Thursday, May 10, 2007

கவியானேன் நான்!

நீ சிரிக்க மறந்த உன் புகைப்படம்
மீது ஒரு கவிதை எழுதினேன் என்ன
அதிசயம்உன் கன்னக் குழிக்குள்ளே
காணாமல் போனதுஎன் கவிதை

*
தினம் ஒரு கவி எழுதி உன்னைத்

தேட விட்டேன் எல்லாமே களைப்பில்
உன் ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது

*
மது போதையிலும் எழுதி முடித்தேன்
உன் பெயரை தலைகிழாக என் கவிதையாய்

*
என் கவிதைகள் எல்லாமே எழுதிய
என்னை விசாரிக்க வைப்பதைவிட
உன்னைத்தான் அதிகம் விசாரிக்க வைக்கிறது

*
எனக்கு பிறக்கும் கவிதைகள் எல்லாத்தையும்

நீ வாழவைக்க ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு கூட்டிச்செல்

-யாழ்_அகத்தியன்

No comments: