காதலில் வென்ற என் அப்பாவின்
எதிர்ப்பை மீறி சேர்த்து வைத்தார்
காதலில் தோற்றுப் போன என்
சித்தப்பா என்னையும் அவளையும்
*
என் அன்னையை வயோதிபர் இல்லத்துக்கு
அனுப்பி வைத்த என் மனைவி மறந்து விட்டாள்
தன் பிள்ளைக்கு வயோதிபர் இல்ல முகவரியை
காட்டிக் கொடுத்ததை
*
நீங்கள் அழுத்திய இலக்கம் இப்போது
பாவனையில் இல்லை என்று அழகாய்
சொல்கிறாள் யாரோ ஒருத்தி என் மேல்
அவளுக்கு இருக்கும் அக்கறை கூட
இலக்கத்தை மாற்றிய உனக்கில்லையடி
*
தெரிந்தோ தெரியமலோ அதிகமாய்
வெளி நாட்டு ஆண்கள்தான் விதவைக்கு
வாழ்க்கை கொடுக்கிறர்கள்
புரியவில்லையா...
உள் நாட்டுக் காதலனை
சாகடித்து விட்டல்லவா
கழுத்தை நீட்டுகிறாள்
வெளி நாட்டு
மாப்பிள்ளைக்கு
*
கவிஞர்களிடம் காதல் தோல்வியா
என்று கேக்கும் பெண்களிடம் ஒரு
கேள்வி கேக்க வேண்டும்
உங்கள் பெயர்களை வைத்த
தந்தையும் காதலில் தோற்று
போனவரா என்று
-யாழ்_அகத்தியன்
Thursday, May 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment