நீ விருப்ப பட்டால் உன் சைக்கிளை
கை பிடிக்காமல் ஓடிக்காட்டுவேன்
நீ விருப்ப பட்டாலும்உன்னை விட்டு
ஓட மாட்டேன்
*
அடிக்கடி நீ என் சைக்கிள் கடைக்கு
வரவேன்டும் என்பதற்க்காகவே உன்
சைக்கிளுக்கு சில நட்டுகளை மட்டும்
பூட்டி விடுகிறேன்
*
உழக்கினா ஓடும் சைக்கிள் உன்னை
நினைத்தால் ஓடும் கண்ணீர்
*
உன் சைக்கிளின் காயத்துக்கு
மருந்து கட்ட தெரிந்த நான்
கொஞ்சம் படித்திருந்தால்
உன் காலின் காயத்துக்கும்
மருந்து கட்டி இருப்பேன்
*
என்னிடம் இருக்கும் எந்த
சாவியும் பொருந்தவே இல்லை
உன் மனதின் நட்டை இழக்க
*
நீ கோபபட்டு என் சைக்கிள்
கடைக்கு வர மறுத்தால் உன்
கோபத்தை முட்களாக்கி உன்
பாதையெங்கும் விதைப்பேன்
*
உன்னை சந்திக்க வைச்சதும் சைக்கிள்
உன்னை பற்றி பாட வைத்ததும் சைக்கிள்
நீ பிரிந்து போக காரணமாய் இருந்தது
மட்டும் நான் ஒரு சைக்கிள் கடைக்காரன்
என்பதுதான்.
-யாழ்_அகத்தியன்
Tuesday, May 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment