Monday, May 7, 2007

இனியவளே…! [3]

இனியவளே..

உனக்கு காதலனாய் பிறந்ததை விட
உன் காதலாக பிறந்திருக்கலாம்
அப்படியென்றாலாவது உன்னோடு சேர்ந்து

உன் கூட வாழ்ந்திருக்கலாம்.

***********************************
கவனமாய் கார் ஓடு உன்னை கொஞ்ச

நேரமாவது காற்று வாங்க வைக்க
ஏதேனும்ஒரு சந்தியில் சிக்னல்
விளக்காய் காத்திருப்பேன்.

***********************************
உன்னைப் பார்த்தால் மட்டும்

என் கவிதைகள் கண்ணாடிபோடுகிறது
ஏனுங்க..
ம்ம்..உனக்காய் காத்திருந்து என்னைப்போல்

என் கவிதைகளுக்கும் கண்தெரியாமல்
போய் விட்டது போல

**********************************
உன்தொலைபேசிக்கு எனக்காக

நீ கொடுத்த முத்தத்தால் ரொம்ப
கவலைப்படுகிறது என் தொலைபேசி
உன் தொலை பேசியாய்

பிறந்திருக்கலாமெயேன்று.

-யாழ்_அகத்தியன்

No comments: