தினமும் நான் பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்த்து நீ வெளியிடுகிறாய்
உன் மெளனக் கவிதையை
ஆரம்பத்தில் உன் மெளனத்துக்காகவே
இடைவேளையின்றி பேசிக் கொண்டிருப்பேன்
நீயும் பேசமால் கேட்டுக்கொண்டே இருப்பாய்
இப்பொழுதெல்லாம் உனக்காக பேசிப் பேசியே
உன்னை மாதிரியே நானும் மெளனியாகிவிட்டேன்
எப்பொழுதெல்லாம் மெளனமாக இருக்கிறேனோ
அப்பொழுதெல்லாம் உன் நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
எப்பொழுதெல்லாம் பேசுகிறேனோ
அப்பொழுதெல்லாம் உன்னை பற்றியே
பேசுகிறேன் உன்னோடு மட்டும்
மெளனமே சிறந்த மொழி
மெளனமே பேசவைக்கும் மொழி
மெளனமே பிடிக்கவைக்கும் மொழி
மெளனமே சிறந்தவிரதம்
என்பதை புரியவைத்து
என்னையும் உன்னைப் போல்
மெளனியாக்கிவிட்டாய்
உண்மைதான்
மெளனமே அழகான மொழி
நான் பேசாத பொழுதுகளில்
ஆனாலும்
என்னைத் தினம் கொல்லுவது
உன் மெளனமொழிதான் என்பது
உனக்குத் தெரியுமா...?
அன்பே அறிந்துகொள்
உன் மெளனத்தால் பாதிக்கப்படுவது
மற்றவர்கள்தான் என்பதை
-யாழ்_அகத்தியன்
Friday, October 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment