Monday, May 7, 2007

இனியவளே…! [6]

இனியவளே…

நேற்று வீதியில் தவற விட்ட
தன் ஊன்றுகோளை தேடிய
வயோதிபரிடம் நீ தேடாமல்
எடுத்து கொடுத்த போதுதான்
என் பார்வை உன் மேல் தவற
ஆரம்பித்தது

*************************************
எனக்கு நிலவை அதிகம் பிடிக்கும்

என்பதால்தான் என் இதயத்துக்குள்
உன்னை வரவழைத்தேன்

*************************************
விலக விலகத்தான் காதல்

அதிகரிக்குமாமே எங்கே
ஒரு தடவை கண் மூடித் திற

*************************************
வீட்டுக்கு பக்கத்தில் கோயில் இல்லை

என்ற கவலை என் அம்மாவுக்கு
எனக்கந்த கவலை இல்லை

எதிர் வீட்டில் நீ இருப்பதால்.

-யாழ்_அகத்தியன்

No comments: