Thursday, May 10, 2007

கவியானவளே… [01]

என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்

*
கிடைத்தது எல்லாம் பெரிதாகவே

தெரிந்தது நீ கிடைக்காமல் போகும்
வரை

*
உன் நினைவுகளுக்கு ஆடை மாற்ற
வேண்டும் கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா

*
நீ வேண்டும் என்பது என் பழைய கவிதை

நீ மட்டும் வேண்டும் என்பது என் புதுக் கவிதை

*
நீ வாங்கிக் கொடுத்த செருப்பு

உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்

-யாழ்_அகத்தியன்

No comments: