Monday, May 7, 2007

இனியவளே…! [7]

என்னோடு நடந்து வந்த
நட்பு ஏன் உன்னைக் கண்டதும்
ஓடிஒழிகிறது ஓ… அவ்வளவு
பயமா காதலுக்கு

*
காதலைக் காட்டிக் கொடுக்காதேயேன்று

அதிகமாய் என்னிடம் உன்னைப் பார்க்கும்
போதுதான் குட்டு வாங்கிகிறது என் மனம்
*
நீ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்

சொல்ல தயங்குகிறேன் என்முதல்
கவிதை உன் பெயர் என்று

*
ஒரு காதல் பறவை என் மேல்

உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறது
என் நட்பென்ற தொடர் நாடகத்தை.

-யாழ்_அகத்தியன்

No comments: