கவிதை எழுதுவதை நிறுத்திவிட
நினைக்கும் போதெல்லாம் உன்
பெயரை எழுதி தொலைக்கிறது
என் பேனா
*
ஒவ்வொரு தூக்கத்திலும் அடிக்கடி
விழிக்க வேண்டி வருகிறது உன்னோடு
தூங்குவதாய் கனவு காண்பதால்
*
குடி குடியைக் கெடுக்கும் என்பதை
எழுதிவிட வேண்டும் உன் உதட்டிலும்
*
காதல் பாடத்தில் இருவருமே
சித்தி அடைந்தோம் மறந்ததில்
நீயும் மறக்காததில் நானும்
*
நான் பயணிக்கும் பாதையெங்கும்
என் கவிதைகளை விதைத்துக்
கொண்டேபோகிறேன் ஏதெனும்
ஒன்றிலாவது நீ இழப்பாறுவாய்
என்ற நம்பிக்கையில்
*
யாரவது எனக்கு எழுந்து நின்று
இடம் தர மாட்டார்களா என
உதைக்கிறது உன் நினைவு
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment