Monday, May 7, 2007

இனியவளே…! [4]

இனியவளே…

என் இறந்த காலம் மிக சோகமானது
அதை மறக்க வைக்க இறைவன்
கொடுத்த நிகழ்காலம்தான்
நீ எனக்கு

**********************************
நான்பொய் சொல்லவிரும்பவில்லை
உன்னை ஞாபகப்படுத்த

உன் புகைப்படம் வேண்டாம்
உன் புன்னகையும் வேண்டாம்
உன் கவிதையும் வேண்டாம்

ஏன்.... உன் நினைவும் வேண்டாம்

உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்க எதுவாலும் முடியாது
உன்னைத்தவிர எனக்கு

*********************************
இதுவரை நான் அசிங்கமானவன்

என்று சந்தோசப்பட்டதில்லை நீ
அழகானவன் என்று சொல்லும் வரை

***********************************
நான் உன் கவிதையின் ரசிகன்

அதனால்தான் சொல்கிறேன் இன்றே
இறந்து போக தயார்அடுத்த நொடியே
நான் உன்பேனாவாக பிறப்பேன் என்ற
உறுதி மொழி கிடைக்குமென்றால்.

-யாழ்_அகத்தியன்

No comments: