Monday, May 7, 2007

இனியவளே…! [14]

தயவுசெய்து எனக்குமுன் கண்மூடி
கடவுளை கும்பிடாதே உனை
பிரிந்துவாழ பழகிக்கொண்டுவிடுவேன்

***
என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டு

எதற்காக எதிர்கால உன் புருசனுக்காய்
ரொம்ப நேரம் வேண்டுகிறாய்

****
நவக்கிரகத்தை சுற்றி வந்தேன்

உன்னை காணவேண்டுமென்று
உன்னை சுற்றி வருகிறேன் நீ
கிடைக்க வேண்டுமென்று

****

பார் உன் வரவை அறியாத பக்தர்கள்
எவ்வளவு பூக்களோடு வருகிறார்களென்று

***
உனை கண்டவுடன் கண்மூடி

கும்பிட பயமாக இருக்கிறது
நீ காணாமல் போய்விடுவாயோ என

****
நீயே சொல் உன்னை முன்னுக்கு

வைத்துக்கொண்டு எதை நான்
வேண்டமுடியும் இறைவனிடம்

****
நீ எதற்கு வேண்டுமென்றாலும்

நேத்தி வைத்துக்கொள் தயவுசெய்து
எதிர்ப்பின்றி நாம் சேரவேண்டுமென்று
நேத்திவைக்காதே

-யாழ்_அகத்தியன்

No comments: