீ தாமதமாய் வரும்வரை எப்படி
சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது
*
என்னைக் காக்க வைக்க வேண்டும்
என்பதற்காக தயவு செய்து வராமல்
விட்டு விட்டாதே என் பேனா ஒரே
நாளிளே இறந்து போய்விடும்
*
உன்னைக் கண்டால் போதும்
எனக்கு முன் ஓடி வரும் என்
கவிதைகள்
*
எங்கே உன்னைக் காணவில்லை
இன்னும் என் பின்னால் என் கவிதைகள்
*
என் கவிதை கேக்கவே நீ தாமதமாய்
வருவாய் அதற்காகவே வந்துவிடும்
ஆயிரம் கவிதைகள்
*
நீ
இனி வரவேமாட்டாய் என்று
முடிவெடுத்த பின் தான் தினம்
வருவாய் இன்று முடிவெடுத்தபின்தான்
காத்திருக்கிறேன் வரவே மாட்டாயா
*
உனக்காய்க் காத்திருக்கும் என் நேரம்
முடிந்துவிட்டது இனியும் காத்திருந்தால்
அது என் கவிதைகளுக்காகத்தான்
-யாழ்_அகத்தியன்
கண்ணீரால் ஒரு கவிதை!
கண்ணீர் கன்னம் நனைக்க
காதல் கால் நனைக்க கனவின்றி
கண் சிவந்து கவிதையோடு தவம்
கிடக்கிறேன்
ஒரு நாள் மறையவே ஒரு ஜென்மம்
போகுதடி மறு நாள் வராமல் போகுமென்றே
மரணத்துக்காய் காத்திருக்கிறேன்
என் காதலும் என் கண்ணிரும்
என்னை நனைத்தே அழுக்காக்க
இன்னும் நீ மாறவில்லை
பழகிய நாட்களை மறக்கவே பல
வருசம் கிடக்கையில பாவை உன்
முகம் மறக்க எத்தனை ஜென்மம்
நான் எடுக்க
மறக்கத்தான் சொன்னாயா மறந்துவிட
சொன்னாயா என்ற காரணத்தை கேக்கவே
பேசாமல் போய்விட்டாய்
கிறுக்கன் நான் காதலை சொல்லி
சொல்லி கவிதையே செத்துடிச்சு
உன் பெயரை மறந்தேனென துணிவாய்
நான் சொல்ல நினைத்தாலும் என் பேனா
எனோ உன் பெயரைஎழுதி தொலைக்கிறது
விட்டுபோகாதே விட்டுபோகாதே என
உன் கால் பிடிச்சு கெஞ்சியும் உன் படம்
மட்டும் பார்த்தவன்தான் பெரிதிண்ணு
பார்க்காம போனாயடி
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு போதுமடி
ஒட்டுமொத்த பெண்களையும் உன்னில் பார்த்ததால்
உன்னால் உன்னால்த்தானடி பெண்களை வெறுத்தேன்
உனக்காய் எழுத நினைத்தால்
வார்த்தை வர மறுக்கிறது
இறுதியாய் ஒன்று
என் கவிதைகள் அழிந்தாலும் என்
காதல் பொய்யானாலும் உன்னை
நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்
உன்னால் நான் அடைந்த அனுபவங்கள்
அனைத்தும்என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்
கடைசியாய் ஒன்று
என் கவிதைகளை எங்கு கண்டாலும்
கண்ணீரை துடைத்து விடு
-யாழ்_அகத்தியன்
காதல் கால் நனைக்க கனவின்றி
கண் சிவந்து கவிதையோடு தவம்
கிடக்கிறேன்
ஒரு நாள் மறையவே ஒரு ஜென்மம்
போகுதடி மறு நாள் வராமல் போகுமென்றே
மரணத்துக்காய் காத்திருக்கிறேன்
என் காதலும் என் கண்ணிரும்
என்னை நனைத்தே அழுக்காக்க
இன்னும் நீ மாறவில்லை
பழகிய நாட்களை மறக்கவே பல
வருசம் கிடக்கையில பாவை உன்
முகம் மறக்க எத்தனை ஜென்மம்
நான் எடுக்க
மறக்கத்தான் சொன்னாயா மறந்துவிட
சொன்னாயா என்ற காரணத்தை கேக்கவே
பேசாமல் போய்விட்டாய்
கிறுக்கன் நான் காதலை சொல்லி
சொல்லி கவிதையே செத்துடிச்சு
உன் பெயரை மறந்தேனென துணிவாய்
நான் சொல்ல நினைத்தாலும் என் பேனா
எனோ உன் பெயரைஎழுதி தொலைக்கிறது
விட்டுபோகாதே விட்டுபோகாதே என
உன் கால் பிடிச்சு கெஞ்சியும் உன் படம்
மட்டும் பார்த்தவன்தான் பெரிதிண்ணு
பார்க்காம போனாயடி
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு போதுமடி
ஒட்டுமொத்த பெண்களையும் உன்னில் பார்த்ததால்
உன்னால் உன்னால்த்தானடி பெண்களை வெறுத்தேன்
உனக்காய் எழுத நினைத்தால்
வார்த்தை வர மறுக்கிறது
இறுதியாய் ஒன்று
என் கவிதைகள் அழிந்தாலும் என்
காதல் பொய்யானாலும் உன்னை
நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்
உன்னால் நான் அடைந்த அனுபவங்கள்
அனைத்தும்என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்
கடைசியாய் ஒன்று
என் கவிதைகளை எங்கு கண்டாலும்
கண்ணீரை துடைத்து விடு
-யாழ்_அகத்தியன்
கண்ணாடி!
நீதான் என்னை முழுமையாய்
வாசித்தவள் என்ற பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ என் மனதை மட்டும்
வாசிக்கும் போது கண்ணாடி
போட மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
வாசித்தவள் என்ற பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ என் மனதை மட்டும்
வாசிக்கும் போது கண்ணாடி
போட மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
காதல் sms!
உன்னைச் சுமக்கும்
என் இதயம் கனக்கவில்லை
உன் sms சை சுமக்கும் என்
கைபேசி கனக்கிறது!
-யாழ்_அகத்தியன்
என் இதயம் கனக்கவில்லை
உன் sms சை சுமக்கும் என்
கைபேசி கனக்கிறது!
-யாழ்_அகத்தியன்
காதல்
என் நலன்களை நீ விசாரித்த
பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்
………………………………………………………………….
நீ என் கூடகோபம் போடும்
நேரங்களில்தான்
காதல் என் கூட நேசம் போடுகிறது
……………………………………………………..
நீயும் நானும் மெளனம்காக்கும்
நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து கவிதை
எழுதுகிறது
…………………………………………………………………..
நீ பிரிந்த பிறகுதான் என் காதலை
அளக்க அளவுகோல
இல்லையென்றது காதல்
…………………………………………………
எழுத்துப் பிழை விட்டாலும்
பரவாயில்லை
கவிதை எழுத சொல்லும் காதல்
……………………………………………………………
கற்றுக்கொடுக்கும்…
விட்டு கொடுப்பது எப்படி
விட்டுக்கொடுப்பதுதான்
காதல் என்று
…………………………………………………………..
மீசை வளர்ந்த பிறகுதான்
நான் வயசுக்கு வந்தேனாம்
பொய் சொல்கிறார்கள்…காதல்
வந்த பிறகுதான்நான் வயசுக்கே
வந்தேன்
…………………………………………………………..
நீ என்னங்க.. என்று என்னை
அழைக்கும் போதுதான் காதல்
என்னை தட்டி எழுப்புகிறது
……………………………………………………………
நீ பிரிந்துதூர மறையும் போதுதான்
காதல் எனக்குள்உதிக்க ஆரம்பிக்கிறது
…………………………………………………………..
உன் பிரிவிலாவது பொய்
சொல்லவைத்திருக்கும் காதல்………..
-யாழ்_அகத்தியன்
பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்
………………………………………………………………….
நீ என் கூடகோபம் போடும்
நேரங்களில்தான்
காதல் என் கூட நேசம் போடுகிறது
……………………………………………………..
நீயும் நானும் மெளனம்காக்கும்
நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து கவிதை
எழுதுகிறது
…………………………………………………………………..
நீ பிரிந்த பிறகுதான் என் காதலை
அளக்க அளவுகோல
இல்லையென்றது காதல்
…………………………………………………
எழுத்துப் பிழை விட்டாலும்
பரவாயில்லை
கவிதை எழுத சொல்லும் காதல்
……………………………………………………………
கற்றுக்கொடுக்கும்…
விட்டு கொடுப்பது எப்படி
விட்டுக்கொடுப்பதுதான்
காதல் என்று
…………………………………………………………..
மீசை வளர்ந்த பிறகுதான்
நான் வயசுக்கு வந்தேனாம்
பொய் சொல்கிறார்கள்…காதல்
வந்த பிறகுதான்நான் வயசுக்கே
வந்தேன்
…………………………………………………………..
நீ என்னங்க.. என்று என்னை
அழைக்கும் போதுதான் காதல்
என்னை தட்டி எழுப்புகிறது
……………………………………………………………
நீ பிரிந்துதூர மறையும் போதுதான்
காதல் எனக்குள்உதிக்க ஆரம்பிக்கிறது
…………………………………………………………..
உன் பிரிவிலாவது பொய்
சொல்லவைத்திருக்கும் காதல்………..
-யாழ்_அகத்தியன்
காதலே வருவாயா
உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால் எனக்கு
காத்திருப்பதில் அதிக சுகம்
*
உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை உன்
தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பம்
*
கவிதைக்காய் காத்திருப்பதில்
கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான்
உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு
கால் வலிக்கிறது
*
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே
என்னைக் காக்க வைத்து விட்டுவரும்
போது கவனம் நீந்த நேரிடலாம்
*
என் கவிதையின் கண்ணீரில்
இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்
*
காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்
கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ
*
உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது விட்டுத்தான்
போயிருப்பேன்
-யாழ்_அகத்தியன்
சுகமென்றால் எனக்கு
காத்திருப்பதில் அதிக சுகம்
*
உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை உன்
தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பம்
*
கவிதைக்காய் காத்திருப்பதில்
கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான்
உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு
கால் வலிக்கிறது
*
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே
என்னைக் காக்க வைத்து விட்டுவரும்
போது கவனம் நீந்த நேரிடலாம்
*
என் கவிதையின் கண்ணீரில்
இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்
*
காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்
கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ
*
உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது விட்டுத்தான்
போயிருப்பேன்
-யாழ்_அகத்தியன்
காதலால்…..
நான் காதலால்
கவிஞன்
ஆனதை விட
பைத்தியக்காரனாகி
இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-யாழ்_அகத்தியன்
கவிஞன்
ஆனதை விட
பைத்தியக்காரனாகி
இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-யாழ்_அகத்தியன்
Friday, May 11, 2007
பெயராசை..
உனக்கு பிடித்தவர்களின்
பட்டியலில் என் பெயர்
இல்லையென்றாலும்
உனக்கு பிடிக்காதவர்களின்
பட்டியலிலாவது என் பெயருக்கு
முதலிடம் கொடுத்து விடு
அந்த புகழ் போதும் என்
பெயராசைக்கு
-யாழ்_அகத்தியன்
பட்டியலில் என் பெயர்
இல்லையென்றாலும்
உனக்கு பிடிக்காதவர்களின்
பட்டியலிலாவது என் பெயருக்கு
முதலிடம் கொடுத்து விடு
அந்த புகழ் போதும் என்
பெயராசைக்கு
-யாழ்_அகத்தியன்
நீ மறந்த எதுவும்……
உன்னை மட்டும்காதலித்தேன்
என்பதை மறந்தாய்
உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்
உன் மறதி கூட எனக்கு
பிடித்திருக்கிறது நீ மறந்த
எதுவும் உருப்பட்டதில்லையே
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
காதலாகுமா காதல்

தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன்
இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள்
என் காதலை
*
நான் பேசிக்கொண்டே இருக்க உன்
கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும்
நான் பேசாமல் இருக்க உன்னிடம்
கற்றுகொள்ள வேண்டும்
*
நீ காட்டும் யார் என்றாலும்
சண்டை பிடிக்க தயார் உன்
கண்களை காட்டத வரை
*
உன்னை சிரிக்க வைத்து பாக்க
ஆசைதான் இன்னும் முழுசாய்
பாக்க விட்டதில்லை உன் கன்னக்குழி
*
நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன்
இருந்தும் காட்டமல் மறைக்கிறேன்
கிடைக்காமல் போய்விடுவாயோ என்று
*
உன்னை ஒரு தலையாக காதலிப்பது
முட்டாள் தனமாக இருந்தாலும் உன்னைக்
காதலிக்கிறேன் என்பதே என் ஆயுளின்
கெட்டித்தனம்
-யாழ்_அகத்தியன்
காதலர்தின கிறுக்கல்கள்
நீ பேசாமல் நின்றாலும்
பேசிக்கொண்டேதானே
இருக்கிறது இன்னும்
என்னோடு உன் கண்கள்
*
இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க நாம்
நல்ல நண்பர்கள் என்று
*
உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான்
கொடுக்கும்போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?
*
நல்ல காலம் உன் கண் பேசும் வார்த்தைகள்
யாருக்கும் புரிவதில்லை இல்லையேல் திட்டும்
போதும் நான் சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்
*
உனக்கான கவி நடையில்தான் என்
எழுத்துக்கள் இடையில் கிறுக்கல் ஆகிறது
*
தயவு செய்து கோவத்தோடு எனை
விட்டு பிரியாதே என் கோவத்தை
யாரிடமாவது காட்ட வேண்டி வந்துவிடும்
*
நம் முதல் சந்திப்பில் காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்காதல் வந்தது
*
இன்று காதலர்தினமாம் யாரையாவது
காதலிக்க விடுகிறாயா நேற்றே வந்து விட்டாய்
-யாழ்_அகத்தியன்
பேசிக்கொண்டேதானே
இருக்கிறது இன்னும்
என்னோடு உன் கண்கள்
*
இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க நாம்
நல்ல நண்பர்கள் என்று
*
உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான்
கொடுக்கும்போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?
*
நல்ல காலம் உன் கண் பேசும் வார்த்தைகள்
யாருக்கும் புரிவதில்லை இல்லையேல் திட்டும்
போதும் நான் சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்
*
உனக்கான கவி நடையில்தான் என்
எழுத்துக்கள் இடையில் கிறுக்கல் ஆகிறது
*
தயவு செய்து கோவத்தோடு எனை
விட்டு பிரியாதே என் கோவத்தை
யாரிடமாவது காட்ட வேண்டி வந்துவிடும்
*
நம் முதல் சந்திப்பில் காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்காதல் வந்தது
*
இன்று காதலர்தினமாம் யாரையாவது
காதலிக்க விடுகிறாயா நேற்றே வந்து விட்டாய்
-யாழ்_அகத்தியன்
கவியானேன் நான்!
நீ சிரிக்க மறந்த உன் புகைப்படம்
மீது ஒரு கவிதை எழுதினேன் என்ன
அதிசயம்உன் கன்னக் குழிக்குள்ளே
காணாமல் போனதுஎன் கவிதை
*
தினம் ஒரு கவி எழுதி உன்னைத்
தேட விட்டேன் எல்லாமே களைப்பில்
உன் ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது
*
மது போதையிலும் எழுதி முடித்தேன்
உன் பெயரை தலைகிழாக என் கவிதையாய்
*
என் கவிதைகள் எல்லாமே எழுதிய
என்னை விசாரிக்க வைப்பதைவிட
உன்னைத்தான் அதிகம் விசாரிக்க வைக்கிறது
*
எனக்கு பிறக்கும் கவிதைகள் எல்லாத்தையும்
நீ வாழவைக்க ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு கூட்டிச்செல்
-யாழ்_அகத்தியன்
மீது ஒரு கவிதை எழுதினேன் என்ன
அதிசயம்உன் கன்னக் குழிக்குள்ளே
காணாமல் போனதுஎன் கவிதை
*
தினம் ஒரு கவி எழுதி உன்னைத்
தேட விட்டேன் எல்லாமே களைப்பில்
உன் ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது
*
மது போதையிலும் எழுதி முடித்தேன்
உன் பெயரை தலைகிழாக என் கவிதையாய்
*
என் கவிதைகள் எல்லாமே எழுதிய
என்னை விசாரிக்க வைப்பதைவிட
உன்னைத்தான் அதிகம் விசாரிக்க வைக்கிறது
*
எனக்கு பிறக்கும் கவிதைகள் எல்லாத்தையும்
நீ வாழவைக்க ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு கூட்டிச்செல்
-யாழ்_அகத்தியன்
கவியானவளே… [05]
உன் கண்களில் மிதக்க
ஆசைபட்டு மூழ்கிப்போனது
யார் யாரோ கண்களில்
என் கவிதைகள்
*
என்னைக் காட்டிக் கொடுப்பவன்தான்
தூரோகி என்றால் என்னவளைக்
காட்டிக்கொடுக்கும் என் கண்களை
யார் என்பேன்
*
நீ அழகாய் கிழித்தெறிவதை
ரசிப்பதற்காகவே அழகான
கவிதைகளாய் எழுதிக்கொண்டு
வருகிறேன்
*
சாண் ஏற முழம் சறுக்கிறது
உன் வீட்டு வாசல் படி எனக்கு
*
என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல்
போனது நீ என்னை மறந்ததை நான்
இன்னும் நம்பவில்லை
*
அவளைச் சிரிக்கவைத்து அழாமல்
எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு
புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை
*
உன் வீட்டுச் சுவரில் எனக்கு
யாரோ எழுதிய இரங்கல் கவிதை
இன்னும் இறக்காமல் வாழ்கிறது
நீ வாசிக்க மறந்ததால்
-யாழ்_அகத்தியன்
ஆசைபட்டு மூழ்கிப்போனது
யார் யாரோ கண்களில்
என் கவிதைகள்
*
என்னைக் காட்டிக் கொடுப்பவன்தான்
தூரோகி என்றால் என்னவளைக்
காட்டிக்கொடுக்கும் என் கண்களை
யார் என்பேன்
*
நீ அழகாய் கிழித்தெறிவதை
ரசிப்பதற்காகவே அழகான
கவிதைகளாய் எழுதிக்கொண்டு
வருகிறேன்
*
சாண் ஏற முழம் சறுக்கிறது
உன் வீட்டு வாசல் படி எனக்கு
*
என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல்
போனது நீ என்னை மறந்ததை நான்
இன்னும் நம்பவில்லை
*
அவளைச் சிரிக்கவைத்து அழாமல்
எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு
புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை
*
உன் வீட்டுச் சுவரில் எனக்கு
யாரோ எழுதிய இரங்கல் கவிதை
இன்னும் இறக்காமல் வாழ்கிறது
நீ வாசிக்க மறந்ததால்
-யாழ்_அகத்தியன்
கவியானவளே… [04]
தன்னை அணைக்காமல் உன்னை
அணைத்துக் கொண்டதற்காய்
இன்னும் அழுதுகொண்டே
இருக்கிறது மெழுகுவத்தி
*
கால்களைக் காப்பாற்றித் தந்த எங்களை
கழட்டி விட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றச்சொல்லி
கோயிலுக்குள் பக்தகோடிகள்
*
கழித்த கல்லும் அத்திவாரத்துக்கு தேவைப்படும்
கவனம் என்பதை உனக்கு மாப்பிள்ளையானபோது
தெரிந்து கொண்டேன்
*
என் கவிதைத் திருடியை தாலி கொண்டு
சிறைப்பிடித்தேன் என் மனைவியாக
*
நான் எழுதிய கவிதை இல்லை
ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக்
கொண்டேன் உன் பெயரை
-யாழ்_அகத்தியன்
அணைத்துக் கொண்டதற்காய்
இன்னும் அழுதுகொண்டே
இருக்கிறது மெழுகுவத்தி
*
கால்களைக் காப்பாற்றித் தந்த எங்களை
கழட்டி விட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றச்சொல்லி
கோயிலுக்குள் பக்தகோடிகள்
*
கழித்த கல்லும் அத்திவாரத்துக்கு தேவைப்படும்
கவனம் என்பதை உனக்கு மாப்பிள்ளையானபோது
தெரிந்து கொண்டேன்
*
என் கவிதைத் திருடியை தாலி கொண்டு
சிறைப்பிடித்தேன் என் மனைவியாக
*
நான் எழுதிய கவிதை இல்லை
ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக்
கொண்டேன் உன் பெயரை
-யாழ்_அகத்தியன்
கவியானவளே… [03]
கனவில் வந்தவளைக்கை
கூப்பி வரவேற்றேன்
தூக்கத்தைத் திறந்து
*
என் கவிதைத் தலைப்பை
படித்துவிட்டு பொறாமை
பட்டார்கள்உன் பெயரை
தெரிந்தவர்கள் மட்டும்
*
கையெழுத்து அழகானால் தலை
எழுத்து நல்லா இருக்காதாம்
உண்மையானது உன்னால்
அழகான என் கையெழுத்தால்
*
இடமில்லாமல் என்னை இறக்கிவிட்டுப்
போனபடகில் ஏறிப்போனது என் காதல்
*
நீ என்னைப் பிரிந்ததை யார் கேட்டாலும்
நானாக பிரிந்தேன் என சிரித்தபடி சொல்லி
விட்டு தூக்கத்தில் அழுகிறேன்.
-யாழ்_அகத்தியன்
கூப்பி வரவேற்றேன்
தூக்கத்தைத் திறந்து
*
என் கவிதைத் தலைப்பை
படித்துவிட்டு பொறாமை
பட்டார்கள்உன் பெயரை
தெரிந்தவர்கள் மட்டும்
*
கையெழுத்து அழகானால் தலை
எழுத்து நல்லா இருக்காதாம்
உண்மையானது உன்னால்
அழகான என் கையெழுத்தால்
*
இடமில்லாமல் என்னை இறக்கிவிட்டுப்
போனபடகில் ஏறிப்போனது என் காதல்
*
நீ என்னைப் பிரிந்ததை யார் கேட்டாலும்
நானாக பிரிந்தேன் என சிரித்தபடி சொல்லி
விட்டு தூக்கத்தில் அழுகிறேன்.
-யாழ்_அகத்தியன்
கவியானவளே… [02]
கவிதை எழுதுவதை நிறுத்திவிட
நினைக்கும் போதெல்லாம் உன்
பெயரை எழுதி தொலைக்கிறது
என் பேனா
*
ஒவ்வொரு தூக்கத்திலும் அடிக்கடி
விழிக்க வேண்டி வருகிறது உன்னோடு
தூங்குவதாய் கனவு காண்பதால்
*
குடி குடியைக் கெடுக்கும் என்பதை
எழுதிவிட வேண்டும் உன் உதட்டிலும்
*
காதல் பாடத்தில் இருவருமே
சித்தி அடைந்தோம் மறந்ததில்
நீயும் மறக்காததில் நானும்
*
நான் பயணிக்கும் பாதையெங்கும்
என் கவிதைகளை விதைத்துக்
கொண்டேபோகிறேன் ஏதெனும்
ஒன்றிலாவது நீ இழப்பாறுவாய்
என்ற நம்பிக்கையில்
*
யாரவது எனக்கு எழுந்து நின்று
இடம் தர மாட்டார்களா என
உதைக்கிறது உன் நினைவு
-யாழ்_அகத்தியன்
நினைக்கும் போதெல்லாம் உன்
பெயரை எழுதி தொலைக்கிறது
என் பேனா
*
ஒவ்வொரு தூக்கத்திலும் அடிக்கடி
விழிக்க வேண்டி வருகிறது உன்னோடு
தூங்குவதாய் கனவு காண்பதால்
*
குடி குடியைக் கெடுக்கும் என்பதை
எழுதிவிட வேண்டும் உன் உதட்டிலும்
*
காதல் பாடத்தில் இருவருமே
சித்தி அடைந்தோம் மறந்ததில்
நீயும் மறக்காததில் நானும்
*
நான் பயணிக்கும் பாதையெங்கும்
என் கவிதைகளை விதைத்துக்
கொண்டேபோகிறேன் ஏதெனும்
ஒன்றிலாவது நீ இழப்பாறுவாய்
என்ற நம்பிக்கையில்
*
யாரவது எனக்கு எழுந்து நின்று
இடம் தர மாட்டார்களா என
உதைக்கிறது உன் நினைவு
-யாழ்_அகத்தியன்
கவியானவளே… [01]
என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்
*
கிடைத்தது எல்லாம் பெரிதாகவே
தெரிந்தது நீ கிடைக்காமல் போகும்
வரை
*
உன் நினைவுகளுக்கு ஆடை மாற்ற
வேண்டும் கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா
*
நீ வேண்டும் என்பது என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும் என்பது என் புதுக் கவிதை
*
நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்
-யாழ்_அகத்தியன்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்
*
கிடைத்தது எல்லாம் பெரிதாகவே
தெரிந்தது நீ கிடைக்காமல் போகும்
வரை
*
உன் நினைவுகளுக்கு ஆடை மாற்ற
வேண்டும் கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா
*
நீ வேண்டும் என்பது என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும் என்பது என் புதுக் கவிதை
*
நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்
-யாழ்_அகத்தியன்
கவிதையாய்!
ஒரு தடவை குடிக்கவா
என்றுதானே கேட்டேன்
நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்
அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.
-யாழ்_அகத்தியன்
என்றுதானே கேட்டேன்
நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்
அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.
-யாழ்_அகத்தியன்
கவிதை என்கிறாயே!
ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-யாழ்_அகத்தியன்
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-யாழ்_அகத்தியன்
கவனம்!
காதலிக்க சொல்லி கவிஞன்
என்னைத் தள்ளிவிட்டான்
ஆனாலும் நான் விழவில்லை
நீ எனை பிடிக்கும் வரை
-யாழ்_அகத்தியன்
என்னைத் தள்ளிவிட்டான்
ஆனாலும் நான் விழவில்லை
நீ எனை பிடிக்கும் வரை
-யாழ்_அகத்தியன்
கனவே கலையாதே!
உன் ஒவ்வொரு தூக்கத்திலும்
என் கனவு பலிக்கிறது என் கனவு
ஒவ்வொன்றிலும் என் காதல் தூங்குகிறது
*
உனக்குத் தெரியாது உன் தூக்கத்தில்தான்
நான் கனவு காண்பவன் என்று ஆனால்
எனக்குத் தெரியும் நீ என்னைக் காண்பதற்க்காய்
தூங்கச் செல்வதில்லையென்று
-யாழ்_அகத்தியன்
என் கனவு பலிக்கிறது என் கனவு
ஒவ்வொன்றிலும் என் காதல் தூங்குகிறது
*
உனக்குத் தெரியாது உன் தூக்கத்தில்தான்
நான் கனவு காண்பவன் என்று ஆனால்
எனக்குத் தெரியும் நீ என்னைக் காண்பதற்க்காய்
தூங்கச் செல்வதில்லையென்று
-யாழ்_அகத்தியன்
கண்ணீரால் ஒரு கவிதை!
கண்ணீர் கன்னம் நனைக்க
காதல் கால் நனைக்க கனவின்றி
கண் சிவந்து கவிதையோடு தவம்
கிடக்கிறேன்
ஒரு நாள் மறையவே ஒரு ஜென்மம்
போகுதடி மறு நாள் வராமல் போகுமென்றே
மரணத்துக்காய் காத்திருக்கிறேன்
என் காதலும் என் கண்ணிரும் என்னை
நனைத்தே அழுக்காக்கஇன்னும் நீ மாறவில்லை
பழகிய நாட்களை மறக்கவே பல வருசம் கிடக்கையில
பாவை உன் முகம் மறக்க எத்தனை ஜென்மம் நான் எடுக்க
மறக்கத்தான் சொன்னாயா மறந்துவிட சொன்னாயா
என்ற காரணத்தை கேக்கவே பேசாமல் போய்விட்டாய்
கிறுக்கன் நான் காதலை சொல்லி
சொல்லி கவிதையே செத்துடிச்சு
உன் பெயரை மறந்தேனென
துணிவாய் நான் சொல்ல
நினைத்தாலும் என் பேனா
எனோ உன் பெயரை எழுதி
தொலைக்கிறது
விட்டுபோகாதே விட்டுபோகாதே
என உன் கால் பிடிச்சு கெஞ்சியும்
உன் படம் மட்டும் பார்த்தவன்தான்
பெரிதிண்ணு பார்க்காம போனாயடி
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு போதுமடி
ஒட்டு மொத்த பெண்களையும் உன்னில் பார்த்ததால்-
உன்னால் உன்னால்த்தானடி பெண்களை வெறுத்தேன்
உனக்காய் எழுத நினைத்தால் வார்த்தை
வர மறுக்கிறது
இறுதியாய் ஒன்று
என் கவிதைகள் அழிந்தாலும் என்
காதல் பொய்யானாலும் உன்னை
நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்
உன்னால் நான் அடைந்த
அனுபவங்கள் அனைத்தும்
என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்
கடைசியாய் ஒன்று
என் கவிதைகளை எங்கு
கண்டாலும் கண்ணீரை
துடைத்து விடு
-யாழ்_அகத்தியன்
காதல் கால் நனைக்க கனவின்றி
கண் சிவந்து கவிதையோடு தவம்
கிடக்கிறேன்
ஒரு நாள் மறையவே ஒரு ஜென்மம்
போகுதடி மறு நாள் வராமல் போகுமென்றே
மரணத்துக்காய் காத்திருக்கிறேன்
என் காதலும் என் கண்ணிரும் என்னை
நனைத்தே அழுக்காக்கஇன்னும் நீ மாறவில்லை
பழகிய நாட்களை மறக்கவே பல வருசம் கிடக்கையில
பாவை உன் முகம் மறக்க எத்தனை ஜென்மம் நான் எடுக்க
மறக்கத்தான் சொன்னாயா மறந்துவிட சொன்னாயா
என்ற காரணத்தை கேக்கவே பேசாமல் போய்விட்டாய்
கிறுக்கன் நான் காதலை சொல்லி
சொல்லி கவிதையே செத்துடிச்சு
உன் பெயரை மறந்தேனென
துணிவாய் நான் சொல்ல
நினைத்தாலும் என் பேனா
எனோ உன் பெயரை எழுதி
தொலைக்கிறது
விட்டுபோகாதே விட்டுபோகாதே
என உன் கால் பிடிச்சு கெஞ்சியும்
உன் படம் மட்டும் பார்த்தவன்தான்
பெரிதிண்ணு பார்க்காம போனாயடி
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு போதுமடி
ஒட்டு மொத்த பெண்களையும் உன்னில் பார்த்ததால்-
உன்னால் உன்னால்த்தானடி பெண்களை வெறுத்தேன்
உனக்காய் எழுத நினைத்தால் வார்த்தை
வர மறுக்கிறது
இறுதியாய் ஒன்று
என் கவிதைகள் அழிந்தாலும் என்
காதல் பொய்யானாலும் உன்னை
நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்
உன்னால் நான் அடைந்த
அனுபவங்கள் அனைத்தும்
என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்
கடைசியாய் ஒன்று
என் கவிதைகளை எங்கு
கண்டாலும் கண்ணீரை
துடைத்து விடு
-யாழ்_அகத்தியன்
கண்ணாடி!
நீதான் என்னை முழுமையாய்
வாசித்தவள் என்றபெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது கண்ணாடி
போட மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
வாசித்தவள் என்றபெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது கண்ணாடி
போட மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
கடைசி SMS!
உன் ஒவ்வொரு SMS சும்
தான் கடைசி SMS சாய்
இருந்துவிடக் கூடதென்று
வருத்தப்படுகிறது உன்
அடுத்த SMS சை எதிர்பார்த்தபடி.
-யாழ்_அகத்தியன்
தான் கடைசி SMS சாய்
இருந்துவிடக் கூடதென்று
வருத்தப்படுகிறது உன்
அடுத்த SMS சை எதிர்பார்த்தபடி.
-யாழ்_அகத்தியன்
Wednesday, May 9, 2007
என்னவனே வருவாயா?

என்னவனே....
உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?
காலை மாலையாவதும் மாலை
காலையாவதும் உந்தன் ஆசைக்குள்
மறையவேண்டும் வருவாயா?
எந்தன் கோட்டையை விட்டு நீ
போனாலும் நீ போட்டு விட்டுபோன
கோடுகள் ஆறவில்லைஅதற்காகவேனும்
வருவாயா?
கோழி கூவினாலும் கோயில் மணி
அடித்தாலும்கோலம் போட மறந்தாலும்
உந்தன் மடியில் மறக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா?
கனவில் நான் குளித்து நினைவில்
காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள
உண்ர்வோடு வருவாயா?
அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை
தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி
விட்டாய் அணையாமல் எரிகிறேன்
அதற்காகவேனும் வருவாயா?
கோடை மழையாய் நீ வந்தாலும்
காதலாஅடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா?
இரவைக் காட்டிக்கொடுக்கும் நிலவைப் போல
எந்தன் வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க
இரவில் வருவாயா?
ஊமையான உலகத்தில்உன்னோடு
பாட வேண்டும் துடிக்காத நரம்பெல்லாம்
இசைக்க வேண்டும் அதைக்கேட்டு நீ ஆடிக்
களைக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா?
மறந்து விட்டாயா நம் தனிமை பிரிந்து
நான்கு மாதமாச்சு எங்கே ஒருதடவை
வந்து பிரிந்து விடு
நாளாக நாளாக நான் பழுக்கிறேன்
நீ சுட்ட பழம்தானேடா நான்
பரிமார வருவாயா?
இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்
நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்
என் ஏக்கத்தை களைந்து விடு
என் வெக்கத்தை பார்க்கவேண்டும்
உன்னோடு நான்அதற்காகவேனும்
வருவாயா?
வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா?
-யாழ்_அகத்தியன்
என் பேனாவின் ரகசியம்!
என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை
*
கண்மூடி கிறுக்கிவிட்டு கண்
திறந்து தேடுகிறேன் ஏதாவது
கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று
*
தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது
என் பேனாதான் உன் பேனாவுக்கு
நன்றி சொல்ல
*
என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்
நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி
பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு
*
உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா
யாருக்காக தலை குனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று
*
உன் தோழிகள் மட்டும்தான் கண்டு
பிடிக்கிறார்கள் உன் சினுங்களை
மட்டும் கவிதையாய் வடிக்கிறது
என் பேனாவென்று
*
உன் புகைப்படத்தோடு ஒரு நாள்
இருந்த பின்தான் என் பேனா கவி
எழுத மறுக்கிறது
*
உனக்காய் எழுத நினைத்த எந்த
கவிதையையும் எழுதவேயில்லை
என் பேனா அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்
-யாழ்_அகத்தியன்
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை
*
கண்மூடி கிறுக்கிவிட்டு கண்
திறந்து தேடுகிறேன் ஏதாவது
கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று
*
தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது
என் பேனாதான் உன் பேனாவுக்கு
நன்றி சொல்ல
*
என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்
நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி
பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு
*
உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா
யாருக்காக தலை குனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று
*
உன் தோழிகள் மட்டும்தான் கண்டு
பிடிக்கிறார்கள் உன் சினுங்களை
மட்டும் கவிதையாய் வடிக்கிறது
என் பேனாவென்று
*
உன் புகைப்படத்தோடு ஒரு நாள்
இருந்த பின்தான் என் பேனா கவி
எழுத மறுக்கிறது
*
உனக்காய் எழுத நினைத்த எந்த
கவிதையையும் எழுதவேயில்லை
என் பேனா அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்
-யாழ்_அகத்தியன்
Tuesday, May 8, 2007
என் பிரியமானவளே!
என் பிரியமானவளே!
என் உள்ளம் குளிருகையில் உன்னை
நினைத்தால் என் உருவம் வேர்க்கிறது.
எதற்காக உன் முகத்திரையை என்
கண்களில் ஒட்டி விட்டுப் போனாய்?
என்னவளே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும் ஓரு வார்த்தையின்
வடிவில் ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?
உன் புன்னகையையும் உன்
பார்வையையும் எப்படி உன்னால்
ஒரே அழகி ல்ஒரே நேரத்தில்
புரிய முடிகிறது.
உன்னால் மட்டுமே என் பேனாவை
பூட்டி விட முடியும் என்று தெரிந்தும்
ஏன் பூட்டை மட்டும் தொலைத்தாய்?
நெஞ்சுக்குள் ஆசைகளை வைத்துக்
கொண்டுநாக்கில் மட்டும் எப்படி
ஆண்மீகம் பேசுகிறாய்?
உன் முதல் பார்வைஎன்னைச்
சுட்டது உன் முதல் புன்னகை
என்னைக் காப்பாற்றியது
பிரியமானவளே!
என்னை மட்டும் திருடி விடத் தீர்மானமா?
இல்லைஎன்னையும் கவிஞனாக்கத் திட்டமா?
என்ன செய்யப் போகிறாய்?
என்னாலும் என் கவிதையாலும்சென்று விட
முடியாத தேசத்துக்கு உன்னால் சென்று விட முடியும்.
நீ என்னை மறந்து விடகாற்றில்லாத
கிரகத்துக்குச் சென்றாலும் உன் காதல்
என்னைச் சுவாசித்து அங்கும் உன்
உயிரைக் காப்பாற்றும்!
காதலை மறைக்க முயற்சிக்கலாம்
மறந்து விட முடியாது
பிரியமானவளே!
என்னை மறந்து நீ தூங்கினால்
கனவால் விழிக்க வைப்பேன்
நீ என்னை மறந்து உன்னை
மட்டும் நினைத்தால்
நீ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும்
என்னை ஞாபகப்படுத்தி நினைவூட்டுவேன்.
என் பிரியமானவளே!
என்னை அழித்துவிட உன்னால் முடியும்
என் காதலைஅழித்துவிட யாராலும் முடியாது.
மரணத்தைப் போலவே
என் காதலும் நிலையானது!
-யாழ்_அகத்தியன்
என் உள்ளம் குளிருகையில் உன்னை
நினைத்தால் என் உருவம் வேர்க்கிறது.
எதற்காக உன் முகத்திரையை என்
கண்களில் ஒட்டி விட்டுப் போனாய்?
என்னவளே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும் ஓரு வார்த்தையின்
வடிவில் ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?
உன் புன்னகையையும் உன்
பார்வையையும் எப்படி உன்னால்
ஒரே அழகி ல்ஒரே நேரத்தில்
புரிய முடிகிறது.
உன்னால் மட்டுமே என் பேனாவை
பூட்டி விட முடியும் என்று தெரிந்தும்
ஏன் பூட்டை மட்டும் தொலைத்தாய்?
நெஞ்சுக்குள் ஆசைகளை வைத்துக்
கொண்டுநாக்கில் மட்டும் எப்படி
ஆண்மீகம் பேசுகிறாய்?
உன் முதல் பார்வைஎன்னைச்
சுட்டது உன் முதல் புன்னகை
என்னைக் காப்பாற்றியது
பிரியமானவளே!
என்னை மட்டும் திருடி விடத் தீர்மானமா?
இல்லைஎன்னையும் கவிஞனாக்கத் திட்டமா?
என்ன செய்யப் போகிறாய்?
என்னாலும் என் கவிதையாலும்சென்று விட
முடியாத தேசத்துக்கு உன்னால் சென்று விட முடியும்.
நீ என்னை மறந்து விடகாற்றில்லாத
கிரகத்துக்குச் சென்றாலும் உன் காதல்
என்னைச் சுவாசித்து அங்கும் உன்
உயிரைக் காப்பாற்றும்!
காதலை மறைக்க முயற்சிக்கலாம்
மறந்து விட முடியாது
பிரியமானவளே!
என்னை மறந்து நீ தூங்கினால்
கனவால் விழிக்க வைப்பேன்
நீ என்னை மறந்து உன்னை
மட்டும் நினைத்தால்
நீ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும்
என்னை ஞாபகப்படுத்தி நினைவூட்டுவேன்.
என் பிரியமானவளே!
என்னை அழித்துவிட உன்னால் முடியும்
என் காதலைஅழித்துவிட யாராலும் முடியாது.
மரணத்தைப் போலவே
என் காதலும் நிலையானது!
-யாழ்_அகத்தியன்
என் டைரி!
என் டைரியை வாசித்து விடு
என் ஏக்கங்களை புரிந்து கொள்ள
என் கவிதைகளை வாசித்து விடு
என் காதலை புரிந்து கொள்ள
உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?
என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்
-யாழ்_அகத்தியன்
என் ஏக்கங்களை புரிந்து கொள்ள
என் கவிதைகளை வாசித்து விடு
என் காதலை புரிந்து கொள்ள
உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?
என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்
-யாழ்_அகத்தியன்
என் சைக்கிள் கடை!
நீ விருப்ப பட்டால் உன் சைக்கிளை
கை பிடிக்காமல் ஓடிக்காட்டுவேன்
நீ விருப்ப பட்டாலும்உன்னை விட்டு
ஓட மாட்டேன்
*
அடிக்கடி நீ என் சைக்கிள் கடைக்கு
வரவேன்டும் என்பதற்க்காகவே உன்
சைக்கிளுக்கு சில நட்டுகளை மட்டும்
பூட்டி விடுகிறேன்
*
உழக்கினா ஓடும் சைக்கிள் உன்னை
நினைத்தால் ஓடும் கண்ணீர்
*
உன் சைக்கிளின் காயத்துக்கு
மருந்து கட்ட தெரிந்த நான்
கொஞ்சம் படித்திருந்தால்
உன் காலின் காயத்துக்கும்
மருந்து கட்டி இருப்பேன்
*
என்னிடம் இருக்கும் எந்த
சாவியும் பொருந்தவே இல்லை
உன் மனதின் நட்டை இழக்க
*
நீ கோபபட்டு என் சைக்கிள்
கடைக்கு வர மறுத்தால் உன்
கோபத்தை முட்களாக்கி உன்
பாதையெங்கும் விதைப்பேன்
*
உன்னை சந்திக்க வைச்சதும் சைக்கிள்
உன்னை பற்றி பாட வைத்ததும் சைக்கிள்
நீ பிரிந்து போக காரணமாய் இருந்தது
மட்டும் நான் ஒரு சைக்கிள் கடைக்காரன்
என்பதுதான்.
-யாழ்_அகத்தியன்
கை பிடிக்காமல் ஓடிக்காட்டுவேன்
நீ விருப்ப பட்டாலும்உன்னை விட்டு
ஓட மாட்டேன்
*
அடிக்கடி நீ என் சைக்கிள் கடைக்கு
வரவேன்டும் என்பதற்க்காகவே உன்
சைக்கிளுக்கு சில நட்டுகளை மட்டும்
பூட்டி விடுகிறேன்
*
உழக்கினா ஓடும் சைக்கிள் உன்னை
நினைத்தால் ஓடும் கண்ணீர்
*
உன் சைக்கிளின் காயத்துக்கு
மருந்து கட்ட தெரிந்த நான்
கொஞ்சம் படித்திருந்தால்
உன் காலின் காயத்துக்கும்
மருந்து கட்டி இருப்பேன்
*
என்னிடம் இருக்கும் எந்த
சாவியும் பொருந்தவே இல்லை
உன் மனதின் நட்டை இழக்க
*
நீ கோபபட்டு என் சைக்கிள்
கடைக்கு வர மறுத்தால் உன்
கோபத்தை முட்களாக்கி உன்
பாதையெங்கும் விதைப்பேன்
*
உன்னை சந்திக்க வைச்சதும் சைக்கிள்
உன்னை பற்றி பாட வைத்ததும் சைக்கிள்
நீ பிரிந்து போக காரணமாய் இருந்தது
மட்டும் நான் ஒரு சைக்கிள் கடைக்காரன்
என்பதுதான்.
-யாழ்_அகத்தியன்
என் சாரதி நீ
உன்னோடு பயணித்து என்
தரிப்பிடத்தில் இறங்கிய பின்
உன்னை வழியனுப்பி வைத்த
பயணியல்ல நான்
மாறாக…..
திசைகாட்டி இல்லாத தேசத்தில்
என்னை இறக்கிவிட்டுப் போன
என் சாரதி நீ
-யாழ்_அகத்தியன்
தரிப்பிடத்தில் இறங்கிய பின்
உன்னை வழியனுப்பி வைத்த
பயணியல்ல நான்
மாறாக…..
திசைகாட்டி இல்லாத தேசத்தில்
என்னை இறக்கிவிட்டுப் போன
என் சாரதி நீ
-யாழ்_அகத்தியன்
என் கையில் உன் பேனா
உன்னைத் சந்தித்து சில மாதமே ஆனபோதும்
எப்படியானேன் உன்னவளாய் இன்றுவரை உன்னை
நேரில் சந்தித்ததே இல்லையே எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய் எதற்காய் உன் வசமானேன்
எதுவும் புரியாதவளாய்
*
இதுவரை தூக்கம் வராமல் என் விழிகள் துடித்ததே
இல்லையடா ஏன் தான் இன்று உன் பெயரை கோடி
முறை உச்சரிக்கும் வரை தூங்க விடுவதில்லை உன்
நினைவு
*
உன்னை பொறுக்கி என்று கூட திட்டதுணிந்தவள் நான்
ஏன் தான் உன்னை நீயே திட்டினால் கூட என் மனம்
பொறுப்பதில்லை காதலை மதித்த போதும் நான்
காதலிக்க துணியாத கோழையாய்த்தானிருந்தேன்
எப்படி என்னை வாழ்ந்தால்உன்னோடு என சொல்ல
வைத்தாய் சொல் என்னவனே சொல்
*
என் கிறுக்கல்கள் என்றாலே கை தட்ட பலர்
இருந்த போதும் என் கண்கள் உன் கவிதைக்காகவே
தினம் விடியவைக்கும்
*
என்னவனே நான் கிறுக்கி எறிந்த காகிதத்தில்தானே
இன்னும் கசங்கிக்கிடக்கிறது நான் சொல்லத் துடிக்கும்
என் காதல்
*
என் மேல் எனக்கே இல்லாத அக்கறையை உன்
மேல் கொண்டேன் அதனால்த்தானோ கனவைக்கூட
தினம் விழித்திரிந்து காண்கிறேன்
*
உன் விழிபார்க்கும் தூரத்தில் நானில்லாத
போதும் உன்னைக் காக்க எங்கோ ஓர்
மூலையில் உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்
-யாழ்_அகத்தியன்
எப்படியானேன் உன்னவளாய் இன்றுவரை உன்னை
நேரில் சந்தித்ததே இல்லையே எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய் எதற்காய் உன் வசமானேன்
எதுவும் புரியாதவளாய்
*
இதுவரை தூக்கம் வராமல் என் விழிகள் துடித்ததே
இல்லையடா ஏன் தான் இன்று உன் பெயரை கோடி
முறை உச்சரிக்கும் வரை தூங்க விடுவதில்லை உன்
நினைவு
*
உன்னை பொறுக்கி என்று கூட திட்டதுணிந்தவள் நான்
ஏன் தான் உன்னை நீயே திட்டினால் கூட என் மனம்
பொறுப்பதில்லை காதலை மதித்த போதும் நான்
காதலிக்க துணியாத கோழையாய்த்தானிருந்தேன்
எப்படி என்னை வாழ்ந்தால்உன்னோடு என சொல்ல
வைத்தாய் சொல் என்னவனே சொல்
*
என் கிறுக்கல்கள் என்றாலே கை தட்ட பலர்
இருந்த போதும் என் கண்கள் உன் கவிதைக்காகவே
தினம் விடியவைக்கும்
*
என்னவனே நான் கிறுக்கி எறிந்த காகிதத்தில்தானே
இன்னும் கசங்கிக்கிடக்கிறது நான் சொல்லத் துடிக்கும்
என் காதல்
*
என் மேல் எனக்கே இல்லாத அக்கறையை உன்
மேல் கொண்டேன் அதனால்த்தானோ கனவைக்கூட
தினம் விழித்திரிந்து காண்கிறேன்
*
உன் விழிபார்க்கும் தூரத்தில் நானில்லாத
போதும் உன்னைக் காக்க எங்கோ ஓர்
மூலையில் உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்
-யாழ்_அகத்தியன்
என் கிறுக்கல்கள்!
கவிதை என்று நீ சொல்லும்
வரை என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் விசத்தோடு
காத்துக் கிடக்கிறது தற்கொலைசெய்ய!
-யாழ்_அகத்தியன்
வரை என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் விசத்தோடு
காத்துக் கிடக்கிறது தற்கொலைசெய்ய!
-யாழ்_அகத்தியன்
என் காதல் கவிதைகள்
உன் தோழியின் கல்யாண வீட்டில்
தாலிகட்ட உதவிசெய்த உன்னைப்
பார்த்தபின்தான் எனக்கும் ஆசை
வந்ததுதாலி கட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன் முதல் உன்னை
கனவு காண ஆரம்பித்தேன்
*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான் எனக்கு
உதவி செய்து உறுதிப்படுத்தியது உன்
கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
*
தன் பெயரை பிழையாக எழுதிக்
கொண்டிருந்த சிறுமியிடம் அழகாய் எ
ழுத கற்றுக் கொடுத்தேன் என் காதலியின்
பெயரும் அது என்பதால்
-யாழ்_அகத்தியன்
தாலிகட்ட உதவிசெய்த உன்னைப்
பார்த்தபின்தான் எனக்கும் ஆசை
வந்ததுதாலி கட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன் முதல் உன்னை
கனவு காண ஆரம்பித்தேன்
*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான் எனக்கு
உதவி செய்து உறுதிப்படுத்தியது உன்
கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
*
தன் பெயரை பிழையாக எழுதிக்
கொண்டிருந்த சிறுமியிடம் அழகாய் எ
ழுத கற்றுக் கொடுத்தேன் என் காதலியின்
பெயரும் அது என்பதால்
-யாழ்_அகத்தியன்
என் காதலின்!
என்னோடு நீ எனை
வாசிக்கும்போது என்
காதலின் கேள்விக்குறியை
நீ காண்பதே இல்லையா?
-யாழ்_அகத்தியன்
வாசிக்கும்போது என்
காதலின் கேள்விக்குறியை
நீ காண்பதே இல்லையா?
-யாழ்_அகத்தியன்
என் கடிதம்..!
கவிதை எழுத நேரம்
ஒதுக்கினேன்_உனக்கு
கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே
எனெனில் உன்னைச்சேரும் இந்த
கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.
-யாழ்_அகத்தியன்
ஒதுக்கினேன்_உனக்கு
கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே
எனெனில் உன்னைச்சேரும் இந்த
கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
என் உயிரானவளே
என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய்
இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த
மறுக்கிறது என் காதலின் நினைவு
*
உன்னோடு வாழ்ந்த காலத்தை விட
உன் நினைவுகளோடு வாழும்காலம்தான்
அதிகம் என்றபோதும் என்னைக் கவலைப்பட
விட்டதில்லை உன் ஞாபகங்கள்
*
எரிக்க மனமின்றித்தான் எரித்தேன்
உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக
*
என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு
பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன்.
*
உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை
யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்
உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை
யார் யாரிலோ தேடிப் பார்க்கிறேன்
*
தயவு செய்து என் பெயரை உன்
பிள்ளைக்கு வைத்து விடாதே
நீ உயிரோடு இருக்கும் போதே
அனாதையாகிவிடும்
*
என் ஆயுளின் அந்தியிலாவது உன்னைச்
சந்திக்க நேர்ந்தால் உன்னிடம் சொல்லச்
சுமக்க வார்த்தை இதுதான்
உன்னை நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே
-யாழ்_அகத்தியன்
இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த
மறுக்கிறது என் காதலின் நினைவு
*
உன்னோடு வாழ்ந்த காலத்தை விட
உன் நினைவுகளோடு வாழும்காலம்தான்
அதிகம் என்றபோதும் என்னைக் கவலைப்பட
விட்டதில்லை உன் ஞாபகங்கள்
*
எரிக்க மனமின்றித்தான் எரித்தேன்
உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக
*
என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு
பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன்.
*
உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை
யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்
உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை
யார் யாரிலோ தேடிப் பார்க்கிறேன்
*
தயவு செய்து என் பெயரை உன்
பிள்ளைக்கு வைத்து விடாதே
நீ உயிரோடு இருக்கும் போதே
அனாதையாகிவிடும்
*
என் ஆயுளின் அந்தியிலாவது உன்னைச்
சந்திக்க நேர்ந்தால் உன்னிடம் சொல்லச்
சுமக்க வார்த்தை இதுதான்
உன்னை நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே
-யாழ்_அகத்தியன்
எனக்குள் நீ!
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம்
நமக்குள் சமாதான ஒப்பந்தம்செய்து கொள்வோம்
அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா
என்று பாப்பம்
*
நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே
*
என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது
*
மழை விட்டது உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ
*
கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ
-யாழ்_அகத்தியன்
நமக்குள் சமாதான ஒப்பந்தம்செய்து கொள்வோம்
அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா
என்று பாப்பம்
*
நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே
*
என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது
*
மழை விட்டது உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ
*
கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ
-யாழ்_அகத்தியன்
எனக்குப் புரியவில்லை!
நீ எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..
உன் மௌனம் சொல்லும்
கவிதைகளே எனக்குப் பிடிக்கிறது.
ஏன் தெரியுமா…?
உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.
-யாழ்_அகத்தியன்
கவிதைகளை விட…..
உன் மௌனம் சொல்லும்
கவிதைகளே எனக்குப் பிடிக்கிறது.
ஏன் தெரியுமா…?
உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.
-யாழ்_அகத்தியன்
எட்டாத நிலவு!
அந்த நிலவு
கனவு கண்டால்
உன்னைத்தான் காணும்
ஏன் தெரியுமா…?
அந்த நிலவுக்கும்
எனக்கும் எட்டாத
நிலவு நீதானே.
-யாழ்_அகத்தியன்
கனவு கண்டால்
உன்னைத்தான் காணும்
ஏன் தெரியுமா…?
அந்த நிலவுக்கும்
எனக்கும் எட்டாத
நிலவு நீதானே.
-யாழ்_அகத்தியன்
உலகம்!
உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றி
வருகிறது
உலகம் சுற்றி வரச்சொன்னா
நான் உன்னை சுற்றி வருகிறேன்
-யாழ்_அகத்தியன்
என் கவிதைகள் உலகம் சுற்றி
வருகிறது
உலகம் சுற்றி வரச்சொன்னா
நான் உன்னை சுற்றி வருகிறேன்
-யாழ்_அகத்தியன்
உன் வரவின்றி!
உன்னைக் காணகாத்திருந்து
என் கைக் கடிகாரத்தை பார்த்து
களைத்துப் போய் தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…
-யாழ்_அகத்தியன்
என் கைக் கடிகாரத்தை பார்த்து
களைத்துப் போய் தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…
-யாழ்_அகத்தியன்
உன் மனம்!
என்னைக் கல்லில்கட்டி
கடலில் யார் போட்டாலும்
கல்லே எனைக் காப்பாற்றும்
உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்
-யாழ்_அகத்தியன்
கடலில் யார் போட்டாலும்
கல்லே எனைக் காப்பாற்றும்
உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்
-யாழ்_அகத்தியன்
உன் மடி வேண்டும்!
உன் மேலான என் காதல்
தோற்று போனாலும் உன்
மடியில் தூங்க வருவேன்
ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும்
-யாழ்_அகத்தியன்
தோற்று போனாலும் உன்
மடியில் தூங்க வருவேன்
ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும்
-யாழ்_அகத்தியன்
உன் பார்வையில்!
உனக்காய் எழுதப்பட்ட
கவிதைகள் ஏராளம்
எனினும்..
என்னை கவிஞனாக்கிய
உன் கடைசி கடிதம் மட்டும்
இருண்டுபோன என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!
-யாழ்_அகத்தியன்
கவிதைகள் ஏராளம்
எனினும்..
என்னை கவிஞனாக்கிய
உன் கடைசி கடிதம் மட்டும்
இருண்டுபோன என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!
-யாழ்_அகத்தியன்
உனக்கே நான்
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான்
திரிந்தேன் யார் யாரோ முகத்தில்_ அது
உன் இதயத்தில் மறைந்திருந்ததை நீ
காட்டிக் கொடுக்கும் வரை
*
உன்னைத் தேடித்தான் உலகம் சுற்றப்
புறப்பட்டேன் என்ன அதிசயம் என் வீட்டு
வாசலிலே உன்னை இறக்கி விட்டுப் போனது
நீ சுற்றி வந்த தெய்வம்
*
உன்னை வைத்துக் கொண்டு உலகம்
சுற்றிய களைப்பில்த்தான் புரிந்து கொண்டேன்
உன்னை விட யாரும் எனக்கு பொருத்தமில்லை
என்பதை
*
என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க
யார் யாரோமுயற்சித்தார்கள் இறுதியில்
நீதான் சிறைப்பிடித்தாய் கைதியாயல்ல
உன் காதலனாய் உன் கணவனாய்
ஆதலால் உனக்கே உரியவன் நான்.
-யாழ்_அகத்தியன்
திரிந்தேன் யார் யாரோ முகத்தில்_ அது
உன் இதயத்தில் மறைந்திருந்ததை நீ
காட்டிக் கொடுக்கும் வரை
*
உன்னைத் தேடித்தான் உலகம் சுற்றப்
புறப்பட்டேன் என்ன அதிசயம் என் வீட்டு
வாசலிலே உன்னை இறக்கி விட்டுப் போனது
நீ சுற்றி வந்த தெய்வம்
*
உன்னை வைத்துக் கொண்டு உலகம்
சுற்றிய களைப்பில்த்தான் புரிந்து கொண்டேன்
உன்னை விட யாரும் எனக்கு பொருத்தமில்லை
என்பதை
*
என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க
யார் யாரோமுயற்சித்தார்கள் இறுதியில்
நீதான் சிறைப்பிடித்தாய் கைதியாயல்ல
உன் காதலனாய் உன் கணவனாய்
ஆதலால் உனக்கே உரியவன் நான்.
-யாழ்_அகத்தியன்
Subscribe to:
Comments (Atom)
