Friday, May 18, 2007

கவியானவளே...[07]

கோயில் வாசலில் காத்திருக்கும்
பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில் உன்
புன்னகைக்காய்

*
தயவு செய்து இனி நீ குளிக்கும்போது
பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து
விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும்
போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி
விடுகிறது

*
நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை
கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை
நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த
வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான்
அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன்

*
நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும்
சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத
நாட்களில் மட்டும்தான் பெண்கள்
கல்லூரியாய் மாறுகிறது

*
களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி
விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன்நான்

-யாழ்_அகத்தியன்

1 comment:

Anonymous said...

அழகான கவிதை..
மெய் சிலிர்க்க வைக்கிறது..

நேசமுடன்..
-நித்தியா