Monday, May 7, 2007

இனியவளே…! [2]

இனியவளே…

என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா
உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி
தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான்
எனக்கு கோவம் வருமென்று

***********************************
நமக்குள் பிரிவே வரக்கூடாது

அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது
ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக
நீ இருந்துவிட கூடாதென்பதால்

***********************************
உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான்

யோசித்தேன் எப்படிநுழைவதென்று
நுழைந்தபின் மறந்தேபோனேன்

எப்படி யோசித்து நுழைந்தேனென்று

***********************************
கவிதைகள் எழுதத்தெரியுமா

என்று கேட்டார்கள்

நான் தெரியாது
என்றேன்.

அப்ப என்ன தெரியுமென்று
கேட்டார்கள்

கவிதை ஒன்று
தெரியுமென்றேன்.

எங்கே சொல் என்றார்கள்

உன் பெயரைச்
சொல்லி முடித்தேன்.

-யாழ்_அகத்தியன்

No comments: