Saturday, November 10, 2007

இரக்கமானவளே..!

உனக்கென்ன நீ தூங்கிவிட்டாய்
நான்தான் நீ தூங்கும் அழகை
கற்பனை பண்ணிப்பார்த்தே

என் இரவை நீளமாக்கிக்
கொண்டிருக்கிறேன்

*அப்படி என்னத்த உன்னில்
கண்டதோ என் இதயம்
உனக்கு பதிலாய் எதைக்
கொடுத்தாலும் என் மேல்
தூக்கி எறிகிறது

*
கவிதைகளை
நான் பெற்றதில்
பதிலுக்கு கவிதைகள்
செய்த நன்றிக்கடன்

உன்னை எனக்கு
தேடித்தந்ததுதான்

*

தூங்குவதற்கு இமை
மூட வேண்டும் என்பதையே
மறக்கடிக்கிறது உந்தன் நினைவு

*
என் வேதனை எல்லாமே
உன்னைக் காதலிக்க எனக்கு
ஒரு இதயம் போதாது
என்பதுதான்

-யாழ்_அகத்தியன்

No comments: