Saturday, May 12, 2007

காத்திருப்பு!

உனக்காய் காத்திருந்து நிலவு
கூட பகலில் வந்து விட்டது
பகல் நிலவாய் இன்னும் நீதான்
வரவில்லை

*
காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு
சுகமா அதைவிட சுகம் உனக்காய்
காத்திருப்பதில்

*
உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்
நீ வரும் பாதை கூட உன்னை போல்
அழகாக வெக்கப்படுகிறது

*
உனக்காய் காத்திருந்து இறந்து போக
ஆசைதான் உனக்காக கவிதைகள்
பிறக்காமல் போகுமென்றால்

*
உனக்காய் காத்திருந்து
நான் வாடிப் போகவில்லை
என் கவிதைகளுக்குத்தான்
தாடி முளைக்கிறது

*
நீ தாமதமாய் வரும்வரை எப்படி
சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது

*
என்னைக் காக்க வைக்க வேண்டும்
என்பதற்காக தயவு செய்து வராமல்
விட்டு விட்டாதே என் பேனா ஒரே
நாளிளே இறந்து போய்விடும்

*
உன்னைக் கண்டால் போதும்
எனக்கு முன் ஓடி வரும் என்
கவிதைகள்

*
எங்கே உன்னைக் காணவில்லை
இன்னும் என் பின்னால் என் கவிதைகள்

*
என் கவிதை கேக்கவே நீ தாமதமாய்
வருவாய் அதற்காகவே வந்துவிடும்
ஆயிரம் கவிதைகள்

*
நீ
இனி வரவேமாட்டாய் என்று
முடிவெடுத்த பின் தான் தினம்
வருவாய் இன்று முடிவெடுத்தபின்தான்
காத்திருக்கிறேன் வரவே மாட்டாயா

*
உனக்காய்க் காத்திருக்கும் என் நேரம்
முடிந்துவிட்டது இனியும் காத்திருந்தால்
அது என் கவிதைகளுக்காகத்தான்

-யாழ்_அகத்தியன்

1 comment:

selventhiran said...

வணக்கம் கவிஞரே...! காதல் கவிதைகளில் பிரமாதப்படுத்துகிறீர்கள். தபூசங்கர் மாதிரி புகுந்து புறப்படுங்க... சமயம் கிடைச்சா நம்ம ஏரியா www.selventhiran.blogspot.com பக்கம் ஒரு நடை வந்துட்டுபோங்க..