ஒரு நாள் உன்னை விட்டு
பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய
முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே
உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக்
கவிதை எழுதிக்கொண்டிருப்பேன்
**************************
நீயே சொல் ..என் நம்பிக்கை
நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல்
நீ தள்ளியே நின்றால்....
விழுந்திடமாட்டெனோ
*************************
உன் முதல் சந்திப்பும் உன்
முதல் பிரிவும் சில நாட்களுக்குள்
நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு
மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது
************************
உனக்கும் இரவில் உலாப் போகபிடிக்குமா
சரி வா போய் வருவோம் அதற்கு முன்
நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்
ஓய்வெடுத்து வரும்படி
**************************
உன்னை நான் பார்க்க வரும் போது
மட்டும்தான் ஏறும் பேருந்தையும்
இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில்
இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்
அவ்வளவு அவசரம் எனக்கு
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment