Monday, May 7, 2007

இனியவளே…! [5]

இனியவளே…

உன்னோடு பேசிவிட்டு கனவு
காண்கிறது என் கைபேசி

நானோ பேசிக்கொண்டே
தானிருக்கிறேன் இன்னும்
உன்னோடு பேசுவதாய் நினைத்து

**************************************
பகலில் சந்தித்தால் திரும்பி திரும்பிபாக்கிறாய்
இரவில் சந்தித்தால் என்னையே பாக்கிறாய்
அவ்வளவு மரியாதையா உன் நிழல் மீது உனக்கு

**************************************
மது அருந்திவிட்டு கார் ஓடக்கூடாதாமே

எங்கே உன் கைக்குட்டையை கொடு
சந்தியில் பொலிஸ் நிக்கிறான் என்

உதட்டில் உன் எச்சிலைப் பார்தால்
பிடித்து விடுவான்

**************************************
என்புத்தகத்தினுல்உறங்கும் என் பேனா

போல் உறங்கிகிறேன் உனக்காய்
கவிதைஎழுதுவதாய்கனவு கண்டபடி.

-யாழ்_அகத்தியன்

No comments: