கோயிலுக்கு போனாலாவது உன்னை
ஞாபகப்படுத்த எதுவும் இருக்காது
என்றுதானிருந்தேன் ஏனோ என்னை
கண்டதும் குருக்கள் உந்தன் பெயரில்
உள்ள மந்திரத்தையே திரும்ப திரும்ப
சொல்கிறார்
************
உன்னை சந்திக்க பேருந்தில்தான்
வருகிறேன் ஏதோ நான் விமானத்தில்
வருவது போல் இடுப்புபட்டியை தேடுகிறேன்
**************
எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்
****************
உன்னை சந்திக்கும் போது
கருக்கொள்கிறது உன்னை
பிரியும்போது கவிதையாய்
பிறக்கிறது
****************
தயவு செய்து என்னை கவிஞன்
என்று உண்மை சொல்லாதே கிறுக்கன்
என்று பொய் சொல்லிவிடு அது போதும்
எனக்கு நான் பொய் சொல்லாதவன்
என்று நீ நம்பிவிட
*************
நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும்
நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும் எங்கிருந்துவந்தாய்
நீ_என் நிம்மதியாகவும் என் ஆயிரம்
உறவுகளின் சொந்தகாரியாகவும்
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment