Monday, May 7, 2007

இலவசம்!

உன்னிடம் நான் இலவசமாய்க் கூட எதிர் பாக்காத பரிசு
நான் வேணாமென்று சொல்லியும் நீ தந்து விட்டு போன பரிசு
ஆமாம்.. என் மரணம் வரை மறக்கமுடியாத உன் பிரிவென்ற பரிசு

*
இலவசமாய் எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காய்

பெறுமதி வாய்ந்த ஆண்கள் அழுவது பிடிக்காதென்றாய்
ஓ.. அப்படியென்றால் பெறுமதி வாய்ந்த நீ கிடைக்கவில்லை

என்று நானழுவது தவறா?

*
சொல் உன்னை நினைத்துக் கொண்டே நான்
இறக்க வேண்டுமென்றா? பெறுமதி வாய்ந்த
என் மறதியை கடனாய் வாங்குவதாய்
களவாடி போனாய்?

*
சொல் நீ என் பெறுமதி வாய்ந்தவள் என்பதால்
உன்னை வாழ வாழ்த்தவா? இல்ல பிரிவில் மட்டும்
நீ தனியாய் போனதை எண்ணி திட்டவா?

*
இலவசமாய்க் கூட யார் பார்வையும் படாதவனாய்
படு மோசமான பாலைவனமாய்க் கிடந்தேன்
எதற்கடி விழுந்தாய் என் மேல் முதல் மழையாய்?

*
குடிசை வாங்க கூட பெறுமதி இல்லாதவனை
எதற்கடிகோட்டைகளை வாங்கு மளவுக்கு
நம்பிக்கைகளை ஊட்டினாய்?

*
அன்று உன் முதல் பார்வையிலே நான்
உருகியபோது நான் பலவினமானவனென்று
எண்ணவில்லை உன் பார்வையின் பலத்தைதான்
பாராட்ட நினைத்தேன்

ஆனால் இன்று

என் நினைவே பார்வையாக பார்வையே
நினைவாக இலவசமாய்க் கழிக்கிறேன்

*
கையெழுத்து மட்டும் போட பேனா பிடித்த
கிராமத்தவனை கவி எழுத வைத்தவளே..
உன்னால்எப்படி முடிந்தது?

இலவசமான என்னை பெறுமதி
வாய்ந்ததாய் ஆக்கவும்
பெறுமதி வாய்ந்த உன்னை

பெற்றோர்களுக்காய் இலவசமாக்கவும்

*
என் கண்ணிரை துடைத்துவிடத்தான்
உன் கரங்களுக்கு எட்டாது என் கவிதையின்
கண்ணிரை துடைப்பதற்காகவேனும்

ஆழமான சமுத்திரத்தையே
அடக்கி வைத்திருக்கும் உன்
கண்களால் இலவசமாய்
பார்த்துவிட்டுப் போ

பெறுமதி வாய்ந்த உன் கண்ணீரைத்தான்
தேடிதிரிகிறது என் கவிதைகள் நாளைய
என் மரணத்துக்காய் அழுவதற்கு!.

-யாழ்_அகத்தியன்

No comments: