Sunday, May 13, 2007

அன்னையர் தின கவிதை



















உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு

ஆனாலும்

அவள் கைவிரலில்
உன் கைவாசம்

நீ பிடித்து தந்தவள்
அல்லவா..

*

என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி

ஆனாலும்

பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்

*

உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்

என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்

-யாழ்_அகத்தியன்

1 comment:

மே. இசக்கிமுத்து said...

அருமையான சமர்ப்பணம் அன்னைக்கு!! அருமை நண்பரே!