Friday, January 11, 2008

இயல்பானவளே..!

தன்னை விதைத்து
காதலை
எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்

காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும்

என் மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்

*

நீ என்னை மட்டும்
உன்
வசப்படுத்தவில்லை
என் கவி
வாசகர்களையும்தான்

பார்
கவி எழுதிய என்னை
விசாரிக்காமல் எல்லாரும்
யாருக்காக எழுதியது என்று
உன்னை விசாரிப்பதை

*
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட

யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்

வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

*
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்

முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்

ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்

*
என்றும் உன் அருகே
நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம்
கிடைக்காமல் போனாலும்

உன் கால்தடங்கள் தேடியே
ஓடிவரப்போகும் உன்
குழந்தையாகும் வரம்கொடு

அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு


-யாழ்_அகத்தியன்

2 comments:

மாறன் said...

அழகான சொற் சேர்ப்பு ஏன் உங்கள் காதல் மட்டும் பிழையாய் போனது
சொற்களுக்கு உயிர் கொடுக்கிறீர்கள்
உண்மையில் உயிர் உள்ள கவிதை இது ….உங்கள் காதல் உயிர் பெறட்டும்

நன்றாக இருக்கிறது

மே. இசக்கிமுத்து said...

அருமையான காதல் கவிதை!! காதல் வாழ்க!!