என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை
*
கண்மூடி கிறுக்கிவிட்டு கண்
திறந்து தேடுகிறேன் ஏதாவது
கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று
*
தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது
என் பேனாதான் உன் பேனாவுக்கு
நன்றி சொல்ல
*
என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்
நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி
பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு
*
உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா
யாருக்காக தலை குனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று
*
உன் தோழிகள் மட்டும்தான் கண்டு
பிடிக்கிறார்கள் உன் சினுங்களை
மட்டும் கவிதையாய் வடிக்கிறது
என் பேனாவென்று
*
உன் புகைப்படத்தோடு ஒரு நாள்
இருந்த பின்தான் என் பேனா கவி
எழுத மறுக்கிறது
*
உனக்காய் எழுத நினைத்த எந்த
கவிதையையும் எழுதவேயில்லை
என் பேனா அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்
-யாழ்_அகத்தியன்
Wednesday, May 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment