Monday, May 7, 2007

இனியவளே…! [11]

என்னை வெப்கொம்மில்
விடாமல் பார்க்கிறாயே
ஏன் வீட்டில் யாருமே
இல்லையா?

*

ஹையோ ! செல்லம் நீ
திமிரா பேசும் போதே
நினைத்தேன் இவ்வளவு
அழகாய் இருப்பாய் என்று
அடிக் கள்ளி

*

கண்டதும் காதலில் எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது
சாட்டில் உன்னை சந்தித்ததால்

*

உலகமே என்னை ஒதுக்கி
வைத்தாலும்ஆன்லைனில் நீ
நின்றால் போதும் உலகத்தையே
ஒதுக்கி வைப்பேன்உனக்கு முன்னாலே

*

நாம் சாட்டில் பேசும்போது
நமக்கே தெரியாமல் பல
கவிதைகள் இறந்து போகிறது
இனியாவது நாம் பேசுவதை
பதிந்துவை நீ கிழவி ஆகும் போது
படித்துக்காட்ட வேண்டும்

*

என் கணனி என்னவோ நான்
தன்னை பார்பதாய் நினைத்து
ரொம்ப வெக்கப்படுகிறது நீ
ஆன்லைனில் வந்துவிட்டாயா
என அடிக்கடி நான் பார்க்கும் போது

*

என் மெசெஞ்சரை கேட்டுப் பார்
என் காதலை உன்னிடம் சொல்லவந்து
எத்தனை தடவை உனக்கு அனுப்பாமல்
அழித்த கவிதையை

*

என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில் எல்லாம்
தெரியும் என்று அவாக்கு எப்படி தெரியும்
எனக்கு உன்கூட சாட் பண்ண மட்டும்தான்
தெரியும் என்று

-யாழ்_அகத்தியன்

No comments: