என்னைக் கோவப் படுத்தியதுக்காக
உன் மேல் நீ கோவப்படுகிறாய்
உன்னைக் கோவப் படுத்தியதுக்காக
என் கோவத்தை வெறுக்கிறேன்
*
என்னால் உன் கோவங்களை
புரிந்து கொள்ள முடிவதில்லை
ஒரு விதத்தில் அதுவும் உதவி
செய்கிறது எனக்கு ஆங்கிலம்
புரியாததால்
*
உன் கோவத்தை என் மேல் இறக்கி
வைத்துவிட்டு போய் விடுவாய் பாவம்
நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க
*
உன் ஆசையை காட்டுவதற்காக
இப்பிடியா வார வாரம் என் கூட
கோவம் போட்டு பேசாமல்
விடுகிறாய் சில தினங்கள்
*
உன்னை அழகாய் எனக்கு காட்ட
விரும்புகிறாய் என்றால் சொல்லி
இருக்கலாமே உனக்கு விரும்பிய
அழகுசாதனப்பொருட்கள் வாங்கி
தந்திருப்பேனே அதை விட்டுட்டு
ஏன் என் மேல் அடிக்கடி கோவித்துக்
காட்டுகிறாய்
*
உன் கோவங்களை விதைப்பதற்கு
என் மனசா கிடைத்தது பாவம் அது
வளர என் கண்ணிரைக் கடன் கேக்கிறது
*
இதுவரை நீ என்னோடு கோவித்தது மீது
எனக்கு சந்தேகம் வந்ததில்லை கடைசியாக
நீ என்னோடு கோவப்பட்டதில் தான் சந்தேகம்
ஏனெனில் உன் கோபத்தை நான் கவிதையாக்கி
இருக்கிறேனே
-யாழ்_அகத்தியன்
Monday, May 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment