Monday, May 7, 2007

உனக்கே நான்

ஒழிந்து திரியும் காதலை தேடித்தான்
திரிந்தேன் யார் யாரோ முகத்தில்_ அது
உன் இதயத்தில் மறைந்திருந்ததை நீ
காட்டிக் கொடுக்கும் வரை

*
உன்னைத் தேடித்தான் உலகம் சுற்றப்
புறப்பட்டேன் என்ன அதிசயம் என் வீட்டு
வாசலிலே உன்னை இறக்கி விட்டுப் போனது
நீ சுற்றி வந்த தெய்வம்

*
உன்னை வைத்துக் கொண்டு உலகம்

சுற்றிய களைப்பில்த்தான் புரிந்து கொண்டேன்
உன்னை விட யாரும் எனக்கு பொருத்தமில்லை
என்பதை

*
என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க
யார் யாரோமுயற்சித்தார்கள் இறுதியில்
நீதான் சிறைப்பிடித்தாய் கைதியாயல்ல
உன் காதலனாய் உன் கணவனாய்
ஆதலால் உனக்கே உரியவன் நான்.

-யாழ்_அகத்தியன்

No comments: