Monday, May 7, 2007

இனியவளே…! [9]

இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று என்ன அதிசயம்

பூவான உனைக் கண்டவுடன்
எல்லாபூக்களும் சிரிக்கிறது

***************************
அழகான பூவாக இருந்தாலும்
பூக்கடையில் பூவாங்க பிடிக்காது
அவர்கள் யாரை நினைத்து

பறித்தார்களோ யாருக்கு தெரியும்

*************************

தயவு செய்துஎன்னை கவிஞன்
என்று எப்போதும் ஏற்றுக்கொள்ளாதே

ஏனெனில்

ஒவ்வொரு தடவையும் நான்
உண்மை சொல்லும்போதும்
உன்னிடம் உண்மைசொல்லவாவென
கேட்டு விட்டுசொல்ல வேண்டி வரும்

***********************
என் நம்பிக்கைதான் நீ என்று சொன்ன
பின்னும் உன் வாழ்க்கையை தர மறுத்தால்
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது பொய்த்து
விடுமல்லவா நீயே சொல்…….

-யாழ்_அகத்தியன்

No comments: