Wednesday, May 16, 2007

நீயும் நானும்….!

உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது

*
உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்

என்ன செய்ய இதுவரை என்னை எடுக்க
விட்டதில்லை உன் வெக்கம்

*
நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்

கற்றுக் கொண்டிருக்க மாட்டாய் ஏனெனில்
என்னிடம் மட்டும்தானே நீ வெக்கப் படுகிறாய்

*
நான் என்னைப் பற்றி சொன்னால் ரசிக்கிறாய்

உன்னைப் பற்றி சொன்னால் வெக்கப் படுகிறாய்
ஆகா உன் வெக்கத்துக்கும் பழக்கி விட்டாயா
உன் சுயநலத்தை

*
நான் மயிலே மயிலே என்று அன்பாய்

கூப்பிட்டாலும் மயில் இறகு போட்டதில்லை
ஆனால் நான் ஆசையாய் உன் பெயரை கூப்பிட்டால்
போதும் அடடா நீ அழகாய் வெக்கப்படுவாய்
*
என்னைக் கண்டதும் வெக்கப் படுகிறாய்

நீ வெக்கப் பட்டதும் நான் காணாமல்
போகிறேன்

*
என் காதுகள் பொய் சொல்லலாம்

என் கண்கள் பொய் சொல்லாது
ஆமாம் உன் வெக்கம் பேசியதில்லையே

*
உன் வெக்கத்தை பற்றி கவி எழுதித்தர

ஆசைதான் ஆனால் அந்தளவுக்கு நான்
படித்தவன் அல்ல வேணும் என்றால் சொல்
நீ வெக்கப் படாத நேரங்களை கவிதையாய்
எழுதித்தருகிறேன்

-யாழ்_அகத்தியன

No comments: