Monday, May 7, 2007

இனியவளே…! [8]

ஆகா… இன்று உன்பார்வையே சரியில்லையே
ஓ… நம்ம கல்யாணத்தைப்பற்றி பேச போறியா?

*
நாளை முதல் கதைக்க மாட்டேன் என்கிறாய்

தினமும் கதைத்துக் கொண்டே ஓ…..நீயும்
பரம்பரைக் குடிகாரியா?

*
என்னை விட்டு விலகிடு
என்கிறேன் முடியாதென்கிறாய்
அப்படியென்றால் நீ என் உயிரா?
மரணத்தால் மட்டுமே உன்னை பிரிந்து விட
*
என்னவளே உனக்கு தெரிய வேண்டுமா?

உன் பார்வையின் வலிமை என்னவென்று
அப்படியே உன் வீட்டு கண்ணாடியை நானாக
நினைத்து ஒரு தடவை பார் அது உடையும்
வடிவில் தெரிந்து கொள்வாய்.

-யாழ்_அகத்தியன்

No comments: