| அன்பே: ஏன் பிரிந்தாய்? நம் பிரிவை உயிர் மட்டும்தான் பிரிக்கும் என்றுதானே நானிருந்தேன். எப்படி பிரிந்தாய்? நீ இல்லாமல் வாழத்தெரியாத நான் நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன். சொல் கண்ணே சொல் நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய் வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில் நான் கல்லறையாய் வாழலாம். எங்கே நீ சொல் அன்பே சொல்.. உனக்கான என் காதல் மரத்தில் இருந்து தினமொரு கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது என் கண்ணீர் எனும் மழையாலும் உன் நினைவெனும் புயலாலும். வா அன்பே வா... நீ என்னை வாழ வைக்க வேண்டாம் வாழ விடாமல் வைத்துவிடு அது போதும் உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்தேன் என்பதே என் வாக்குமுலமாய் இருகட்டும். வா அன்பே வா -யாழ்_அகத்தியன் |
Sunday, September 16, 2007
கடைசி ஆசை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment