Saturday, December 29, 2007

உண்மையானவளே..!

கோவமான
உன் முகத்தை
பார்பதற்காகவே

என் ஆசைகள்
உனக்கு பிடிக்காத
செயல்களை தெரிந்து
வைத்திருக்கிறது

*
வாய்காரன் நான்
என்பதை தெரிந்தா

என்னில் உனக்கு
அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்

அன்றில் இருந்து நான்
யாரிடமும் வாய்
காட்டுவதே இல்லை

*
உன்னை சந்திக்க
கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்

கவனமாய் உன்னை
தேடிக் கொண்டிருக்கும்
என் மனசு

*
எல்லா
எழுத்துக்களையும்
வைத்து
கவிதை எழுதினாலும்

இன்னும் என்னால்
உனக்கு
பெயர்வைத்ததால்
கவிஞனான உன்
தந்தைபோல்

இரண்டு எழுத்தில்
அழகான கவிதை
எழுத முடியவில்லை

*
நாடு கிடைக்க
போராடுபவன்
போராளி என்றால்

நீ கிடைக்க
போரடும் நான்
காதலாளிதான்

*

என்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ


-யாழ்_அகத்தியன்

Friday, December 21, 2007

நீயே நிலா.. நிலாவே நீ!

வானத்தில் நீந்திக்
கொண்டிருக்கிறது நிலா
நடுங்கியபடியே
ரசித்துக் கொண்டிருக்கிறாய் நீ

*
நீ இல்லாத
பகல்கூட நிலவில்லாத
இரவுதான் எனக்கு

*
நிலாவை ரசிக்க வாசல் வந்தேன்
எனக்கு முன்னே வளர்பிறையாய் நீ
தேயத் தொடங்கினேன் நான்
எதை ரசிப்பது என்ற குளப்பத்தில்

*
நீ நிலாவை ரசிக்காமல்
தூங்கமாட்டாய்
என்பதில் பெருமை நிலாவுக்கு

நீ ரசித்த நிலாவை
வழியனுப்பும்வரை நான்
தூங்குவதில்லை என்பதில்
பெருமை எனக்கு

*
உனக்கு முன்னே
சிலர் குறுக்கே
போய்க்கொண்டிருந்தார்கள்

என்ன செய்வது நிலாவை
மறைக்கும் சொற்ப நேரத்தில்
சுகம் காணும் முகில்கள் அவர்கள்

*

இமைக்காது நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாய்
முகில்களிடம் கைகள் வாங்கி
முகம் மறைத்து வெக்கப்படுகிறது நிலா

*
நடக்கும் தூரத்தில்
நிலா இல்லை எனக்கு

ஆனாலும்
உன் கால்தடத்தில்
தேய்பிறையாய் நிலாவை
காண்கிறேன் நான்

*
அமாவாசை இரவிலும்
பெளர்ணமி நிலவாய்
என்றும் நீ எனக்கு

-யாழ்_அகத்தியன்

Thursday, December 20, 2007

புதுமையானவளே..!

தாயைத் தவறவிட்ட
குழந்தையின் கண்ணீரை
துடைத்துவிட்ட உன்
கைவிரலில் தவறவிட்டேன்
என்னை நான் உன்னிடம்

*
நீ நீயாக இருக்கும்
உன் பிடிவாதக்காகவே
நான் நானாக இல்லாமல்
நீயாக மாறலாம்

*
உன் இமைகள்
சேரும் அழகிலே
இரவாகலாம் நான்
விடியாமல் போனாலும்
பரவாயில்லை

*
உன்னை மறந்து
என்னால்
உறங்க முடியவில்லை

உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு

கனவில் நன்றி
சொல்வேன்

*
நீ என் கவிதைகளுக்கு
வாசகியாக இருந்ததற்கு
பதிலாய்

நீயும் கவிதை
எழுதியிருக்கலாம்

நீயாக மாறியதில்
இருந்து வாசிப்பதை
மட்டுமே
விரும்புகிறேன் நான்


-யாழ்_அகத்தியன்

Wednesday, December 19, 2007

உன் வாசகன் நான்!!!

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்

கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்


-யாழ்_அகத்தியன்

Saturday, December 15, 2007

சோலையானவளே...!

கூட வந்துவிட்டு
விடைபெறுகிறாய்
வலிக்கத் தொடங்குகிறது
என் கால்களும் மனசும்

*
இதழ் பிரியாமல்
புன்னகை செய்துவிட்டு
கடந்து செல்கிறாய்

மலரத்
தொடங்குகிறேன் நான்

*
தனிமையில் என்னை நானே
சுமந்து கொண்டிக்கிறேன்
பிணமாக நான்

*
உனக்கு பிடித்த
எழுத்தாளன் நான்

என்னையும்
பேனாவையும்
எழுத வைத்தே சாகடித்துக்
கொண்டிருக்கிறாய் நீ

*
உன்னால் வாசிக்கப்
படுகின்றன என் கவிதைகள்
கலைய தொடங்குகின்றன
என் சோகங்கள்


-யாழ்_அகத்தியன்

Monday, December 10, 2007

யாரும் எனக்கில்லை...!

உன்னோடு பேசி
சிரித்த நாட்கள்

உன் கைபிடித்து
திரிந்த நாட்கள்

ஏன்
உன் மடியில் எனை
மறந்து தூங்கிய
நேரங்கள்

இப்படியான என்
சந்தோசங்களை
எல்லாம்

காரமான சில வினாடி
பேச்சால் கரைத்துவிட்டாயே

பாவம் நான்
யாருமே எனக்கில்லை என்ற
உண்மையை எத்தனை பேரிடம்தான்
ஏமாந்து தெரிந்து கொள்வேன்.



-யாழ்_அகத்தியன்

நீ வாழ நான் பாடுவேன்...!

நீ ஒட்டிவிட்டு
எறிந்த பொட்டு நான்

யார் யாரோ
கால்களால்
மிதிக்கப் படுகிறேன்

*

என்னை நீ ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்

எனை வீரனாய்
நினைக்காமல்

நீவிளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று

*

ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது

கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்

உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது

*

அன்று
உனக்கும் சேர்த்து சுவாசித்தேன்
இன்று
உன்னவருக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன்

*

நீ வாழ்ந்தவீடு _ நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு சென்றுவிட்டாய்

இனி நீ திரும்பிவர
நினைத்தால் தயவு செய்து
தனியாக வந்துவிடாதே

நீ இல்லாமல் சாய்ந்து கிடக்கும் நான்
உடைந்து விழுந்துவிடுவேன்


-யாழ் அகத்தியன்

Sunday, December 9, 2007

காதல் செய்....!



காதலை

கண்களில் வைத்து

உறங்கி விடாதீர்கள்


இதயத்தில் வைத்து

எப்போதும் இயங்க

வையுங்கள்


*


மலிவான பொருள் கூட

விலைமதிப்பற்ற பொருளாவது

காதலர்கள் பரிமாறும் பரிசுப்

பொருள்களில் மட்டும்தான்


*


உன்னைப் பார்த்து

காதல் வரக் கூடாது

உன் காதலைக் கேட்டு

காதல் வர வேண்டும்


*


குழந்தைகளுக்கு

புன்னகை

அழகென்றால்


காதலர்களுக்கு

குழந்தைத்தனமே

அழகு


*

ஒரு பூவால்

இருவரை மலரவைக்க

முடியும் என்றால்


காதலர்கள் கரம் சேரும்

பூக்களால் மட்டும்தான்


*


காதலை பொழிந்து

கொண்டேயிருங்கள்


காதலித்தவள்(ர்) உங்களை

காயவைத்துக் கொண்டே

இருந்தாலும்


*


எந்த இழப்பும்

சந்தோசத்தை

கொடுப்பதில்லை


காதலிப்பவர்களிடம்

உங்களை நீங்கள் இழந்து

கொண்டிருப்பதைப் போல்


*


காதல் ஒரு அழகான மதம்

அதில் மூட நம்பிக்கையே

வேதம்


*


மொழிகளை

அழகாக்கிக்

கொண்டிருப்பவை


காதல் கவிதைகள்

மட்டும்தான்


*

எதுவெல்லாம் உன்

உரிமைகள் என்பதை

தெரிந்து

கொள்வதற்காகவாவது

காதல் செய்.



-யாழ்_அகத்தியன்

Saturday, December 8, 2007

எனக்கானவளே...!

எல்லாருக்கும்
பிடிச்ச
கவிஞனாக நான்

எனக்குப்
பிடிச்ச
கவிதையாக நீ

*

எனை வாசிக்கத்
தொடங்குகிறாய்

என் பிழைகளை
நீக்கத் தொடங்குகிறது
காதல்

*

நிலாவாகிறாய் நீ
வானமாகிறது காதல்

வானமாகிறாய் நீ
தேய்பிறையாகிறேன் நான்

*

நிலாவாய் வந்து
மறைகிறாய்

எனை காயவைக்க
உதிக்கிறது சூரியன்

*

தேயத் தேயஎ
ன்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் கவி நிலா நீ


-யாழ்_அகத்தியன்

Friday, December 7, 2007

எனதானவளே...!

உன்னை நான்
ஆசைப்படுவதை
யாரிடமும்
சொல்லிவிடாதே

நான் கதைக்காமல்
விட்டவர்கள் எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்

*

உன் மேலான என்
ஆசையெல்லாம்
ஒன்று சேர்ந்து

என் ஆசையில் ஒன்றான
என் கோவத்தை உன்னிடம்
காட்டவேண்டும் என்பதை
நிராசையாக்கிவிட்டது

*

விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்

*

உன் வீட்டில் நீ
வாயாடியாம்

பொய்சொல்கிறார்கள்

இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே

*

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது

உன் மேல் கோவிக்கும்
போதுதான் என் ஆசைகள்
எல்லாம் எழுந்து நிற்கின்றன


-யாழ்_அகத்தியன்

Thursday, December 6, 2007

உலகமானவளே...!

உன்னை நாளையும் சந்திக்கலாம்
என்ற சந்தோசத்தைவிட இன்றும்
உன்னைப் பிரிவதே கொடிது

*

நம் முதல் சந்திப்பை
பற்றி யாரிடமாவது பேச
நினைக்கும் போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது நம்
முதல் பிரிவு

*

ராஜ்மஹாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்

யாருமே காத்திராத
உன் வீடுதான்

என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது

*

எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்

நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?

*

உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்

அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா

என் கண்கள் சும்மாவிடுமா..?


-யாழ்_அகத்தியன்

Wednesday, December 5, 2007

காதலானவனே..!

நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக

யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே

*

நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக

நீ கொடுத்த
பூச்செடிதான்
என்னை மலரவைத்துக்
கொண்டிருக்கிறது

*

எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்

தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்

அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்

என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்

*

எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்

உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது

முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்

*

நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்

உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்

என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்



-யாழ்_அகத்தியன்

Tuesday, December 4, 2007

என் பாடல்……[07]

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா

எந்தன் உலகமே உனக்காக மாறிப்போனதே
உன்னைச் சுற்றியே எந்தன் நினைவு வாழுதே
என் இதயமோ எப்போதுமே உன் பெயர் சொல்லி
துடிக்கிதே இது என்னடி புது வாழ்க்கை வாழ்கிறேன்

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா

உண்மை சொன்னால் என்ன கண்ணே
என்னையும் சிலர் வாசித்து போனதுண்டடி அடி
அடி யாருமே யாருமே எனை வாங்கி போனதில்லடி
எந்தன் சொந்தமே நீதானே உனக்கான கவி நானே
எனக்கான வாசகி நீயே படைத்திடவா நான்
படித்திட வா நீ

எங்கே எங்கே என் வெண்ணிலா தேடித்
தேடியே தேய்கிறேன் நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை நீதானே என் நிலா


-யாழ்_அகத்தியன்

Monday, December 3, 2007

உனக்காகவே நான்...!

இரவு வந்தும்
விடியப் போகிறது
இன்னும்
தூங்கவில்லை நான்

உணவுகள் படைக்கப்
பட்டிருக்கிறது
இருந்தும்
பசிப்பதற்காய் விரதம்
இருக்கிறேன் நான்

குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள் கடந்தபோதும்
மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே நான்

என்ன செய்தாய் எனை
உன்னை காதலித்ததை
மட்டும்தான் நான் செய்தேன்

யாருக்கும் செவி சாய்க்காது
எப்படியோ இருந்த என்னை

இருந்தால் இப்படித்தான்
இருக்க வேண்டும்
என என்னை செதுக்கிக்
கொண்டிருக்கிறாயே

அன்பே
இப்போதாவது நீ
கிடைத்திருக்கிறாய்
என ஒரு பக்கத்தில்
நான் சந்தோசப்பட்டாலும்

மறுபக்கத்தில் உன் காதல்
இதுவரை நீ எங்கிருந்தாய்
என என்னைக் கவலைப்பட
வைத்துக் கொண்டுதான்
இருக்கிறது


-யாழ்_அகத்தியன்