Sunday, December 9, 2007

காதல் செய்....!



காதலை

கண்களில் வைத்து

உறங்கி விடாதீர்கள்


இதயத்தில் வைத்து

எப்போதும் இயங்க

வையுங்கள்


*


மலிவான பொருள் கூட

விலைமதிப்பற்ற பொருளாவது

காதலர்கள் பரிமாறும் பரிசுப்

பொருள்களில் மட்டும்தான்


*


உன்னைப் பார்த்து

காதல் வரக் கூடாது

உன் காதலைக் கேட்டு

காதல் வர வேண்டும்


*


குழந்தைகளுக்கு

புன்னகை

அழகென்றால்


காதலர்களுக்கு

குழந்தைத்தனமே

அழகு


*

ஒரு பூவால்

இருவரை மலரவைக்க

முடியும் என்றால்


காதலர்கள் கரம் சேரும்

பூக்களால் மட்டும்தான்


*


காதலை பொழிந்து

கொண்டேயிருங்கள்


காதலித்தவள்(ர்) உங்களை

காயவைத்துக் கொண்டே

இருந்தாலும்


*


எந்த இழப்பும்

சந்தோசத்தை

கொடுப்பதில்லை


காதலிப்பவர்களிடம்

உங்களை நீங்கள் இழந்து

கொண்டிருப்பதைப் போல்


*


காதல் ஒரு அழகான மதம்

அதில் மூட நம்பிக்கையே

வேதம்


*


மொழிகளை

அழகாக்கிக்

கொண்டிருப்பவை


காதல் கவிதைகள்

மட்டும்தான்


*

எதுவெல்லாம் உன்

உரிமைகள் என்பதை

தெரிந்து

கொள்வதற்காகவாவது

காதல் செய்.



-யாழ்_அகத்தியன்

No comments: