Thursday, May 10, 2007

கவியானவளே… [04]

தன்னை அணைக்காமல் உன்னை
அணைத்துக் கொண்டதற்காய்
இன்னும் அழுதுகொண்டே
இருக்கிறது மெழுகுவத்தி

*
கால்களைக் காப்பாற்றித் தந்த எங்களை

கழட்டி விட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றச்சொல்லி
கோயிலுக்குள் பக்தகோடிகள்

*
கழித்த கல்லும் அத்திவாரத்துக்கு தேவைப்படும்

கவனம் என்பதை உனக்கு மாப்பிள்ளையானபோது
தெரிந்து கொண்டேன்

*
என் கவிதைத் திருடியை தாலி கொண்டு

சிறைப்பிடித்தேன் என் மனைவியாக
*
நான் எழுதிய கவிதை இல்லை

ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக்
கொண்டேன் உன் பெயரை

-யாழ்_அகத்தியன்

No comments: