உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால் எனக்கு
காத்திருப்பதில் அதிக சுகம்
*
உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை உன்
தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பம்
*
கவிதைக்காய் காத்திருப்பதில்
கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான்
உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு
கால் வலிக்கிறது
*
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே
என்னைக் காக்க வைத்து விட்டுவரும்
போது கவனம் நீந்த நேரிடலாம்
*
என் கவிதையின் கண்ணீரில்
இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்
*
காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்
கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ
*
உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது விட்டுத்தான்
போயிருப்பேன்
-யாழ்_அகத்தியன்
Saturday, May 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment