என் பிரியமானவளே!
என் உள்ளம் குளிருகையில் உன்னை
நினைத்தால் என் உருவம் வேர்க்கிறது.
எதற்காக உன் முகத்திரையை என்
கண்களில் ஒட்டி விட்டுப் போனாய்?
என்னவளே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும் ஓரு வார்த்தையின்
வடிவில் ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?
உன் புன்னகையையும் உன்
பார்வையையும் எப்படி உன்னால்
ஒரே அழகி ல்ஒரே நேரத்தில்
புரிய முடிகிறது.
உன்னால் மட்டுமே என் பேனாவை
பூட்டி விட முடியும் என்று தெரிந்தும்
ஏன் பூட்டை மட்டும் தொலைத்தாய்?
நெஞ்சுக்குள் ஆசைகளை வைத்துக்
கொண்டுநாக்கில் மட்டும் எப்படி
ஆண்மீகம் பேசுகிறாய்?
உன் முதல் பார்வைஎன்னைச்
சுட்டது உன் முதல் புன்னகை
என்னைக் காப்பாற்றியது
பிரியமானவளே!
என்னை மட்டும் திருடி விடத் தீர்மானமா?
இல்லைஎன்னையும் கவிஞனாக்கத் திட்டமா?
என்ன செய்யப் போகிறாய்?
என்னாலும் என் கவிதையாலும்சென்று விட
முடியாத தேசத்துக்கு உன்னால் சென்று விட முடியும்.
நீ என்னை மறந்து விடகாற்றில்லாத
கிரகத்துக்குச் சென்றாலும் உன் காதல்
என்னைச் சுவாசித்து அங்கும் உன்
உயிரைக் காப்பாற்றும்!
காதலை மறைக்க முயற்சிக்கலாம்
மறந்து விட முடியாது
பிரியமானவளே!
என்னை மறந்து நீ தூங்கினால்
கனவால் விழிக்க வைப்பேன்
நீ என்னை மறந்து உன்னை
மட்டும் நினைத்தால்
நீ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும்
என்னை ஞாபகப்படுத்தி நினைவூட்டுவேன்.
என் பிரியமானவளே!
என்னை அழித்துவிட உன்னால் முடியும்
என் காதலைஅழித்துவிட யாராலும் முடியாது.
மரணத்தைப் போலவே
என் காதலும் நிலையானது!
-யாழ்_அகத்தியன்
Tuesday, May 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
"உன் முதல் பார்வைஎன்னைச்
சுட்டது உன் முதல் புன்னகை
என்னைக் காப்பாற்றியது"
அருமை
"காதலை மறைக்க முயற்சிக்கலாம்
மறந்து விட முடியாது"
உண்மை
"என்னை அழித்துவிட உன்னால் முடியும்
என் காதலைஅழித்துவிட யாராலும் முடியாது.
மரணத்தைப் போலவே
என் காதலும் நிலையானது!"
உன்னதமான காதலைப் ப்ற்றி எழுதும் போது ஏன் மரணத்தைப் ப்ற்றி நினைக்க வேண்டும்???
Post a Comment